Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label மட்டக்களப்பு. Show all posts
    Showing posts with label மட்டக்களப்பு. Show all posts

    வரலாற்றில் முஸ்லிம் பெண்ணும் இராணுவத்தில் மட்டக்களப்கைச்சேர்ந்த பிரிகேடியர் ரமேஸ் பிரதம அதிதி

    0
    கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் யுவதியொருவர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தில் இணைந்துள்ளார்.
    அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார்.
    இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர். இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில்  நடைபெற்றது.
    இவ்விழாவில், பிரிகேடியர் சண்முகநாதன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இராணுவ வீராங்கணைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார்.கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் 16 பேரும், மட்டக்களப்பில் 15 பேரும், அம்பாறையில் 5 பேரும் இப்பயிற்சிநெறியை நிறைவு செய்துள்ளனர்.

    கொக்கட்டிச்சோலையில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் முறுகல்

    மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்று மாலை ஏற்பட்ட மோதலில் பொலிஸ் ஜீப் வண்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. (sr)tm138

    மட்டக்களப்பு லோகிதரகஜா தீபாகரன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

    மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வரயத்துக்கான சமாதான நீதவானாக மட்டக்களப்பு லோகிதரகஜா தீபாகரன் மட்டக்களப்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா  முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

    இவர் நல்லதம்பி லோகிதராஜா லோகிதராஜா பாக்கியவதி ஆகியோரின் இளைய புதல்வராவார் 

    ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு விஜயபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் புனித மிக்கேல் பழைய மாணவரும் பேராதனைப்பல்கலைக் கழகத்தில் கலைமானி (BA) முதுமாணி (MA) டிப்ளோமா பட்டங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அத்துடன் யோகா ஆரோக்கிய இளைஞர் கழக உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்க செயலாளரும் ஏறாவூர் பிரதேச செயலக  அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் இருந்து வருகிறார்.

    450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் 450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி நவீன வசிதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

    கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் தனியான  கட்டிடத்தில்  4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

    இவ் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் உட்பட பொறியியலாளர்கள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் 07-05-2014 இன்று புதன்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இப் புற்று நோய் வைத்தியசாலை மட்டக்களப்பில் திறக்கபடுவதால் மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணாமலை ஆகிய மாவட்ட மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

    4 மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுவரும் இப் புற்று நோய் வைத்தியசாலையில் வெளி நோயளர் சிகிச்சை பிரிவும், 80 பேர் தங்கி சிகிச்சை பெரும் விடுதி வசதியும், 10 பேர் தங்கி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் வசதியும் இதில் உள்ளதாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

    இங்கு அமைக்கப்பட்டுவரும் புற்று நோய் வைத்தியசாலை போன்று இலங்கையில் மஹரகம,கண்டி,காலி கராப்பிடிய,யாழ்ப்பாணம் போன்ற பல்வேறு வைத்திய சாலைகளில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    தற்போது இப் பிரதேசத்திலுள்ள நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக வௌி மாவட்டங்களான கண்டி,மஹரகம போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு

    கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு இன்று  கல்லடிகிறீன் கார்டன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதில் அண்மையில் நடைபெற்ற அசாதாரண விடயங்களா பற்றி ஊடகங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

    அதன் எழுத்து வடிவம் 

    கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஊடக சந்திப்பு - 07.05.2014

    பல்கலைக்கழகத்தில் மாணவர் செயற்பாடுகளையும் மாணவர் ஒன்றியத்தையும் முடக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து மாணவர் நலனில் அக்கறை செலுத்தாமல் தனது ஆதாயத்துக்காக  உபவேந்தர் செயற்பட்டு வருவது கண்கூடாக தெரிகிறது.

    கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பாரிய அபிவிருத்தி நடைபெறுவதாக வெளித்தோற்றத்தை காட்டுகிறார். ஆனால் இந்த பல்கலக்கழகத்தில் நடைபெறுவது என்ன?
    பல்கலைக்கழக அபிவிருத்தி என்பது எதனில் தங்கியுள்ளது 
    மாணவர்களின் கல்வித்தரத்திலா இல்லை புதிதாக திறக்கப்படும் கட்டிடங்களிலா? இங்கே உதாரணமாக கலை கலாசார பீட மாணவர்களின் விரிவுரைகளுக்கு இருந்து கல்விகற்க அத்தனை மாணவர்களுக்கும் வைத்து எழுத கதிரைகள் இல்லை, செயன்முறை வகுப்புகள் ஒரே வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு அல்லது நான்கு பிரிவுகளாகவே பிரித்து கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றது இவற்றுக்கு மேலாக யுத்த கால கிழக்கு பல்கலைக்கழக நடைமுறைகளை போலவே தற்பொழுதும் மூன்று வருட  கல்வி செயற்பாடுகள் நான்கு வருடங்களாகவும் நான்கு வருட கல்வி செயற்பாடுகள் ஐந்து வருடங்களாகவும் நடைபெறுகின்றது இவற்றிலே எங்கே கடந்த இரண்டு வருடங்களாக பல்கலைக்கழகத்தில் பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது?

