இலங்கை நிருவாக சேவை வகுப்பு 111 க்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்காக 2010இல் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையிலிருந்து 29பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனா. அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழு இவர்களது தெரிவை அங்கீகரித்துள்ளது. மேற்படி பரீட்சையிலிருந்து தெரிவாகும் இரண்டாவது அணி இதுவாகும். இவர்களில் 24 சிங்களவர்களும் 04 தமிழர்களும் 01 முஸ்லிமும் அடங்குவார்கள். கிருஸ்ணபிள்ளை இளங்குமுதன் (காரைதீவு) ரி.யாகோப் அதிசயராஜ் (திருக்கோவில்) எம்.சுலோசனா(யாழ்ப்பாணம்) எஸ்.யோகராஜா (மட்டக்களப்பு) எம்.எ.சி.அகமட் நசீல் ஆகியோரே தெரிவான சிறுபான்மையினராவர். இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை பரீட்சை எடுத்த தடவைகள் உறுதிப்படுத்தல் போன்ற நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் வெகுவிரைவில் நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் என அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts
கிழக்கில் 189 கல்வி நிருவாக சேவை அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு! கல்வி அபிவிருத்தியில் பாரிய தாக்கம்
8:00 AM
கிழக்கு மாகாணத்தில் 189 இலங்கை கல்வி நிருவாக சேவை (S.L.E.S)அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இது கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இத்தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி கல்வி அபிவிருத்தியை காண கல்வி அமைச்சர் முன்வரவேண்டும்
கிழக்கு மாகாணம் அம்பாறை மட்டக்களப்பு கல்முனை அம்பாறை ஆகிய 04 கல்வி மாவட்டங்களையும் 17 வலயக்கல்விக் காரியாலயங்களையும் 48 கோட்டக்கல்விக்காரியாலயங்களையு ம் 1097 பாடசாலைகளையும் கொண்டுள்ளது. இங்கு 3லட்சத்து 93ஆயிரத்து 684 மாணவர்களும் 20124 ஆசிரியர்களும் 911 அதிபர்களும் உள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் 17 வலயக்கல்விக் காரியாலயங்கள் 48 கோட்டக்கல்விக்காரியாலயங்கள் ஆகியவற்றில் இ.க.நி.சேவை வகுப்பு 1 இல் 07 அதிகாரிகளும் வகுப்பு 2 இல் 16 அதிகாரிகளும் வகுப்பு 3 இல் 73 அதிகாரிகளும் தற்போது சேவையிலுள்ளனர்.
இது போதாது. கல்வி நிருவாகம் கல்வி திட்டமிடல் பாடசாலை மேற்பார்வை கலைத்திட்ட அமுலாக்கம் கல்வி முகாமைத்துவம் கல்வி அபிவிருத்திபாட அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியங்கள் சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
இதனால் கிழக்கின் கல்வி அபிவிருத்தி நாட்டின் ஏனைய மாகாணங்ளோடு ஒப்பிடுகையில் கீழ்நிலையிலுள்ளது. இது தவிர்க்கமுடியாதது. உரிய வளங்களையும் உள்ளீடுகளையும் வழங்கிவிட்டு கல்விஅபிவிருத்தியில் பின்னிற்பது ஏன்? எனக் கேட்டால் நியாயம். ஆனால் உரிய வளங்களை வழங்காமல் ஒப்பிடுவது பொருத்தமானதல்ல.
வகுப்பு 1 இல் 13 பேருக்கும் வகுப்பு 2 இல் 55 பேருக்கும் வகுப்பு 3 இல் 121 பேருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை தற்போது இலங்கை அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் சேவையைச் சேர்ந்தோரே கடமை நிறைவேற்றி வருகின்றனர். இவர்களில் பலர் 10 வருடங்களுக்கு மேலாக கடமை நிறைவேற்று தர அதிகாரிகளாக பணியாற்றிவருகின்றனர். இவர்களில் தகுதியானோரை நிரந்தரமாக்கவேண்டும்.
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
கிழக்கு மாகாணம் அம்பாறை மட்டக்களப்பு கல்முனை அம்பாறை ஆகிய 04 கல்வி மாவட்டங்களையும் 17 வலயக்கல்விக் காரியாலயங்களையும் 48 கோட்டக்கல்விக்காரியாலயங்களையு
கிழக்கு மாகாணகல்விப்புலத்திற்கு அனுமதிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளுக்கான ஆளணி 285 ஆகும். ஆனால் தற்போது ஆக 96 அதிகாரிகளே சேவையிலுள்ளனர். எனவே மேலும் 189 பே ருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் 17 வலயக்கல்விக் காரியாலயங்கள் 48 கோட்டக்கல்விக்காரியாலயங்கள் ஆகியவற்றில் இ.க.நி.சேவை வகுப்பு 1 இல் 07 அதிகாரிகளும் வகுப்பு 2 இல் 16 அதிகாரிகளும் வகுப்பு 3 இல் 73 அதிகாரிகளும் தற்போது சேவையிலுள்ளனர்.
இது போதாது. கல்வி நிருவாகம் கல்வி திட்டமிடல் பாடசாலை மேற்பார்வை கலைத்திட்ட அமுலாக்கம் கல்வி முகாமைத்துவம் கல்வி அபிவிருத்திபாட அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியங்கள் சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
இதனால் கிழக்கின் கல்வி அபிவிருத்தி நாட்டின் ஏனைய மாகாணங்ளோடு ஒப்பிடுகையில் கீழ்நிலையிலுள்ளது. இது தவிர்க்கமுடியாதது. உரிய வளங்களையும் உள்ளீடுகளையும் வழங்கிவிட்டு கல்விஅபிவிருத்தியில் பின்னிற்பது ஏன்? எனக் கேட்டால் நியாயம். ஆனால் உரிய வளங்களை வழங்காமல் ஒப்பிடுவது பொருத்தமானதல்ல.
வகுப்பு 1 இல் 13 பேருக்கும் வகுப்பு 2 இல் 55 பேருக்கும் வகுப்பு 3 இல் 121 பேருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை தற்போது இலங்கை அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் சேவையைச் சேர்ந்தோரே கடமை நிறைவேற்றி வருகின்றனர். இவர்களில் பலர் 10 வருடங்களுக்கு மேலாக கடமை நிறைவேற்று தர அதிகாரிகளாக பணியாற்றிவருகின்றனர். இவர்களில் தகுதியானோரை நிரந்தரமாக்கவேண்டும்.
Labels:
கல்வி
களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 01 க்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
5:52 PM
Labels:
ALL,
கல்வி,
மட்டக்களப்பு
உலகின் இளவயது பட்டதாரியான தமிழ்ச் சிறுமி !!
7:33 AMஇந்தச் சிறுமி பொம்மைகளுக்கும் விளையாட்டுப் பொருட்களுக்கும் பெரு வாரியான நேர காலத்தை பொழுது போக்காகக் கழிக்காமல் கூடுதலான காலத்தை தகவல் தொழில் நுட்பப் பாடத் துறையில் சாதனை படைப்பதற்காக அயராது முயற்சி செய்து இந்தச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
பிரேமானந்த நடராஜ் மற்றும் லக்சுமி பிரேமானந்த் தம்பதிகளின் ஒரே ஒரு புதல்வியான இந்தச் சிறுமி கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயிலுகின்றார். 2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித் துறை கற்றை நெறி சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT DEGREE ) பூர்த்தி செய்துள்ளார். இவருக்காக பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால் எதிர் வரும் 2014 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் அளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தச் சாதனை இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமாகும். இந்தப் பட்டடிப்படிப்புத் தொடர்பான பெறுபேறு இணையத்தளத்தினூடாக கடந்த 12-12-2013 வியாழக் கிழமை வெளியாகின. இந்தச் சிறுமி தன்னுடைய மூன்று வயதிலேயே மின்னஞ்சல் முகவரியை திறந்து கொண்டார். சர்வதேச கணினியல் டிப்ளோமா கற்கை நெறியில் சான்றிதழ் பெற்றுள்ளார். வணிகம் இணையத்தள பொறியியல் துறைகளில் சர்வதேச தரச் சான்றிதழ்களை தன்னுடைய ஒன்பது வயதிலேயே பெற்றுள்ளார் அதே போன்று சிறு வயதிலேயே இணையத் தளத்தை வடிவமைத்தமைக்கான பெருமை இந்தச் சிறுமையே சாரும். இதில் இரண்டாம் இடத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்தக் கால எல்லைக்குள் கண்டி நகரிலுள்ள கணினி உயர் கல்வி நிலையங்களில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினி கற்கை நெறி சங்கத்தின் பட்டடிப் படிப்புக்காக விண்ணப்பித்து 2 ½ வருட காலத்திற்குள் பட்டப்டிப்பை பூர்த்தி செய்து கொண்ட இவர்தன்னுடைய 11 வயதில் உலகில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டவராகின்றார்.
வஷினியா சிறு வயது முதல் நல்ல குண நலங்களைக் கொண்டவர். இந்து சமய வழிபாட்டைப் பின் பற்றிய போதிலும் எட்டு வயதிலிருந்து கெட்டம்பே அருகிலுள்ள விஹாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபாடு காட்டி வருகின்றார். அதே போன்று சிறு வயது முதல் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவலிலுக்குச் சென்று வழிபாடுவார். இவர் கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர். இந்தச் சிறு பிள்ளை ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றார் எனும் போது; எமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். இரு முறை இரட்டை வகுப்பேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார். அது மாத்திரமல்ல 2010 ஆம் ஆண்டு க. பொ. த. சாதாரணப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் தோற்றி ஏ தரத்தில் விசேட சித்தியடைந்துள்ளார்.
வஷினியாவின் தந்தை நடராஜ் பிரேமானந்த் குருநாகல் மல்லவப்பிடியிலுள்ள ஒட்டோ மொபைல் கம்பனியின் ஒன்றின் பணிப்பாளர். தாயின் பெயர் லக்சுமி பிரேமானந்த் சில வருடங்கள் புகழ்மிக்க கணினி நிறுவனம் ஒன்றில் போதனாயாசியராகக் கடமையாற்றியுள்ளார். வஷினியாவின் வயதை ஒத்த பிள்ளைகள் பொம்மைகளோடு விளையாடும் பொழுது வஷினியாவின் தாயாருடைய நூல்களுக்குள்ளும் கணினிகளுக்குள்ளும் மூழ்கியிருந்தார்.
இரண்டு வயதிலேயே வஷினியா ஆங்கில மொழியின் அரிச்சுவடிகளை மனப்பாடம் செய்து விட்டார் கணினி விசைப் பலகை குறியீடுகளெல்லாம் வஷினியாவுக்கு கை வந்த கலையாகி விட்டது.
