இவ்வருடம்
நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வந்தாறுமூலை
மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் வெட்டுப்
புள்ளிக்குமேல் புள்ளியினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வருடம்
இடம்பெற்ற பரீட்சையில் 82 மாணவர்கள் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் 10 மாணவர்கள் பெற்றுள்ளதுடன், 100 புள்ளிகளுக்கு
மேல் மொத்தமாக 4 மாணவர்களும் இதேவேளை 70 புள்ளிக்கு அதிகமாக மொத்தமாக 52
மாணவர்களும் புள்ளிகழைளப் பெற்றிருந்தனர்.
தோற்றியவர்களில்
பெற்ற அதிகூடிய புள்ளியாக 186 ஆகக் காணப்படுவதுடன், கடந்த வருடத்தில் 7
மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment