Showing posts with label சர்வதேசம். Show all posts
Showing posts with label சர்வதேசம். Show all posts
மலேசிய எம்.எச்.370 விமானம்: அல் கொய்தாவுடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் கைது
2:08 AM
மலேசிய எம்.எச். 370 விமானம் காணாமல் போனமைக்கு பின்னணியில் இருந்த சந்தேகத்தில் அல் - கொய்தாவுடன் தொடர்புடைய 11தீவிரவாதிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். 
முஸ்லிம் நாடுகளில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த புதிய தீவிரவாத குழுவொன்றின் உறுப்பினர்களென நம்பப்படும் இந்த 11 பேரும் தலைநகர் கோலாலம்பூரிலும் கெடாஹ் மாநிலத்திலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எப்.பி.ஐ. மற்றும் எம்.16 உள்ளடங்கலான சர்வதேச புலனாய்வாளர்களின் கோரிக்கையையடுத்தே மாணவர்கள் வழமைக்கு மாறான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இளம் கைம்பெண் உயர் தொழில் உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்படி குழுவினரை மலேசிய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் 22 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர்.
அவர்களிடம் காணாமல் போன எம்.எச்.370 விமானம் தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
எம்.எச்.370 விமானத்தில் பட்டியல் படுத்தப்படாத நிலையில் ஏற்றப்பட்டிருந்த 2.3 தொன் சரக்கு தொடர்பில் மலேசிய விமான சேவை தரவுகளை வெளியிட மறுத்துள்ளமை பல்வேறு ஊகங்களை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் மத்தியில் 200 கிலோகிராம் லிதியம் பற்றி இருந்ததை அந்த விமானசேவை ஒப்புக் கொண்டுள்ள போதும் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டக் காரணங்களுக்காக அது தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளது.
எம்.எச். 370 விமானம் போராளிகளால் திசை திருப்பப்பட்டிருப்பதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் அதன் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத குழு தொடர்பில் பரந்தளவான அறிக்கையொன்றை அவர்கள் கோருவதாகவும் மலேசிய தீவிரவாதத்துக்கு எதிரான விசேட பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Labels:
சர்வதேசம்
இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்
10:19 PM
முன்னாள் திருத்தந்தைகள் 23ம் யோவான், மற்றும் 2ம் அருள் சின்னப்பர் ஆகியோரைப் புனிதர்களாக அறிவிக்கும் நிகழ்வு இன்று வத்திக்கான் நகரில் பெருந்திரளானோர் முன்னிலையில் இடம்பெற்றது.
திருத்தந்தை பிரான்சிசு, மற்றும் இவருக்கு முன்னிருந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆகியோர் இவ்வைபவத்தை நடத்தி வைத்தனர். 2 மணி நேரம் இடம்பெற்ற இவ்வைபவத்தை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதனை நேரில் கண்டு களித்தனர். அரசு, மற்றும் நாட்டுத்தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர்.
இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.
திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 2005 ஆம் ஆண்டு இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்கால 26 ஆன்டுகளாகும். 9 ஆண்டுகளில் இவரை புனிதர் பட்டம் வந்தடைந்தது. ஆனால், இத்தாலியில் பிறந்த 23ம் யோவான் 1958 முதல் 1963 வரை பதவியில் இருந்தார். இவர் நல்ல திருத்தந்தை என அழைப்பட்டவர். இவரைப் புனிதராக்கும் திட்டத்தை அண்மையிலேயே திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார்.
Labels:
சர்வதேசம்
மலேசிய விமானத்தில் இருந்து பயணி அனுப்பியிருக்கும் எஸ்எம்எஸ்: நாங்கள் அனைவரும் சிறையில்: திடுக்கிடும் தகவல்.
11:03 PM
இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. மேலும் பயணி ஒரு புகைப்படமும் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த புகைப்படத்தில் எந்த படமும் இல்லாமல் கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Phillip Wood என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியில் “நாங்கள் அனைவரும் ஒரு ராணுவ அமைப்பால் கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், நான் எனது ஐபோனை மர்ம உறுப்பில் மறைத்து கொண்டதாகவும்,
மற்றவர்களின் போன்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதாகவும், கூறியுள்ள அவர், மேலும் தன்னை ஒரு தனிமைச்சிறையில் வைத்துள்ளதாகவும், அந்த இடம் இருட்டாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது உடலில் போதைபொருள் செலுத்தப்பட்டுள்ளதால் தன்னால் அதிக அளவு சிந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். இதுதான் ”
(“I have been held hostage by unknown military personal after my flight was hijacked (blindfolded). I work for IBM and I have managed to hide my cellphone in my ass during the hijack. I have been separated from the rest of the passengers and I am in a cell. My name is Philip Wood. I think I have been drugged as well and cannot think clearly.”)