இவர் மூன்று வயதில் குருநாகல் சர்வதேசப் பாடசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரு வருடங்கள் கல்வி பயின்றார். இதன் பின் கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேசப் பாடசாலைக்கு 5 வயதில் பெரும்பாலானோருக்கு ஓர் இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு அதில் ஒரு கடிமான பகுதி உண்டு . ஆனால் அது அவருக்கு சாதாரண விடயமாகவுள்ளது. அதை அவர் இணையம் மூலம் தேடி இணைப்பதற்கேற்ப பதிவிறக்கம் செய்கின்றார். அதற்கு அவர் ஒரு தந்திரோபாயாயமும் வைத்திருக்கின்றார். அவர் முதலாவது வடிவமைத்த இணையத்தள முகப்பு, தகவல்கள், தங்களைப் பற்றி புத்தக ஒன்லைன், கேள்விகள். படத்தொகுப்பு எனப் பல பிரிவுகள் கொண்டுள்ளது. அத்துடன் குறித்த நிறுவனம் வழங்கும் சேவைகளும் அவற்றுக்குள் அடங்கியுள்ளன. இது ஒரு இலாபகரமான தொழில் என்றாலும் அது மிகவும் கடிமானது எனவும் ஒத்துக் கொள்கிறார்
வஷினியாவின் விசேட திறமையைக் கண்டு கண்டி டீஊயுளு உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. எம். நியாஸினால் கணினித் துறை அறிவை மேலும் மேம்படுவத்துவதற்காக ( Artificial Intelligence And robotics ) கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதனூடாக ரோபோ தாயாரிப்பதற்கான அறி திறனைப் பெற்று சாதனை படைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் கல்விப் படிப்புக்கு எந்தவிதமான இடையூறுகளுமின்றி பாடசாலை செல்கின்றார். விளையாட்டில் ஈடுபடுகின்றார். பாடசாலை வேலைகள் அனைத்தினையும் அன்றே செய்து முடிப்பார். விடுறை நாட்களிலேதான் இந்தத் தகவல் தொழில் நுட்ப பாடங்களைக் கற்றுள்ளார். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரான்ஸ், மற்றும் ஜேர்மன் மொழிகளைப் பேசக் கூடியவர், ஓகன், பியானோ, வாசிப்பதில் பங்கு பல பரிசில்களைப் பெற்றவர்.
இந்தச் சின்னஞ் சிறிய தாய் நாடு பற்றி உலமெங்கும் மதிக்க வேண்டும் என்பதுடன் ஒரு வைத்தியராக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அவருடைய இலக்காகும்.
Labels:
இலங்கை,
கல்வி,
தொழில்நுட்பம்
தனது கல்வி நிலையத்திற்கு மாணவர்களை மிரட்டி அழைக்கும் பாடசாலை ஆசிரியர்
8:45 PM
பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற சில ஆசிரியர்கள் தனியார் கல்வி
நிலையங்களில் கற்பிக்கின்றனர். இவர்கள் தமது பாடசாலைகளைச் சேர்ந்த
மாணவர்களை தாம் கற்பிக்கும் கல்வி நிலையங்களுக்கு வரவேண்டும் எனவும்
தனியார் கல்வி நிலையங்களில் தம்மிடமே வந்து கற்க வேண்டும் எனவும்
வற்புறுத்தி வருகின்றனர். இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கட்கு எதிரான வன்முறை: ஓர் சட்டநோக்கு
7:23 PM
அ.அர்ஜின்,
இறுதி வருடம்,
சட்ட பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்
இன்று இலங்கையில் மட்டுமின்றி அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பொருளாதார காரணிகளை பெருமளவு சார்ந்தது எனில் அபிவிருத்தியடைந்த நாடுகளை பொறுத்த வரையில் அது ஆணாதிக்க வாத சிந்தனையின் அடித்தளத்தை சார்ந்தது எனலாம். இலகுவாக பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் அவள் பெண் எனும் ஒரு காரணத்திற்காக அவள் மீது காட்டப்படும் வன்முறை என இலகுவாக கூறலாம். பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் நீக்குவது பற்றிய சமவாயம் 1979 (CEDAW) பின்வருமாறு பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை விளக்குகின்றது. இதை இலங்கை ஏற்று அங்கீகரித்துள்ளமை கருத்திற்குரியது.
“பெண்களுக்கெதிரான வன்முறை என்பது
அரசியல், பொருளாதார, சமூக,கலாச்சார, குடியியல், அல்லது வேறு ஏதேனும் துறையில் ஆணுக்குப்
பெண் சமம் என்ற அடிப்படையில், பெண்கள் அவர்களது விவாக அந்தஸ்து எப்படியிருப்பினும்,
மனித உரிமைகளையும் அடிப்படைச்சுகந்திரங்களையும்
ஏற்றங்கீகரிப்பதை, துய்ப்பதை அல்லது வலுக்கெடும் பயன் அல்லது நோக்கம் கொண்டதும், பால்
ரீதியான ஏதெனும் வேறுபாடு, விலக்கி வைத்தல் அல்லது மட்டுப்பாடு எனப்பொருள் கொள்ளல்
வேண்டும்.”
ஆனாலும் இலங்கை ஓர் கீழைத்தேய
இறுக்கமான கலாச்சார பின்ணணியை கொண்ட நாடு. கீழைத்தேயத்தின் இந்த பிண்ணணியை திறந்த மனப்பான்மையுடன்
ஆராயும் போது இன,மத பேதமின்றி பெண்களை இரண்டாந்தரத்தவர்களாக பார்க்கும் தகைமையை இது
கொண்டது. அதிலும் தமிழரை பொறுத்தளவில் அதன் தாக்கவளவு சற்று அதிகமே. ஒரு இனம் தனக்கொரு
தனித்தொரு ஆளுமையை வெளிக்காட்டக்கூடிய தளம், அதற்குரிய தனிப்பட்ட சட்டங்களே, அவ்வகையில்
மலபார்கள்( வட மாகாண தமிழர்கள் ) இன்று வரை தந்தை வழிச் சட்டமாகிய தேசவழமைச் சட்டத்திற்கு
உட்பட்டிருக்கின்றார்கள். இச்சட்டம் காரணங்கள் பல சொல்லற்கரியதற்கப்பால், முகத்தளவிலேயே
பெண்களை இரண்டாம் நிலைப்படுத்தி வைத்திருப்பதை காணலாம். ஆனால் இதற்கு மாறான வகையில்
பெண்களை முதன்மைப்படுத்தி தாய்வழி சமூகத்தை ஊக்கப்படுத்திய முக்குவச் சட்டம் ( கிழக்கு
மாகாண தமிழருக்கானது) இன்று வழக்கொழிந்து செல்லாததாகி விட்டது. இச்சிறு உதாரணம் மூலம்
எமது வரலாற்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு கீழைத்தேய சமூகம் அதன் கலாச்சாரத்தினுாடாக
காட்டும் வன்முறை அல்லது பாரபட்சம் தெளிவாகின்றது.
உலகம் முழுவதும் அனர்த்தங்கள்
இடம் பெறினும் அது இயற்கையானதாகவோ அல்லது மனதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருப்பினும்
முதலில் அதன் பாதிப்பை முகத்தளவில் ஏற்பது பெண்களே, இவ்வேற்புக்கான காரணி பெண்கள் ஆண்களை
விடவும் உடலியல் பலம் குறைந்தவர்கள் எனும் காரணியை விடவும் பல காரணிகளில் தங்கியுள்ளது.
அவை கலாச்சாரம், அரசியல், சமூக குழுமங்களின் வாழ்க்கை முறைமை, பொருளியல் பின்னடைவு,
பெண்களின் சொத்தாளுகை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் விடயங்கள் அவற்றோடு இறுதியாக
உடலியற் வேறுபாட்டு காரணங்களையும் காட்ட முடியும்.
ஆனாலும் பெண்களின் நிலையை மேம்படுத்த
சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் பல சட்டவேற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பெண்கட்கெதிரான பாகுபாடு என்பது மனித உரிமை மீறல் என்ற கண்ணோட்டத்திலேயே முதலில் பார்க்கப்பட
வேண்டியது எனலாம். அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of
Human Rights) உறுப்புரை 2 இனுாடாக அனைத்து
வித பாரபட்சங்களையும் நிராகரிக்கின்றது. அத்தோடு இவ்வுரிமையானது இலங்கையின் மீயுயர்
சட்டமான அரசியலமைப்பின் உறுப்புரை 12 இனுாடாகவும் பின்வருமாறு உறுதிப்படுத்தப்பட்டது.
“சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும்
சமமானவர்கள், அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள். இதன் தொடர்ச்சியானது பால் உட்பட வேறெந்த
காரணியும் பாரபட்ச காரணியாக அமையக்கூடாது என வலியுறுத்துகின்றது.”
இவ்வுறுப்புரை மீறப்படின் இலங்கையின்
அதியுயர் நீதிமன்றமாகிய உயர் நீதிமன்று மூலம் நிவாரணத்தை பெற்று கொள்ளலாம்.
மேற்கொண்டு சர்வதேச சட்ட உபகரணங்களை
நோக்கின் இலங்கை ஓர் தரப்பாக உள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகட்கான பொருத்தனையும்
(International Convention on Civil and Political Rights) பெண்களுக்கான பாரபட்சத்தை
மறுக்கின்றது. இருப்பினும் சர்வதேச சட்ட உபகரணங்கள் பல தேசிய அரசுகட்கு ஓர் பொதுவான
வழிகாட்டியாக அமையுமே அன்றி பிணிப்பவையாக கருதப்பட முடியாதவை. சில சர்வதேச உடன்படிக்கைகள்
கூட பிணிக்கும் தகவுடையவையாக காணப்படினும், மேற்பார்வை அல்லது உடன்படிக்கை விலகலை சீர்செய்யும்
அமைப்புக்களின் செய்நிலை நடைமுறையில் திருப்திகரமானதாக இல்லை என்பது இன்றைய நிலைப்பாடு.
இலங்கையின் நிலையை பொறுத்த மட்டில்
ஏற்கனவே குறிப்பிட்ட உறுப்புரை 12 ஐ அரசியலமைப்பின் உறுப்பரை 12(4) ஓர் மட்டுப்படுத்தும்
காரணியாக உள்ளது. இதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு அரசு ஏதேனும் விஷேட சலுகைகளை வழங்கினால்
அது ஆண்களுக்கான சமத்தவத்தை மீறுவதாக கருதப்பட கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஓர் முகத்தளவு வாசிப்பானது இலங்கையின் நடைமறை அரசியலமைப்பு பெண்களுக்கு ஆண்களை
விட உயர்ந்தளவான இடத்தை வழங்கியுள்ளமை தெளிவானது.
சட்டம் என்பது சமூகத்தை ஆளும்
ஓர் தொகுதி விதிகள் எனும் வரைவிலக்கணத்தின் போது சட்டத்தை மீறினால் கிடைக்கும் தண்டனைக்கு
பயந்தே பெரும்பான்மையான குடிகள் சட்டத்தை மீறுவதில்லை. அவ்வகையில் பெண்கட்கு எதிரான
குற்றச்செயல்கள் பல இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் (Penal Code) நிரற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் பகுதி XVI ஆனது மனித உடலுக்கும் மனித உயிருக்கும் எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய
குற்றங்கள் பற்றி கூறுகின்றது. இதில் குறிப்பிட்ட குற்றங்கள் பெண்கட்கு உடலியல் ரீதியில்
வீட்டிலும் வெளியிடங்களிலும் ஓர் மட்டுப்பட்டளவு பாதுகாப்பை அளிக்கின்றது. குறிப்பாக
பிரிவுகள் 363, 1995இல் இன்றைய நிலைகட்கு ஏற்றாற் போல சுமார் ஓர் நுாற்றாண்டிற்கு பின்னர்
இலங்கை சட்டவாக்கதுறையால் திருத்தியமைக்கப்பட்டது. முன்னரைப் போல குற்றவாளிகட்கு நீதிபதிகளின் தயவில் மன்னிப்பளிக்காமல்
குறைந்த பட்ச தண்டனையை அமுலாக்கியது. அத்தோடு குழு பலாத்காரம், தடுப்பில் வைத்து பலாத்காரம்,
சுயநினைவற்ற நிலையில் பலாத்காரம், கர்ப்பிணிப் பெண்கள் மீதான பலாத்காரம் என பல வகைகளில்
தண்டனைகளை நீட்சியாக்குகின்றது. குறிப்பாக 1995இன் திருத்தமானது பாலியல் சேட்டைகட்கு
பிரிவு 345 இன் படி தண்டனையாக 5 வருட சிறைத்தண்டனையை விதிப்பதுடன் பொது போக்குவரத்து
மற்றும் வேலைத்தள தொல்லைகளில் இருந்து பெண்களை காப்பதுடன், பிரிவு 346(அ) முறையில்லாப்
புணர்ச்சியிலிருந்தும் பெண்களை காக்கின்றது. இக்குற்றங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது
பெண் சிறார்களே என்பது மனவருத்தம் அளிக்கக்கூடிய உண்மை.