    அரசாங்கம் பாரிய நிதியை வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக ஒதுக்குகிறது.   அத்துடன் கிழக்கு பல்கலைக்கழத்துக்காக கணிசமான நிதியை உயர்கல்வி  அமைச்சு ஒதுக்கி உள்ளது. இதை எந்த உப வேந்தர் இருப்பினும் அரசாங்கம் செய்யும். இதில் எந்த ஒரு நிதியும் தற்போதைய உபவேந்தர் அவர்களால் வெளி இடங்களில் இருந்து கொண்டுவரப்படதில்லை அனைத்துமே அரசாங்கம் ஒதுக்கிய நிதி.

    இவ்வாறு இருக்க இந்த உபவேந்தர் வந்ததால்தான் பல்கலைக்கழகத்துக்கு கட்டிடங்களே வந்தது என்றும் இவர் இல்லை எனில் அபிவிருத்தியே இல்லை எனவும் பொது மக்களை நம்ப வைத்து தான் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் ஊழலுக்கும் அபிவிருத்தி எனும் சாயம் பூசுகிறார்.
    இவற்றை தட்டி கேட்க போகும் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களை அடியோடு வேரறுக்க நினைக்கிறார். முதலில் விரிவுரையாளர்கள் பழிவாங்கப்பட்டனர் பின்னர் ஊழியர்கள் தற்பொழுது தங்கள் உரிமையை கேட்கப்போன மாணவர்கள்.  

    அதிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளை பகிரங்கமாக அறிவித்த பின்னரே  அவர் அதற்கு உரிய  ஒழுக்காற்று குழுவை கூட்டுகிறார் அதற்கு தற்போதைய உதாரணம் அவரை தாக்கியதாக பழி சுமத்தி விட்டு குறித்த மாணவரின் மாணவர் பதிவை ரத்து செய்து காட்டுகிறேன் என்று பகிரங்கமாக கூறி இருப்பதானது தனி மனித பழிவாங்கல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின்  இறுதி வடிவமாகும்.

    கடந்த மாதம் 3௦ ம் திகதி 2ம் 3ம் வருட மாணவர்களுக்கு கல்வி  நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் மற்றும், ஏற்கனவே அனுமதி கேட்கப்பட்டு மறுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கிடையான விளையாட்டு போட்டிகளில் பங்குபற்ற அனுமதி வேண்டும் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி எமது பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த போது எதற்காக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பொது மாணவர் சங்கத்தை கலைத்தது எதற்காக என்ற கேள்விகளை முன்வைத்து அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டமே நடத்தப்பட்டது இது மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும் .

    ஒரு நாள் முழுக்க நின்றும் தன்னை சந்திக்க மறுத்த உபவேந்தர் நான்கு மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்து ஒரு திட்டமிட்ட பழிவாங்கல் முயற்சியை மேற்கொண்டார்
    நான்கு மாணவர்களுக்கும் வகுப்பு தடை விதிப்பதாக கூறிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
    “ஆரம்பக்கட்ட விசாரணையின் பொது நீங்கள் குற்றம் இழைக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளீர்
    1.    பல்கலைக்கழக நிர்வாகத்தை குழப்பியதோடு பல்கலைக்கழகத்தில்  இடம்பெற்ற ஒரு அனுமதிக்கப்பட்ட நிகழ்வினை குழப்பியமை
    2.    பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளே, வெளியே இருந்தும் குழப்பியமை”
    ஆனால் எந்தவொரு விசாரணையும் நால்வருக்கும் நடத்தப்படவில்லை, அத்துடன் அன்றைய தினம் பல்கலைக்கழக நிகழ்வானது எந்த வகையிலும் குழப்பப்படவில்லை. அதற்கு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளே சாட்சி. அன்றைய தினம் உபவேந்தர் திட்டமிட்ட வகையில் பழிதீர்க்கும் விதமாக மாணவர் தலைவர்களை இனங்கண்டு வகுப்புத்தடை விதித்துள்ளார் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள்
    1.    மாணவர் ஒன்றிய தலைவர்
    2.    கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர்
    3.    வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்துக்கு தலைவராக முன்மொழியப்பட்ட மாணவன்
    4.    வர்த்தக முகாமைத்துவ பீட “பீட அவை” மாணவர் பிரதிநிதி ஆகியோர் ஆவார்.   
             