Phillip Wood எஸ்,எம்.எஸ் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்ததோடு அனைவரது பார்வையும் தற்போது அமெரிக்க ராணுவம் மீது திரும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா இதுகுறித்து எவ்வித விளக்கமும் இன்னும் கூறவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
மேலே உள்ள படத்தில் Diego Garcia தீவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிறத்தில் இருப்பதுதான் MH 370 விமான பயணி அனுப்பிய புகைப்படம்.

Labels:
சர்வதேசம்
இந்தியப் பெருங்கடலில் மலேசிய விமானம்: நஜீப்
7:53 AMநஜிப் கூறியதாவது:-
“இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார்.
Labels:
சர்வதேசம்
பேஸ்புக்கில் இணைந்ததால் பெண் கல்லால் அடித்துகொலை: சிரியாவில் சம்பவம்
9:43 PM
சிரியா நாட்டில் பெண்கள் பேஸ்புக் கணக்கை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சிரியாவின் ராக்கா சிட்டி என்னும் நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் அல் ஜஸ்ஸிம் என்பவர் ஃபேஸ்புக்கில் புதியதாக ஒரு கணக்கை தொடங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர் மீது குற்றம் சுமத்திய இஸ்லாமியர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்.இதையடுத்து அவரை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிரிய நாட்டு பெண்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான பெண்கள் கணக்கை வைத்துள்ளனர் ஆனால் சிரியாவில் மாத்திரம் இம்மாதிரியான சட்டம் உள்ளதை பல நாடுகள் கண்டனம் செய்து வருகிறது.
Labels:
சர்வதேசம்
விண்வெளிக்கு செல்லும் முதல் ஈழத்தமிழ்ப் பெண் | உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி
6:16 AM
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராட்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு ஈழத் தமிழ் மாணவி. அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” .
இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமைபெற்றிருக்கிறார். அத்தோடு விண்வெளி ஆராட்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். சர்வதேச விண்வெளி ஓடத்தில் சென்று இவரும் இவரோடு இங்கிலாந்து மாணவி டியானாவும் சேர்ந்து சில நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளனர். படத்தில் இருப்பவர் டியானா மற்றும் சியோபன்.
முதல் முறையாக தமிழர் ஒருவர் விண்வெளிக்கு செல்ல உள்ளது தமிழர்களுக்கு பெருமை தானே !
Labels:
சர்வதேசம்
மலேசியா: அதியுயர் நீதிமன்றத்தில் 'அல்லா' சர்ச்சை
7:10 PM
மலேசியாவில் கடவுளை குறிப்பதற்கு "அல்லா" எனும் சொல்லை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு என்று கோரி அங்குள்ள கத்தோலிக்கத் திருச்சபையினர் நாட்டின் அதியுயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
மலேசியாவின் பேராயர் இந்த விஷயத்தை ஃபெடரல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டுமே இறைவனை குறிக்க அல்லா எனும் வார்த்தையை பயன்படுத்த உரிமை உண்டு என பிரதமர் நஜீப் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியளிக்கிறது என்றும் பேராயர் மர்ஃபி பாக்கியம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மலேசிய உயர்நீதிமன்றம் "அல்லா" என்னும் சொல்லை அனைத்து மதத்தினரும் பயனபடுத்தலாம் என மலேஷிய உயர்நீதிமன்றம் நீதிமன்றம் ஏற்கெனவே அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக, ஆளும் அம்னோ அரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றதைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பு ரத்தானது.
இப்போது அதற்கு எதிராக நாட்டின் அதியுயர் நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றுள்ளது.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ.
பல மதங்களின் நூல்களில் அல்லா எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கத்தோலிக்கத் திருச்சபையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாக இந்த வழக்குடன் தொடர்புடையவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சார்லஸ் சந்தியாகோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சவுதி அரேபியா, இந்தோனேஷியா, இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மற்ற மதத்தவர் அல்லா எனும் சொல்லை பயன்படுத்தத் தடையில்லை என்று கூறியிருந்தாலும், மலேசியாவை ஆளும் கூட்டணி இதை அரசியலாக்குகின்றனர் எனவும் சந்தியாகோ சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கத்தோலிக்கத் திருச்சபை செய்துள்ள மேல்முறையீட்டை அந்த ஃபெடரல் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என மலேசியாவின் ஆறு மாநிலங்களிலுள்ள இஸ்லாமிய மன்றங்களும் ஒரு சீன முஸ்லிம் அமைப்பும் கோரியுள்ளன.
Labels:
சர்வதேசம்
ஏகே- 47 ரக துப்பாக்கியை கண்டுபிடித்தவர் மரணம்
6:48 PMஅவர் ஏகே- 47 ரக துப்பாக்கியை இரண்டாம் உலக யுத்த காலத்தில் வடிவமைக்கத் தொடங்கி அதில் வெற்றி கண்டார்.
எனினும், ஏகே-47 ரக துப்பாக்கியை கண்டுபிடித்தமைக்காக அவர் பிற்காலத்தில் வருத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் ஏ.கே-47 தானியங்கி துப்பாக்கி, 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி என இரு வகையாக உருவாக்கப்பட்டது.
ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏ.கே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் தயாரிக்கப்பட்டது.
இந்தத் துப்பாக்கிகள் 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவேயாகும்.
இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்ற பின் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த துப்பாக்கியில் தோட்டாப்பெட்டி வெற்றாக இருக்கும் போது அதன் எடை 4.3 கிலோ கிராமாக இருக்கும். நிலையான மரப்பிடியுடன் கூடிய ஏகே-47 துப்பாக்கியின் நீளம் 870 மிமீ (34.3 அங்குலம்) ஆகும்.
விரிமடிப்புப் பிடியுடன் அதன் நீளம் 875 மிமீ ஆகும். (34.4 அங்குலம்) மடிப்பு பிடியுடன் அதன் நீளம் 645 மிமீ (25.5 அங்குலம்)ஆகும்.
இந்த துப்பாக்கியின் சுடு குழல் நீளமானது 415 மிமீ (16.3 அங்குலம்) ஆகும்.
இந்த துப்பாக்கிகளுக்கு 7.62x39 மிமீ (M43) தோட்டாக்களை பயன்படுத்தலாம். தொடர்ந்து தோட்டாக்களை நிரப்பாத நிலையில் அடுத்தடுத்து சுடவல்ல 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல மற்றும் ஒத்தியலக்கூடிய 40- சுற்றுப் பெட்டி அல்லது 75-சுற்றுகள் வெடிமருந்துப் பெட்டி,ஆர் பி கே-(RPK) பயன்படுத்தலாம்.
Labels:
சர்வதேசம்
நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி நிகழ்வில் சுய புகைப்படமெடுத்து ஜாலியாக இருந்த உலகத் தலைவர்கள்
12:55 AM
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜொஹன்னஸ் பேர்க் நகரிலுள்ள எப்.என்.பி.மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது பல்லாயிரக்கணக்கானவர்கள் மறைந்த மாபெரும் தலைவருக்கு தமது மரியாதையை செலுத்தும் நோக்கில் அங்கு கூடியிருந்தனர்.
