Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label ALL. Show all posts
    Showing posts with label ALL. Show all posts

    உலக சூழல் தினம் - 2014

    ஐக்கிய நாடுகள் சபையினால் வருடந்தோறும்ஜுன் மாதம் 05 ஆம் திகதி சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சூழல் தினமானது "காலநிலை மாற்றமும் சிறிய தீவுகளும்" என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

    வாகரை மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

    வாகரை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவனான செல்வன் ரஜித்காந் இன்று 2.30 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 18 வயதையுடைய குறிப்பிட்ட மாணவன் க.பொ.த.சாதாரணதர வகுப்பு மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கைத்தொழில் புவியியல் நூல் வெளியீடு

    சித்தாண்டி - மாவடிவேம்பு  தவசி லேணிங் சிற்றி கல்வி நிலையத்தில் ஆசிரியர் அக்சயன் அவர்களால் எழுதப்பட்ட மானிடப்புவியியலின் ஒரு பகுதியான கைத்தொழில் புவியியல் எனும்  நூல் நேற்று  (19.04.2014) வெளியிடப்பட்டது.

    "அப்பா" குறும்பட விமர்சனம்

    தாயில்லாத பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து உயர் பதவியை அடைய வைக்க பாடுபடும் தகப்பனின் கதையே இந்த  “அப்பா” குறும்படம் ஆகும்.

    கோறளைப்பற்று வடக்கு கோட்டமட்ட விளையாட்டுப் போட்டி

    கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறப்பற்று வடக்கு கோட்டமட்ட விளையாட்டப் போட்டி நிகழ்வுகள் இன்று  நடைபெற்றது.  கோறளைப்பற்று வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி ச.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலயகக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிகந்தராசா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். 

    அப்பா - குறும்படவெளியீடு

    குமாரவேலியார் கிராமத்து கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகிய அப்பா திரைப்படம் எதிர்வரும் 30.03.2014 அன்று பிற்பகல் 3 மணியளவில் திரையிடப்படவுள்ளது. செங்கலடி செல்லம் திரையரங்கில் இடம்பெறவுள்ள இக் குறும்பட வெளியீட்டிற்கு பிரதம அதிதியாக பேராசிரியர் மௌனகுரு அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். 

    சித்தாண்டியில் சுகாதார வாரத்தினை முன்னிட்டு பேரணி

    (Veeran) தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு  சித்தாண்டியில் கடந்த 15.03.2014 அன்று விழிப்புணாவுப் பேரணி ஒன்று நடைபெற்றது. சுகாதாரத திணைக்களத்துடன்,  வேர்ள்ட்விசன் நிறுவனம் இணைந்து இந்த ஊர்வலத்தினை நடாத்தியது.

    முதலாம் தவணைக்கான வினாவிடைப் போட்டி நிகழ்வு

    சித்தாண்டி - மாவடிவேம்பு  தவசி லேணிங் சிற்றி - அறிவகம் கல்வி நிலையத்தின் முதலாம் தவணைக்கான வினாவிடைப்போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம்(16.03.2014) கல்வி நிலையத்தின் திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

    வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலய புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு

    (Rajan) சித்தாண்டி - வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தின் புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று (07.03.2014) சித்தாண்டி நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

    கட்டுத்துவக்கு வைத்திருந்த மாவடிவேம்பு நபர் கைது

    கட்டுத்துவக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும்  மாவடிவேம்பு விதானையார் வீதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

    ஆறு மாதங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட கொம்மாதுறை பெண்ணின் மாமனார் கைது

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம் பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

    வந்தாறுமூலையில் இன்று மோட்டார் சைக்கிள் இரண்டு மோதி விபத்து

    வந்தாறுமூலையில் இன்று காலை 11 மணியளவில் சிறிய விபத்து ஒன்று இடம்பெற்றது. வந்தாறுமூலை  கமநல கேந்திர நிலையத்திற்கு முன்னால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.

    பத்திரகாளி அம்மன் ஆலய சிவராத்திரி நிகழ்வுகள்

    (Sanjevan & Nanthan) சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகாசிவராத்திரி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பூஜை நிகழ்வுகளுடன் சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு  சைவவினாவிடைப் போட்டியும் நடைபெற்றது.

    பல்லின கலாசார பண்புகளை வாழ வைக்கும் தேசத்தின் மகுடம்

    குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்ற செயல் திட்டம் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

    அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும் , மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும்

    (Rajan) கிரான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும், 1-வது இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும் பாடசாலை அதிபர் சி.சிவனேசராஜா தலைமையில் 21.02.2014அன்று நடாத்தப்பட்டது. 

    இல்ல விளையாட்டின் தடகளப் போட்டிகள் ஆரம்பம்

    (Kenu)சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் தனிநபர் நிகழ்ச்சிகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ளன.  அந்தவகையில்  ஓட்ட நிகழ்ச்சிகள், கோலூன்றிப் பாய்தல், முப்பாய்ச்சல் ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

    கிரானில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

    (Rajan) கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் செயலகத்தில் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று, கோறளைப்பற்று தெற்கு திவிநெகும திட்ட இணைப்பாளர் ஆ.தேவராஜா அவர்களும் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    சித்தாண்டி பிரதேசத்தில் சிறுபோக நெற்பயிர்ச்செய்கை ஆரம்பம்

    சித்தாண்டி மற்றும் அயலிலுள்ள நீர்ப்பாசண வசதியுடனான நெல்விளைநிலங்களில் சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  பெரும்போக பயிர்ச்செய்கை காலத்தில் மழையின்மையால் பயிர்விளைவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மிகவிரைவாக நீர்ப்பாசனத்துடனான சிறுபோகச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    சந்திவெளி வைத்தியசாலைக்கு முன்னாள் முதல்வர் விஜயம்


    முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் மட்டக்களப்பின் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு மக்களின் வேண்டுகோளினை ஏற்று விஜயம் செய்தார்.

    பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புதுநெல் வழங்கும் நிகழ்வு

    சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று காலை புதுநெல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. புதுர் எடுத்தல் என அழைக்கப்படும் இந்நிகழ்வில் ஆலய பிரதம பூசகர் மற்றும், ஆலய நித்திய பூசகர்கள் மற்றும் ஆலய நிருவாக சபையினரும் மக்களுக்கு புதுநெல்லை வழங்கி வைத்தனர்.
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info