    இதனை அறிந்த மாணவர்கள் அடுத்த நாள் சிரேஷ்ட மாணவர் ஆலோசகரிடம் மேற்குறிப்பிடப்பட்ட நான்கு மாணவர்களுக்குரிய வகுப்புத்தடை உத்தரவை மீள பெறுமாறு அனைத்து மாணவர்களும் கையொப்பம் இட்டு கோரிக்கை ஒன்றை கையளித்த பொழுது அது தொடர்பாக உபவேந்தரிடம் கலந்துரையாடிய சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் உபவேந்தர் கூறியதாக பின்வரும் மூன்று நிபந்தனைகளை முன்வைத்தார்.

    1.    ஊடகங்களுக்கு வழங்கிய தவறான செய்திகளுக்கு ஊடகங்களூடாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்
    2.    அனைத்து மாணவர்களும் தன்னிடம் கையொப்பம் மூலமாக மன்னிப்பு கேட்க வேண்டும்
    3.    இவை இரண்டும் இடம்பெற்றாலும் குறிப்பிட்ட நான்கு மாணவர்களுக்கும் ஒரு வருடத்துக்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என கூறினார்.
    இதனை அடுத்து சம்மந்தப்பட்ட நான்கு மாணவர்களும் தங்கள் வகுப்புத்தடை தொடர்பாக மீள்பரிசீலனை செய்யுமாறு உப வேந்தருக்கு கடிதம் ஒன்றை எழுதி சிரேஷ்ட மாணவர் ஆலோசகரிடம் கொடுத்தனர் ஆயினும் உடனடியாக தன்னால் பதில் ஏதும் கூற முடியாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் உபவேந்தரை சந்திப்பதற்காக உபவேந்தர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆயினும் காவலாளிகள் மாணவர்களை உள்ளே செல்லாது வாயில் கதவுகளை பூட்டினர்.பின்னர் மாணவர்கள் பலவந்தமாக உள்நுழைய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன்பிறகும் மூதவை கட்டட தொகுதியில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்தும் உபவேந்தரை சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கிடையில் தொடர்பாளர்களாக அங்கே குவிக்கப்பட்ட போலீசாரே செயற்பட்டனர். பலமுறை போலீசார் உபவேந்தரை எங்களுடன் பேசவைக்க மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டும்  உபவேந்தரினால் அது  நிராகரிக்கப்பட்டது அத்துடன் உபவேந்தர் மாணவர்களை சந்திப்பதை விரும்பவில்லை என தலைமை போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.   

    ஆயினும் மாணவர்கள் கலைந்து செல்லாது தாம் உபவேந்தரை சந்தித்தே செல்வோம் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். மீண்டும் மேலதிக போலீசார் குமிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் உப வேந்தர் வீட்டுக்கு செல்ல அழைத்து செல்லப்பட்டார்.

    இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர் ஒன்றிய தலைவர் தன்னை தாக்கியதாக வீண்பழி சுமத்தியது வேதனைக்குரிய விடயமாகும். நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் உபவேந்தரை தாக்கியதாக கூறுவது சாத்தியமற்றதுடன் அவரை தாக்கியதாக கூறி குறிப்பிட்ட இறுக்கமான சூழ்நிலையை பயன்படுத்தி தன்னை தாக்கியதாக கூறுவதானது தனிப்பட்ட பழிவாங்கல் என்பது தெட்டதெளிவாக தெரிகிறது.
    இவ்வாறான செய்திகளை கூறுவதால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பற்றிய பிழையான அபிப்பிராயங்களை சமூகத்தின் மீது உபவேந்தர் விதைத்துள்ளார்.

    இவ்வாறான பழிவாங்கல் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறும் வரை மாணவர்கள் ஓய மாட்டார்கள்.

    இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் உபவேந்தர் சிங்கப்பூர் சென்றுள்ளார் இது எவ்வகையில் சரியானதாகும். இந்த செயற்பாடானது உபவேந்தரின் பல்கலைக்கழகத்தின் மீதான பொறுப்புணர்வுக்கு ஐயப்பாடை ஏற்படுத்துகிறது.  .
         

    மட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் வாத்தியார்..