இதன் போது சில உலகத் தலைவர்கள் மறைந்த மாபெரும் தலைவர் ஒருவருக்கு தாம் அஞ்சலி செலுத்துவதற்கு தாம் வந்துள்ளதை மறந்தது போன்று சக தலைவர்களுடன் இணைந்து தம்மை கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படமெடுப்பதற்காக வாய்ப்பாக அந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஞ்சலி நிகழ்வின் போது மைதானத்தில் அருகருகே அமர்ந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனும் டென்மார்க் தலைவர் ஹெல்லி தோர்னிங் ஸ்கமிட்டும் சிரித்தவாறு கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்பட எடுத்துக் கொண்டமையானது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேற்படி 3 தலைவர்களும் கையடக்கத் தொலைபேசி புகைப்படத்தை எடுத்துக் கொண்ட போது தமது கணவரின் அருகில் அமர்ந்திருந்த மிசெல் ஒபாமா, அவர்களது செயலால் ஈர்க்கப்படாதவர் போன்று மைதானத்தை நோக்கி தனது பார்வையை திருப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமரும் டென்மார்க் பெண் தலைவருமான ஹெல்லியும் சிரித்தவாறு தம்மைத் தாமே புகைப்படமெடுத்துக் கொள்வதையும் பராக் ஒபாமாவும் ஹெல்லியும் நிலைமைக்கு சிறிதும் பொருந்தாத வகையில் சிரித்தவாறு உரையாடுவதையும் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பலரும் அவர்களது செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன ஒடுக்கு முறைக்காக போராடி மரணமான மாபெரும் தலைவரின் வாழ்க்கையை நினைவுகூரும் நிகழ்வில் மேற்படி 3 தலைவர்களும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
Labels:
சர்வதேசம்
மனித உரிமைகள் நாள்; டிசம்பர் 10
11:49 PM
அ.அர்ஜின்,
இறுதி வருடம்,
சட்டத்துறை,
யாழ் பல்கலைக்கழகம்.
டிசம்பர் 10 ஆம் திகதியை
மனித உரிமைகள் தினமாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 423(V) எனும் பிரேரணையை
10-12-1950 இல் நிறைவேற்றி பிரகடனப்படுத்தியது. இப்போது நாம் மனித உரிமைகள் என்றால்
என்ன என்பதை பற்றி பார்க்க போகின்றோம். மனித உரிமைகள் என்ற பதம் உ்ண்மையில் 1948ஆம்
ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
(Universal Declaration of Human Rights) மூலமே நவீன உலகிற்கு வெளிக்கொணரப்பட்டது.
அதில் 30 உரிமைகள் மனித உரிமைகளாக மையப்படுத்தப் பட்டிருப்பதோடு அதன் முகவுரையானது
இவ்வாறு மனித உரிமைகட்கு விளக்கமளிக்கின்றது.
ஓர் மனித உயிரி உலக
மனித குடும்பத்தின் ஓர் அங்கத்தவன் ஆகையால் அக்குடும்பத்திற்குரிய அனைத்து உரிமைகளையும்
அனுபவிக்க அவனும் தகுதியுடையவன்
.
.
இப்பிரகடனம் பிணிக்கும்
உபகரணமாக இல்லாது விடினும் (Non-binding instrument) ஓர் வழிகாட்டியாக முதன் முதலில்
30 உரிமைகளை மனித உரிமைகளாக நிலைநிறுத்தியது. அதன் முன்பு மனித உரிமைகள் வரலாற்றை நாம்
காண வேண்டியுள்ளது.
அவற்றில் வரலாற்றில்
முந்தியது சீயசின் உருளை (கி.மு. 539) எனப்படும் களிமண்ணால் ஆன, மக்களின் உரிமைகள்
பொறிக்கப்பட்ட உருளையாகும். இது அக்காடியன் மொழியில் உருவாக்கப்பட்டதோடு பேர்சியாவின்
முதல் மன்னான சைரஸால் அவனது குடி மக்களிற்கு வழங்கப்பட்ட சமய சுகந்திரம் மற்றும் அடிமை
நிலையை ஒழித்தல் என்பனவற்றின் நினைவாக வழங்ப்பட்ட உலகின் மிக தொன்மையான ஓர் மனித உரிமைகள்
ஆவணமாகும்.
அடுத்த திருப்பமாக
அமைந்தது மக்னா கார்ட்டா (1215) உடன்பாடாகும். இது பிரித்தானிய மன்னனின் அதிகாரங்களை
பாராளுமன்றின் கீழ் கொணர்ந்ததோடு சட்டத்தின் முன் மன்னன் உட்பட யாவரும் சமன் எனும்
நிலையையும் தோற்றுவித்தது. அத்தோடு ஜனநாயகத்திற்கான ஓர் முக்கிய திருப்பு முனையாகவும்
இது அமைந்து காணப்பட்டது.
அடுத்த திருப்பம் என்ற
வகையில் ஐக்கிய அமெரிக்காவின் சுகந்திர பிரகடனம் (1776), இதன் முக்கிய அம்சம் மக்கள்
விரோத அரசிற்கு எதிராக மக்களுக்கு புரட்சி செய்யும் உரிமையை (Right to revolution) கொண்டுள்ளார்கள் என்பதை
உலக அரசுகட்கு உணர்த்தியமை.
