Headlines News :
Home » , , , » உலக சூழல் தினம் - 2014

உலக சூழல் தினம் - 2014

Written By AKSHAYAN on Thursday, June 5, 2014 | 4:16 AM

ஐக்கிய நாடுகள் சபையினால் வருடந்தோறும்ஜுன் மாதம் 05 ஆம் திகதி சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சூழல் தினமானது "காலநிலை மாற்றமும் சிறிய தீவுகளும்" என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

 காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் கடல்மட்ட அதிகரிப்பினால் சிறிய தீவுகள் கடலினுள் மூழ்கக்கூடிய அபாய நிலை எதிர்நோக்கியுள்ளன. எனவே சிறிய தீவுகளைப் பாதுகாக்க வேண்யடிதன் முக்கியத்துவத்தை உணர்த்துமுகமாக இவ்வருட சூழல் தின கருப்பொருள் அமைந்துள்ளது. அந்தவகையில் ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சித்திட்ட அமைப்பின் உத்தியோகபூர்வ கோசமாக " குரல் கொடுங்கள்: கடல் மட்டத்தை அல்ல" என்றவாறு அமைகின்றது. 


இவ்வருடம் சூழல் தின கொண்டாட்டத்திற்கென விசேடமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாக சிறிய கரிபியன் தீவு நாடான பார்படோஸ் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(அக்‌ஷயன்)




Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info