அடுத்த பெண்களுக்கு எதிரான குற்றம் என பார்க்கையில் பெண் கடத்தல் (Trafficking of Women) என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது. நாட்டினது பூகோள பரப்பின் அப்பாலும் அல்லது நாட்டின் உள்ளேயும் “தொழில் வாய்ப்பு” எனும் மாயக்கண்ணாடியை காட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைப்பெண்கள் இன்றும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் தலைநகரில் வர்த்தக ரீதியில் பாலியல் சேவையாற்றுவதற்காக பயன்படுத்தபட்டு வருகிறார்கள். அல்லது வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக நடாத்தப்படும் அவலத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தண்டனைச்சட்ட கோவையின் 2006ஆம் ஆண்டின் திருத்தமானது ஐக்கிய நாடுகளின் அனைத்து வகையான மனித கடத்தல்களின் தடுப்பு விருப்பேட்டில் (UN Protocol on Trafficking and Prohibited all forms of Human Trafficking). மனித கடத்தலுக்கான விரிவான வரைவிலக்கணத்தை உள்நாட்டுச் சட்டம் என்ற வகையில் உள்ளீர்த்திருப்பினும் அதன் அமுலாக்கற் பொறி முறை ஓர் திட்டமிட்ட ஏற்பின் விளைவே கொடுக்கவில்லை. ஏனெனில் சட்ட அமுலாக்க முகவர்கட்கு பெரும்பாலான குற்றங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதில்வை. அவ்வாறு கொணரப்படின் பொருண்மைவாத (Substantial) ரீதியில் இலங்கையின் சட்டத்தளம் நிவாரணங்கள் வழங்குவதில் தாராளமாகவே உள்ளது. உதாரணமாக பாதிக்கப்பட்ட பெண் நிர்வாக துறையினரால் மேற்கண்டவாறு துன்புறுத்தப்படின் சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சட்டம் இல 22 இன் 1994 (CAT Act) இன் கீழ் குற்றவாளிக்கு 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையையும், பாதிக்கப்பட்டவர்க்கு ரூ.50,000 வரையான நட்டஈட்டையும் பெற முடியும்
ஆனாலும் இலங்கைச்சட்டம் இன்று
வரை “திருமண வல்லுறவை” (Marital Rape) ஓர் குற்றமாக அங்கீகரிக்கவில்லை. எனவே மனைவியின்
சம்மதமின்றி கணவன் அவளை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் இன்று பாதிக்கப்பட்ட பெண்
நீதியின் முன் எவ்வித நிவாரணங்களும் பெறும் தகுதியை இழக்கிறாள். ஆனால் இந்தியாவை பொறுத்த
வரையில் பாதிக்கப்பட்ட மனைவி கணவனுக்கெதிராக நிவாரணம் பெற உரித்துடையவள்.
இலங்கையில் குடும்பம் எனும்
அலகு மிக முக்கியத்துவம் உடையதாக விளங்குகின்றது. குடும்ப நிலையை பேணிக்காப்பது இலங்கை
அரசின் வழிகாட்டிக் கொள்கைகளில் ஒன்றாகும். அவ்வகையில் கணவனை தண்டனைக்கு உட்படுத்தி
மனைவி விடுதலை அடைவது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என அனைவராலும் பொதுவில் ஏற்கப்பட்டது.
அது சட்டவாக்கதுறையினரினதும் பார்வையில் பட்டு உருவாக்கப்பட்டதுதான் குடும்ப வன்முறை செயல் தடுப்புச் சட்டம் இல
34 இன் 2005. (Prevention of Domestic Violence Act No 34 of 2005)
இச்சட்டம் துன்பத்தை இழைக்கும்
நபரிடம் இருந்து துன்பத்துள்ளாகும் நபரை குடும்ப அலகினுள் பாதுகாப்பதற்கான ஓர் விஷேட
சட்டமெனலாம். இச்சட்டம் எதிர்வாதியை “குற்றவாளி” என தீர்ப்பளிக்காது. ஆனால் மற்றைய
தண்டனைக் கோவையில் குறிப்பிட்டப்பட்டுள்ள சட்டங்கள் யாவும் எதிர்வாதியை குற்றவாளி என
நிலைப்படுத்துவதால் குடும்பம் என்ற அலகு விரிசல் அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
இச்சட்டம் தீர்ப்பாக துன்பம் இழைக்கும் நபரை துன்பத்துக்குள்ளாகும் நபரிடமிருந்து பிரித்து
வைக்கின்றது. இப்பிரிவுக்காலம் துன்பம் இழைத்த குடும்ப உறுப்பினர் தன் தவறை உணர்ந்து
திருந்த ஓர் வாய்ப்பாக அமையும் என நம்புகின்றது. மேலும் நீதிமன்று இப்பிரிவுக்காலத்தில்
துன்பத்துள்குள்ளான நபர் வசிக்கும் அல்லது தொழிலாற்றும் இடத்தினுள் துன்பமிழைத்த நபர்
உட்புகுவதை தடுக்க உத்தரவிட முடியும். இச்சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற பொலிசாரின்
உதவி தேவையற்றது. எனவே குடும்ப உறுப்பினரை பொலிசாரிடம் கையளிக்கின்ற கசப்பான அனுபவங்களை
குடும்ப உறுப்பினர்களிடையே நிகழ்வதை தடுக்கின்றது. அத்தோடு இச்சட்டத்தின் கீழ் வழக்காடும்
நபர்களின் விபரங்களை ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்கு வெளியிடுவதிலும் மட்டுப்பாடுகளை
விதிக்கின்றது.
இதில் துன்பத்திற்கு உள்ளான
குடும்ப உறுப்பினர் நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கட்டனை (Protection Order) ஒன்றை
கோர முடியும். இதில் மன்று பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து இடைக்கால பாதுகாப்பு கட்டளையை
(Interim Protection Order) வழங்க கடப்பாடுடையதாகின்றது. “தண்டித்தல்” எனும் விடயத்திற்கு
பாதுகாப்பு கட்டளையினால் வழங்கப்படும் “பிரிவு” எனும் எண்ணக்கரு போதுமானதாயினும் இச்சட்டம்
அதற்கப்பாலும் சமூக நோக்கில் பணியாற்றுவது பாராட்டிற்குரியது. அதாவது பாதுகாப்பு கட்டளைக்கு
தொடர்ச்சியாக குறைநிரப்பு கட்டளை (Supplementary Order) நீதிமன்றால் வழங்கப்படலாம்.
இக்கட்டளை முரண்பாடுடைய நபர்களுக்கிடையே சொத்து தொடர்பான விடயங்கள், பராமரிப்பு செலவு,
தேவையின் பொருட்டு பாதிக்கப்பட்டவருக்கு தங்குமிடம், உளவள ஆலோசனைக்கு சமூகமளித்தல்
உட்பட்ட விடயங்கட்கு துன்பம் இழைத்தவர்க்கு உத்தரவிட பயன்படும். மேற்குறித்த கட்டளைகள்
பணம் தொடர்பானதாயின் துன்பம் இழைத்தவரின் சம்பளத்திலிருந்து உரியதொகையை கழித்து பாதிக்கப்பட்டவர்க்கு
வழங்கும் படி நீதிமன்று உத்தரவிட முடியும். நீதிமன்றத்தின் உத்தரவுகட்கு கட்டுப்படாத
நபர் விசாரணையின் பின்பு பத்தாயிரம் ரூபாவிற்கு விஞ்ஞாத தண்டப்பணம் மூலமோ ஒரு வருடத்திற்கு
உட்பட்ட சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ தண்டிக்கப்படுவார். இச்சட்டம் கணவன் மனைவி
எனும் எல்லையை கடந்து தந்தை,தாய்,பாட்டி,பாட்டன்,மருமகள்,மருமகன்,சகோதரர்கள் என விரிந்து
செல்லும் குடும்ப உறுப்பினர்கட்கு ஏற்புடையதாகும்.
இலங்கையில் பல சட்டங்கள் பெண்கட்கெதிராக
பாரபட்ச வன்முறைகட்கு எதிராக காணப்பட்ட போதிலும் தொடர்ந்து பெண்கள், பெண்கள் எனும்
காரணத்திற்காக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணங்களாக கல்வி அறிவு இன்மை, கலாச்சார
கோடுகளை தாண்டுவதிலுள்ள தயக்கம், சட்டங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியில் தெளிவின்மை
அதோடு சட்ட அமுலாக்கல் உபகரணங்களில் காணப்படும் அலட்சிய மனப்பான்மை போன்றவற்றை நிரற்படுத்தலாம்.
தீர்வு என நோக்கும் போது நீதியை
அமுலாக்க பாரபட்சமற்ற மற்றும் சுகந்தரமான சட்ட அமுலாக்கல் முகவராண்மைகளின் தேவைப்பாடு
மிக அவசியமானது. ஆனால் அது இன்றைய இலங்கையை பொறுத்த வரை எந்த ஒரு அரச மற்றும் தனியார்
நிறுவன கட்டமைப்புகட்கும் சாத்தியமற்றது என நடைமுறை கள நிலவரங்கள் தெளிவிக்கின்றன.
இதில் பொலிசு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவை கூட தப்பிப்பதாக அறிய முடியவில்லை.
இரண்டாவதாக பெண்களிடையே அவர்களது உரிமைகள், பாதுகாப்பு பெறும் வழி முறைகள் பற்றி விழிப்புணர்வூட்ட
வேண்டியது அவசியம். சட்டங்கள் இலகுபடுத்தப்பட வேண்டியதும் அவசியமானவர்கட்கு இலவச சட்ட
உதவி வழங்கப்பட வேண்டியதும் அவசியம். இப்போது நீதியமைச்சால் இதற்காக எடுக்கப்பட்டு
வரும் முயற்சிகள் பாராட்டதக்கவை எனிலும் அதன் விரிவாக்கம் திருப்தி அளிக்க கூடிய தகவளவை
கொண்டிருக்கவில்லை. முக்கியமாக சிவில் சமூகத்தின் பங்கு பெண்களுக்கான பாரபட்சத்தை ஒழிப்பதில்
இன்னும் முன்னேற வேண்டிய துாரம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக அழுத்த குழுக்கள்
(Pressure Groups) துறைசார் வல்லுணர்களால் வழிகாட்டப்படுவது நிகழளவில் போதியதல்ல இந்நிலைமை
முன்னேற்றம் காணப்பட வேண்டும். அப்போது தான் அழுத்த குழுக்களின் அழுத்தம் அர்த்தம்
உள்ளதாகவும் வெற்றிக்கானதுமாக அமையும். இறுதியில் எல்லாவற்றுக்கும் மேலாக மனித குடும்பத்தின்
அங்கத்தவர்கள் அனைவரும் அனைத்து வேற்றுமைகளையும் கடந்து ஒரே உரிமைகட்கு பாத்திரமானவர்கள்
எனும் எண்ணப்பாடு அனைவரினதும் மன வெளிப்பாடாக அமையும் நேரத்திலேயே பெண்களுக்கெதிரான
பாரபட்ச செயற்பாடுகட்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா 2013
4:57 AM
Labels:
ALL,
கல்வி,
மட்டக்களப்பு
கிராமத்திற்கு பெருமைசேர்த்த மாணவர்கள் (மேலதிக படங்கள்)
7:25 PM
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அண்மையில்
நடைபெற்ற தேசியமட்ட கணித நாடகப் போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைப்
பெற்றிருந்தனர். ஒரு கிராமத்திலிருந்து பங்குபற்றி எமது கிராமத்திற்கு
பெருமையீட்டியமைக்காக வெற்றியீட்டிய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்வதுடன், வழிநடாத்திய அதிபர் அவர்களுக்கும், பயிற்றுவித்த
ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக நின்ற ஏணையோருக்கும் எமது
பாராட்டுக்களையும் எமது இணையத்தளம் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Labels:
ALL,
கல்வி,
மட்டக்களப்பு
தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய கணித நாடகம்
5:20 AM
Labels:
கல்வி,
மட்டக்களப்பு
மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதல் இடம்
4:36 AMபல்வைத்தியர் முரளிதரன் மனைவி ஆயுள்வேத வைத்தியர் காயத்திரி ஆகியோரின் புதல்வியான கவிலாஷனா என்ற மாணவியே 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார்;
பரீட்சைக்கு தோற்றிய 89 மாணவர்களில் 41 பேர் சித்திபெற்றுள்ளனர் இது 46 வீதமாகும்.
4 மாணவர்கள் 72 – 100 புள்ளிகளைப் பெற்ற நிலையில் மற்றைய 37 மாணவர்களும் 100க்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.
இதேவேளை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம் மாணவி சதாசிவம் தனுசிக்கா 191 புள்ளியைப் பெற்று பாடசாலையை மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
கல்லடி இராமகிருஷ்ண வித்தியாலயம் 190 பள்ளியை பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தைப்பெற்றுள்ளது.
Labels:
கல்வி,
மட்டக்களப்பு
மாகாண சபைகட்கான காணி அதிகாரங்கள் பற்றிய உயர்நீதி மன்றின் அண்மைய தீர்ப்பு ஒரு பார்வை
11:57 PM“இன்றைய இலங்கையன் அரசியலை பொறுத்த மட்டில் காணி சம்மந்தமான அதிகார வேட்கை வெறும் நிலத்திற்கான அடிப்படையல்ல. அது குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்த மட்டில் திட்டமிடப்பட்ட குடித்தொகை விகிதார மாற்றத்திற்கான அடித்தளம் என்பது தான் உண்மை“
அ.அர்ஜின்,
சட்ட பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்.
arjunwil@yahoo.com
இந்த பந்தியை எழுத ஏற்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணம் சென்ற வியாழன்
அதாவது 26-09-2013 அன்று இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கிய வழக்கின் தீர்ப்புத்தான். இதில் குறிப்பாக இலங்கை ஒற்றை ஆட்சி நாடு என்கின்ற படியால் காணி அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் மட்டுமே காணப்படும் எனவும் மிக வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் அது மாகாண சபையின் ஆளுகைக்கு உட்படும் எனவும் இத்தீர்ப்பு எடுத்தியம்புகின்றது. இத்தீர்ப்பு மூவரங்கிய நீதிபதிகளால் ஏகமனதாக ஆனால் வேறுபட்ட மேற்கோள்களுடன் வழங்கியுள்ளது. அவ்வமர்வு பிரதம நீதியரசர் மொகான் பீரீஸ் மற்றும் நீதியரசர்கள் சிறீ பவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை உள்ளடக்கி காணப்பட்டது.
நீதியரசர் சிறி பவன் தனது தீர்ப்பில் பதின்மூன்றாம் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளவாறாக தேசிய காணி ஆணைக்குழு மூலம் மாகாணங்கட்கான காணி முறைமைகள் அங்கீகரிக்கப்டும் வரை முழுமையாக இவ்வதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கும் என தெரிவித்ததோடு மேலதிகமாக மத்திய அரசு ஏதேனும் தேவைகட்காக மாகாண சபையிடம் காணிகளை கையளித்திருப்பினும் அதன் உண்மை உரித்து மத்திய அரசிடமே தொடர்ந்து காணப்படும் என தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் குறிப்பிடுகையில் பதின்மூன்றாம் திருத்தம் இரண்டு வகையாக காணிகளை பிரித்துள்ளதோடு அதில் இரண்டாம் நிரலாக ஒதுக்கிய நிரலில் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமான அரச காணிகள் மத்திய அரசிற்கே என்றும் உரித்துடையவை என தீர்த்தார். இங்கு உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விடயம் அரச காணி என்பதன் வரைவிலக்கணம் அது தனியார் காணி தவிர்ந்த அனைத்து காணிகளும் அரச காணிகள் என வரையறை செய்கின்றது. எனவே தனியார் காணிகள் தனியாரிடமும் அரச காணிகள் முழுவதும் மத்திய அரசிடமும் காணப்பட்டால் மாகாண சபைக்கு எந்த வித காணி அதிகாரமும் கிடையாது என்பது வெளிப்படை.