அடுத்த உபகரணம் ஐக்கிய
அமெரிக்காவின் அரசியலமைப்பாகும் (1787) இச்சாசனமே சித்திரவதையிலிருந்து விடுதலை மற்றும்
உயிர் வாழ்வதற்கான உரிமை என்பவற்றை நிலை நிறுத்தியது.
மேற்குறிப்பிட்டவாறான
வளர்ச்சியை கொண்ட எண்ணக்கருவான மனித உரிமைகள் பிரகடனம் மூலமாக நவீனம் எனும் எண்ணப்பாட்டுக்குள்
வந்தது. இப்பிரகடனம் கீழ்வரும் 30 உரிமைகளை கொண்டுள்ளது.
01.
எல்லோரும் பிறப்பின் போதும் நடாத்துகையின்
போதும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள்
02.
எந்த வகையிலும் மனிதர்களுக்குள் பாரபட்சம்
காட்ட கூடாது. ( இனம், மொழி, நிறம்)
03.
அனைவர்க்கும் உயிர் வாழும் உரிமை உண்டு.
04.
யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
05.
யாரும் யாரையும் சித்திரவதைப்படுத்த முடியாது.
06.
சட்டத்தின் முன் சகலரும் சமன்
07.
சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.
08.
சட்டத்தால் ஒவ்வொருவரது உரிமைகளும் மதிக்கப்பட
வேண்டும்.
09.
சட்டவிரோத தடுத்துவைப்பு மற்றும் கைது
என்பவற்றுக்கு யாரும் உள்ளாக கூடாது.
10.
அனைவரும் நீதியான மற்றும் வெளிப்படையான
நீதி விசாரணையை கோர உரித்துடையவர்கள்.
11.
விசாரணை நிறைவடையும் வரை அனைவரையும் சுற்றவாளிகளாக
கருத வேண்டும்.
12.
தனித்துவத்தை பேணுவதற்கான உரிமை.
13.
விரும்பியபடி பணயம் செய்யும் உரிமை
14.
பிறிதொரு நாட்டிற்கு செல்வதற்கும் ஆபத்தின்
போது உயிரை பாதுகாக்க அடைக்கலம் கோருவதற்குமான உரிமை
15.
ஒரு தேசியத்தை பேணுவதற்கான உரிமை
16.
திருமணம் செய்வதற்கும் குடும்பமாக வாழ்வதற்குமான
உரிமை
17.
தமது பொருட்களை சொந்தமாக கொண்டிருப்பதற்கான
உரிமை.
18.
விரும்பிய சமயத்தை பின்பற்றுவதற்கான உரிமை
19.
சுகந்திரமாக சிந்திப்பதற்கும், தகவல்களை
பெறுவதற்குமான உரிமை.
20.
சங்கங்களை உருவாக்கவும் அமைதியாக ஒன்று
கூடுவதற்புமான உரிமை.
21.
அரசாட்சியில் பங்கு பற்றுவதற்கான உரிமை
22.
சமூக பாதுகாப்பிற்கான உரிமை.
23.
பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான
உரிமை
24.
ஓய்வெடுக்கவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான
உரிமை
25.
போதுமான வாழ்க்கை தரத்தை பேணவும் மருத்துவ
வசதிகளை பெறவுமான உரிமை
26.
கல்வி கற்பதற்கான உரிமை
27.
தமது பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கான
உரிமை.
28.
அனைவரும் சமூக கட்டமைப்பை ஒழுங்காக பேண
கடமைப்பாடு உடையவர்களாகிறார்கள்.
29.
அனைவரும் மற்றவரது உரிமைகளை மதிக்கவும்,
பாதுகாக்கவும் கடமைப்பா உடையவர்களாகிறார்கள்
30.
இவ்வுரிமைகள் யாராலும் பறிக்கப்பட முடியாதவை.
இப்பிரகடனம் பின்னர்
இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகட்கான சர்வதேச பொருத்தனை
1966 (ICCPR) மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகட்கான சர்வதேச பொருத்தனை
1966 (ICESCR) என பிணிக்கும் ஒப்பந்தங்களாக (Binding
Laws) மாற்றம் கண்டது. இலங்கை அரசும் இதன் முதல் பொருத்தனையை
ஏற்று அதை பாராளுமன்றம் ஊடாக 2007 இல் இலங்கை சட்டங்களில் ஒன்றாக உருவாக்கியது.
இதில் முதல் பொருத்தனையை
(ICCPR) நிறைவேற்ற அரசு
எதையும் செய்யாது விட்டாலே போதுமானது. உதாரணமாக மக்களின் உரிமைகளை மறுக்காதிருத்தல்,
ஊடக சுகந்திரத்தை நசுக்காதிருத்தல் என்பவற்றை கூறலாம். அதை நாம் மறை உரிமைகள் (Negative Rights) எனலாம்.
இரண்டாம் பொருத்தனையை (ICESCR)
பொறுத்தமட்டில் இது நேர் உரிமைகளாகும் (Positive
Rights). இதை நிறைவேற்ற அரசு தலையிட வேண்டும். உதாரணமாக பொருளாதார வளம், வேலைவாய்ப்பு
உருவாக்கம் என்பவற்றை குறிப்பிடலாம்.
மேற்கூறிய அனைத்து மனித உரிமைகளையும் அனைத்து நாடுகளும் தத்தமது
உள்நாட்டு சட்டங்கள் ஊடாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் எண்ணப்பாடு (Ideal) ஆனால் நடைமுறையில் (Reality)
அது முழுமையாக சாத்தியப்படுவது கிடையாது.
எமது நாட்டின் மீயுயர் சட்டமான 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு
அதன் பகுதி 3 இனுாடாக அடிப்படை உரிமைகள் எனும் தலைப்பின் கீழ் சில மனித உரிமைகளை பட்டியலிட்டுள்ளது.
அவ்வுரிமைகள் மீறப்படிக் உயர் நீதிமன்று ஊடாக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல்
செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
உதாரணமாக அடிப்படை உரிமைகளாக, பாரபட்சத்திற்கெதிரான உரிமை
(உறுப்புரை 12), சித்திரவதைக் கெதிரான உரிமை (உறுப்புரை 13), சிந்தனை,மனட்சாட்சி மற்றும்
சமய சுகந்திரம் (உறுப்புரை 10), பேசுவதற்கு, ஒன்று கூடுவதற்கு உள்ள சுகந்திரம் (உறுப்புரை
14) ஆனாலும் இவ்வுரிமைகளில் பல உரிமைகள் தேசிய நலன் அல்லது தேசிய பாதுகாப்பு என்ற பெயரில்
உறுப்புரை 15 இனுாடாக பறித்தெடுக்கப்படுகின்றது. அத்தோடு உயிர் வாழ்வதற்கான உரிமை எமது
அரசியலமைப்பில் நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்திய அரசியலமைப்பு உயிர்வாழும்
உரிமையை நேரடியாக அடிப்படை உரிமை என வகைப்படுத்தியுள்ளது.
மேற்குறிப்பிட்ட 30 மனித உரிமைகளில் சில மட்டுமே அடிப்டை
உரிமைகள் என அரசியலமைப்பு கூறுகின்றது. அத்தோடு பல உரிமைகள் அரசின் வழிகாட்டிக் கோட்பாடுகள்
என சட்டம் கூறினும் அவை மீறப்பட்டால் நிவாரணம் எதையும் பெறமுடியாது. இது “நிவாரணமில்லையேல்
உரிமையில்லை” எனும் அடிப்படை
சட்டக் கோட்பாட்டை மீறுவதாயுள்ளது.
மனித உரிமைகள் என பார்க்கும் போது பெரும்பாலும் நாம் உரிமைகளை
மீறும் அரசுகள் அவற்றால் பாதிக்கப்படும் குடிமக்கள் எனும் பார்வையில் தான் நோக்குகின்றோம்.