    இவர்களை மட்டக்களுப்பு பொலிஸார் வியாழக்கிழமை(1) காலையில் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.  இதனையடுத்து மாணவியை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அந்நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இந்நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

    அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 15 வயது மாணவியுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 வயது நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா வியாழக்கிழமை (1) உத்தரவிட்டார்.

    இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

    மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவருடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனையறிந்த பெற்றோர் குறித்த மாணவியை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைத்துள்ளனர்.

    இந்நிலையில் குறித்த மாணவி புதன்கிழமை (30) காலை பாடசாலை செல்வதாக கூறி குறித்த நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இடையில் நண்பர் ஒருவரின் வீட்டில் பாடசாலை சீருடையை மாற்றிவிட்டு; மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்கரைக்குச் சென்று காதல் லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மட்டக்களப்பு நகர பொலிஸாரால் மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

    வாகரை மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

    வாகரை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவனான செல்வன் ரஜித்காந் இன்று 2.30 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 18 வயதையுடைய குறிப்பிட்ட மாணவன் க.பொ.த.சாதாரணதர வகுப்பு மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    களவாக கொண்டு சென்ற 30 எருமை மாடுகள் மீட்பு

    களவாக கொண்டு சென்ற 30 எருமை மாடுகள் மீட்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 30 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. 

    நேற்று திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணியில் இருந்து கொண்டுசெல்லப்படும்போது இந்த எருமை மாடுகள் மீட்கப்பட்டன. 

    இவற்றினை இறைச்சிக்காக கொண்டுசென்றிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான ஆவணங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்னர். 

    மீட்கப்பட்ட மாடுகளை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

    மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பிக்க அனுமதி

    மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய டிப்ளோமா கற்கை நெறிகள் ஆரம்பிப்பதற்கு தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. 

    இக்கற்கை நெறியினை மேற்கொள்வதற்கு சிவில் ஆய்வுகூடம் அவசியமாக தேவைப்படுகின்ற காரணத்தினால் இதற்கான கோரிக்கை அடங்கிய மகஜர் அண்மையில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எம்.எம் சார்ள்ஸ் அவர்களிடம் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

    இதற்கான ஒழுங்கமைப்பினை மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபர் ச.தியாகராசாவினால் மேற்கொள்ளப்பட்டது. 

    இதன்போது சிவில் ஆய்வுகூடம் அமைப்பதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

    மட்டக்களப்பில் வெள்ளையாக மாறி சர்ச்சையில் நஞ்சருந்திய மாணவிகள்

    மட்டக்களப்பில் வெள்ளையாக மாறி சர்ச்சையில் நஞ்சருந்திய மாணவிகள்இரண்டு மாணவிகளுக்கிடையில் இடம் பெற்ற புரிந்துணர்வற்ற நகைச்சுவை உரையடல் இருவரும் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு மாறியுள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

    இரண்டு பேரில் ஒருவரின் முகம் வெள்ளையாக மாறிவருவதனை அவதானித்து வந்த மற்றயமாணவி நகைச்சுவையாக பலபேர்களுக்கு மத்தியில் கிறீம் பூசியதனலேயே அவளின் முகம் வெள்ளையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

    இதனை அவமானம் எனக்கருதிய அம் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக நஞ்சருத்தி இருந்தார்.  இதனை கேள்வியுற்ற மற்றய மாணவி பயத்தின் காரணமாக தனக்கு ஆபத்து வரக்கூடும் எனக் கருதி தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் வீட்டுக்குள் தூக்கிட்டு தொங்கியுள்ளார். தூக்கில் தொங்கிய மாணவியினை அவரின் சாகோதரன் வீட்டின் ஓட்டை உடைத்து உள்சென்று தொங்கிய மாணவியினை காப்பற்றியுள்ளார்

    நஞ்சருந்திய மாணவியை அவரின் உறவினர்கள் இனங்கண்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர் இவர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவை சம்மந்தமான மேலதிக விசாரணைகள் ஏறாவூர் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    கைத்தொழில் புவியியல் நூல் வெளியீடு

    சித்தாண்டி - மாவடிவேம்பு  தவசி லேணிங் சிற்றி கல்வி நிலையத்தில் ஆசிரியர் அக்சயன் அவர்களால் எழுதப்பட்ட மானிடப்புவியியலின் ஒரு பகுதியான கைத்தொழில் புவியியல் எனும்  நூல் நேற்று  (19.04.2014) வெளியிடப்பட்டது.

    "அப்பா" குறும்பட விமர்சனம்

    தாயில்லாத பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து உயர் பதவியை அடைய வைக்க பாடுபடும் தகப்பனின் கதையே இந்த  “அப்பா” குறும்படம் ஆகும்.

    மட் .வின்சென்ற் தேசிய பாடசாலை கிழக்கு மாகாணத்தில் சாதனை

    மட் வின்சென்ற் தேசிய பாடசாலை கடந்த க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் அதிகளவிலானோர் சித்தி பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலே ஒரே தடவையில் அதிகளவிலான மாணவர்கள் விஷேட சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி-கனகசிங்கம் தெரிவித்தார்.

    வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து 18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 18 மாணவர்கள் எட்;டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் 14 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

     இதே வேளை சித்தி பெற்ற மாணவர்களை அதிபர் சந்தித்து பல்கலைக்கழகத்திற்கு

    அனுமதி பெறக்கூடிய பாடங்களை க.பொ.தராதர உயர்தரத்தில் தெரிவு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

    இப்பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வித் திணைக்கள உயரதிகாரிகள்

    அனைவரினதும் சிறப்பான செயற்பாடுகளே இப்பாடசாலையின் வெற்றிக்குக் காரணமென அதிபர் தெரிவித்தார்.







    புறநெகும வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் வழிநடத்தியதில் முதல் இடத்தினை தட்டிக்கொண்ட ஆரையம்பதி பிரதேச சபை

    பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புறநெகும தேசிய வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் செயற்படுத்திய உள்ளுராட்சி மன்றங்களில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆரையம்பதி பிரதேசசபை முதல் இடத்தினைப்பெற்றுள்ளது.

    உலக வங்கியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடாத்திய கணீப்பீட்டின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

    முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட ஆரையம்பதி பிரதேசசபைக்கு நினைவுக்கேடயமும் 50இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசினை ஆரையம்பதி பிரதேசபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டி.பி.விஜயசுந்தரவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

    உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக புறநெகும வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் மக்கள் சிறந்த பயனை அடைவைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தியமையை கருத்தில்கொண்டு இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.




    கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (படங்கள்)

    கிழக்கு பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில், உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

    இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

    காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்த பட்டமளிப்பு விழாவானது மூன்று சுற்றுக்களாக நடைபெற்றது. 

    இதன்போது, 755பேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக உபவேந்தர் தெரிவித்தார். 

    மேலும் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக செயற்பட்ட நான்கு மாணவர்களுக்கு தங்க விருதுகளும், சிறப்பாக செயற்பட்டவர்களில் 10பேர் தெரிவுசெய்யப்பட்டு பண பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் உபவேந்தர் தெரிவித்தார். 

    மட்டக்களப்பு பொதுநூலகத்தில் ஈ.பத்திரிகை - காந்தி பூங்காவில் இலத்திரனியல் விளம்பர பலகை திறந்துவைப்பு

    கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக இலத்திரனியில் விளம்பரப்பலகை மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
     மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரின் பொதுநூலகத்தினையும் காந்திப்பூங்காவையும் இணைக்கும் வகையில் இந்த இலத்திரனியல் விளம்பரப்பலகை அமைக்கப்பட்டுள்ளது.

    இலத்திரனியல் விளம்பரப்பலகை திறப்புக்கு இணைவாக பொதுநூலகத்தில் ஈ.பத்திரிகை பார்வையிடுவதற்கான கணிணி நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.

    ஆசிய அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக கொய்க்கா திட்டத்தின் கீழ் சுமார் 10இலட்சம் ரூபா இதற்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

    இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி ஜொஹான் ரொபட்,சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி லிசா ஹீக்,திட்ட இணைப்பாளர் ஹொருட்னி பிரவுன் மற்றும் சிவில் சமூக பிரநிதிகள்,மாவட்ட வர்த்தக சங்கள் பிரதிநிதிகள்,மாநகரசபையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்வின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு பொதுநூலகத்தின் பத்திரிகை பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஈ பத்திரிகை பகுதி திறந்துவைக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து இலத்திரனியல் விளம்பரப்பலகை திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியும் காண்பிக்கப்பட்டது.

    மட்டக்களப்பு நகரில் உள்ள வியாபாரிகள் தங்களது வியாபார நிலையங்களின் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் பொழுது போக்கும் வகையிலான நிகழ்வுகளை ஒளிபரப்பும் வகையில் இந்த இலத்திரனியல் விளம்பர பலகை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் உதயகுமார் தெரிவித்தார்.

    அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் பெரும் நன்மையாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும் உல்லாசப்பயணிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
























     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info