இன்றைய வடமாகாண சபையின் நோக்கமும் என்றைக்குமே தமிழ் மக்களின் ஏக்கமும் தமது தாயக பகுதிகளில் இன விகிதாசாரம் மாற்றப்பட்டு தாம் ஏதிலிகளாக மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதேயாகும். இத்தீர்பானது அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கட்கு அரசியற் தளத்தில் ஓர் சட்டவலிதார்ந்த தன்மையை வழங்குவது முகத்தளவிலேயே தெளிவானது.
ஆனாலும் சட்டத்தளத்தை பொறுத்த வரை இது மிகச்சரியான ஓர் முடிவு என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். ஏனெனில் இலங்கையில் யாப்பே மீயுயர்வாக சட்டம். அதன் உறுப்புரை 33(ஈ) காணிகளை வழங்குவது அல்லது பகிர்ந்தளிப்பது தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்குகின்றது. அதோடு இலங்கையில் யாப்பை பொருள்கோடல் செய்யவும் இறுதி தீர்மானம் எடுக்கவும் அரசியலமைப்பின் உறுப்புரை 118 உயர்நீதி மன்றிற்கே அதிகாரம் அளிக்கின்றது. எனவே யாப்பில் அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கமைய ஓர் முடிவை நீதிமன்றுகள் எடுப்பதை சட்டவழு என்ற ரீதியில் யாரும் பார்க்க முடியாது.
ஆனால் இத்தீர்பின் பொருள்கோடல் அர்த்தம் வேற்று முறைமையில் ஆபத்துக்குட்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக தோன்றிய சட்டத்தரணி கொமின் தயாசிறி இன் கூற்றை அப்படியே மீள் பிரசுரம் செய்கின்றேன்.
“This is very significant because it means that every citizen of the country has a right to every inch of land, and it does not belong to the chief minister of the provincial Council. Land is deemed to be in the hands of the president.”
அதாவது இலங்கையின் காணி அதிகாரங்கள் மாகாண முதல்வர்கட்கு என்றுமே உரித்தான மாட்டாது. அது இலங்கை ஜனாதிபதியின் மேல் இலங்கை மக்கள் அனைவருக்கும், எந்த பிரதேசத்திலும் சம உரிமையை கொண்டதாக காணப்பட வேண்டும்.
அவ்வாறெனில் கொழும்பில் இருந்து தமிழர்கள் ஏன் வடகிழக்கிற்கு விரட்டப்பட்டனர். அப்போதும் இதே அரசியலமைப்பின் உறுப்புரை 14 (h) அதாவது அடிப்படை உரிமைகள் எனும் பகுதியினுள் வரும் “இலங்கையினுள் சுகந்திரமாக எங்கும் வாழும் உரிமை” அன்று மறுக்கப்பட்ட போது நீதித்துறை செய்தது என்ன ?
எனவே இன்று மாகாண சபைகளின் முன்னால் உள்ள சவால் சட்டத்தளத்தினுள் நின்று கொண்டு நீதியரசர் குறிப்பிட்ட அந்த வரையறுக்கப்பட்ட நிலைமைகளை எவ்வளவு துாரம் நீட்சியடையச் செய்ய முடியும் என்பதாகும்.
சட்ட சகபாடிகட்காக
இவ்வழக்கின் பெயர் Solaimuthu Rasu V Competent Authority of the plantation Ministry. இப்போது உயர்நீதி மன்று வழங்கிய இத்தீர்பானது முன்னைய தீர்ப்பான Jhon Keels வழக்கை புறத்தொதுக்கியுள்ளது. அந்த வழக்கு மாகாண சபைகட்கு காணி அதிகாரங்கள் உண்டு என தீர்த்த வழக்காகும். இப்போதைய வழக்கானது அடிப்படையில் கண்டி மாகாண மேல் நீதிமன்றில் வழங்காணைக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும். மேல் நீதிமன்று காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு கிடையாது என தீர்க்க மேன்முறையீட்டில் மேன்மறையீட்டு நீதிமன்று மாகாண சபைகட்கு காணி அதிகாரம் உண்டு என தீர்த்தது. ஆகால் இறுதி முறையீட்டின் போது உயர்நீதிமன்று காணி அதிகாரங்கள் மாகாண சபைகளிற்கு இல்லை என தீர்த்த போதிலும் இது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வே எனவே இறுதியான முன் பிணிக்கும் தீர்ப்பாக கருதாது அதற்கான முழு அமர்வு இடம் பெற வேண்டியது அவசியமாகும்.
பிற்குறிப்பு
இவ்வழக்கின் பிரதி கையிற்கு கிட்டாத காரணத்தால் முழுமையாக சட்ட உறுப்புரைகளையும் மேற்கோளிட்ட வழக்குகளையும் அலச இயலவில்லை.
5 ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள்
9:16 AMஎதிர்வரும் காலங்களில் சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, சகல மாணவர்களும் தமது பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக நாளை பிற்பகல் தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலம் உங்கள் கைத்தொலைபேசியில் பெறுவதற்கு
EXAMS<space>INDEX NO
sent to
Dialog - 7777
Mobital - 8884
Airtel - 7545
Etisalat - 3926
Hutch - 8888
இதேவேளை, இம்முறை ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 22ஆயிரத்து 455 மாணவர்கள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கே இலவசமாக உங்கள் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பார்வையியடலாம்
அணுசரணை : அமரா கல்லூரி மட்டுநகர்
சிறந்த பெறுபேற்றை பெற எமது வாழ்த்துக்கள்





.jpg)
.jpg)