ஆனால் சாதரண மனிதர்களும் தமது சக மனிதர்களை மனிதர்களாக மதிக்க பழக வேண்டும். உண்மையில்
அரசை விட ஒப்பீட்டு விகிதாசார அளவில் தனி மனிதர்களே அடுத்த தனி மனிதர்களின் உரிமைகளை
புறக்கணிப்பதில் முன்னணி வகிக்கின்றார்கள். மனித உரிமைப் புறக்கணிப்பானது பாடசாலைக்காலத்தில் ஓர் மாணவனை மட்டும் விளையாட்டில்
சேர்க்காது மற்ற மாணவர்கள் அனைவரும் விளையாடுதல் எனும் மிக அற்பமான உதாரணத்தில் இருந்து
தொடங்குகின்றது. எனவே முதலில் தனி மனிதர்கள் மற்ற தனி மனிதர்களை தம்மை போல் பாவிக்க
துவங்கின் அரசுகளும் மனித உரிமைகளை புறக்கணிப்பது இயலாததாகிவிடும். ஏனெனில் அரசு என்பது
மக்களின் சமூக ஒப்பந்தம் தானே ஒழிய வேறோர் எண்ணகரு அல்ல.
Labels:
சர்வதேசம்
கறுப்புச் சரித்திரம் சரிந்தது..!
7:08 PMதென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் என்று அழைக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
இந்தத் தகவலை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக கடும் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அவருடைய உடல்நிலை பாதிப்படைந்து வருவதாக நேற்று முன்தினம் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு அந்நாட்டு நேரப்படி 8.05 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1918 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியிரசுத் தலைவராவார். தென்னாபிரிக்காவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையுடன் நிறவெறிக்கு எதிராக போராடியமையால் உலகம் போற்றும் தலைவராகவும் இவர் திகழ்ந்தார்.
Labels:
சர்வதேசம்
பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம்! - 93 பேர் பலி.
7:55 AMஇங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம், முன்னாள் சிட்டி ஹால் உள்ளிட்ட பல புராதன சின்ன கட்டிடங்களும் இடிந்தன. சிபு அருகேயுள்ள மீன்பிடி துறைமுகம் முற்றிலும் சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தில் இதுவரை 93 பேர் பலியாகி உள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது
முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியில் தப்பிச்செல்ல முடியாது: உள்துறை அமைச்சர் தெரிவிப்பு
10:19 PMஎனவே, நீதிமன்ற உத்தரவு இல்லாமல், அவரால் எங்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. அண்மையில் வெளிநாடு செல்லவிருந்த அவர் வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஆசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள்
5:27 PMஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடை கட்டுபாடு விதித்தது.
அக்டோபர் முதலாம் திகதி முதல் வகுப்பறைகளுக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், குட்டை பாவாடை, டீ ஷர்ட் அணிய கூடாது. அதிக மேக் அப் போட்டு கொள்ள கூடாது உள்பட பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
பல்கலை நிர்வாகத்தின் இந்த புதிய உத்தரவுக்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களது பேராசிரியை தலைமையில் ஆடை கட்டுபாட்டை கண்டித்து வகுப்பறைக்கு நிர்வாணமாக வந்து பாடம் படித்தனர்.
நிர்வாகம் தனது விதிகளை தளர்த்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் பல்கலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவ, மாணவிகள் நிர்வாணமாக வகுப்பறைகளில் பங்கேற்ற புகைப்படங்கள் உள்ளூர் நாளேடுகளில் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எதிர்ப்பு பெரிதானதை அடுத்து மாணவர்களுடன் பல்கலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
Labels:
சர்வதேசம்
தமிழக விஞ்ஞானிக்கு நாசாவிடமிருந்து அழைப்பு!
9:15 PMஇவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஐ.நா., தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஐந்தாவது இளைஞர் மாநாட்டில் பங்கேற்று, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கான ஐ.நா.வின் இளம் விழிப்புணர்வாளர் விருதையும் பெற்றுள்ளார். சர்வதேச விஞ்ஞானிகளின் கருத்தரங்கில் சலீம்கான் உட்பட உலகிலிருந்து மொத்தம் 40 இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து ராணியை சந்திக்க மலாலாவுக்கு அழைப்பு!
9:11 PMபாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை தடை செய்துள்ள தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய் (16) தைரியமாக எதிர்த்தார். அத்துடன், பெண் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அவரை தலையில் சுட்டனர்.
தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி எடுத்துள்ள மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார். அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவதால் அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.
