Headlines News :
Home » » மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 140 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மைக்கல்வோக் - 2013 ( Mike Walk) நடைபவனி

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 140 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மைக்கல்வோக் - 2013 ( Mike Walk) நடைபவனி

Written By sakara on Saturday, September 28, 2013 | 9:05 AM

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மைக்கல்வோக் - 2013 ( Mike Walk)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 140 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட ' மைக்கல்வோக்- 2013'  இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் ஆசியுடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் இதை ஏற்பாடு செய்திருந்தனர்.

பாடசாலையில் இருந்து ஆரம்பமான பேரணி மைக்கல் தேசிய பாடசாலை இதுவரையில் வெற்றி பெற்ற கிண்ணங்களையும் மற்றும் விருதுகளையும் தாங்கிய இரு வாகன ஊர்திகள் நகர மணிக்கூட்டுக்கோபுரம், திருமலை வீதி வழியாக கோப் இன் விடுதிவரை சென்று திரும்பியது.

இரண்டாவது முறையாக மட்டக்களப்பு நகரில் இவ் ஊர்வலம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.






Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info