அவரது 16-வது பிறந்தநாள் �மலாலா தினமாக� உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் அமர்வில் மலாலா உரையாற்றினார். மேலும் வரும் 11-ம் தேதி வழங்கப்படவுள்ள நோபல் பரிசு பெற தகுதியானோர் பட்டியலில் மலாலாவின் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராணி எலிசபெத்தை சந்திக்க மலாலா அழைக்கப்பட்டுள்ளார். ராணியும் அவரது கணவரும், இளவரசருமான பிலிப்பும் சேர்ந்து வரும் 18-ம் தேதி காமன்வெல்த் நாடுகளுக்கான கல்வி வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராணியின் பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் மலாலா யூசுப்சாய் கலந்துகொள்வார் என்று அரண்மனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
Labels:
சர்வதேசம்
10ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படமெடுத்த மிரட்டிய பள்ளித் தோழர்கள்! மாணவி தற்கொலை!!
7:56 AM10ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படமெடுத்த மிரட்டிய பள்ளித் தோழர்கள்! மாணவி தற்கொலை!!
பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்த 5 மாணவர்கள் அவற்றை வெளியிடப் போவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததால் அந்த மாணவி விஷம்
குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 230 கி.மீட்டர் தூரத்தில் உள்ள எடவா மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஒருவரின் மகள் ஜஸ்வந்த் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
அவருடன் நெருங்கி பழகிய வகுப்பு தோழர்கள் 5 பேர், அந்த மாணவியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி, தங்களது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துக் கொண்டனர்.
பின்னர், அந்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடப் போவதாக மாணவியை அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
தங்களின் குடும்ப மானம் பறிபோவதை விரும்பாத அந்த மாணவி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனக்கு வரும் மிரட்டல்களைப் பற்றி குடும்பத்தாரிடம் தெரிவித்தும், மாணவியின் தந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தும் மிரட்டிய 5 மாணவர்களை கைது செய்யாதது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Labels:
சர்வதேசம்
அமேரிக்க அரசின் நெருக்கடி நிலை
8:23 AM
இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு மூடப்படலாம்
அமரிக்க நேரப்படி இன்று நள்ளிரவிற்குள் அந்த நாட்டின் அரசிற்கு மூடுவிழா நடத்தப்படலாம். அமரிக்காவின் விரல்விட்டெண்ணக் கூடிய பெரும் செல்வந்தர்கள் உலகம் முழுவதும் நடத்திய பகற்கொள்ளை இன்று அவர்கள் வாழும் நாட்டையே கேள்விகுள்ளாகியுள்ளது. இந்த நிலை தவிர்க்க முடியாத நெருக்கடிக்கான தீர்வா என்ற ஆய்வுகள் எல்லாம் ஏற்கனவே வெளியாக ஆரம்பித்துவிட்டன. இன்றையை நள்ளிரவு வரையிலான ஊசலாட்டத்தின் பின்புலம் செனட் சபைக்கும் காங்கிரசுக்குமான பனிப்போராக வெளிப்படுத்தப்படுகிறது.
அமரிக்க ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாகவுள்ள செனட் சபை குடியயரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அரச பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்துள்ளது. 54- 46 என்ற எண்ணைக்கை அடிப்படையில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அமரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் முன்மொழியப்பட்ட சுகாதார திட்டத்தை ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு செனட் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முடிவை இன்று நள்ளிரவிற்குள் வழங்காவிட்டால் அமரிக்க அரசைக் கலைக்கவேண்டிய நிலை ஏற்படும்.
இதன் முதல் விளைவாக 7 லட்சம் அமரிக்க அரச ஊழியர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி வேலையிழப்பர். அவர்கள் மறுபடி வேலை பெற்றுக்கொள்வதற்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படாது.
அமரிக்கப் பங்கு சந்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் பங்குசந்தைப் பெறுமானங்கள் இன்று முடிவுகளுக்கு முன்பதாகவே வீழ்ச்சியடைந்துள்ளது. டோலரின் பெறுமானம் ஏனைய நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அரசிற்கு மூடுவிழா நடைபெறுமானால் அமரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பெரும் நெருக்கடிகள் உருவாகும். முதலாம் உலகப் போரின் பின்னதாக அமரிக்காவின் தலைமையிலான பல்தேசியப் பகற்கொள்ளைக்கு உட்படுத்தப்பட்ட உலகம் இன்றுவரை அந்த நாட்டின் அரசியல் நகர்விலேயே அசைந்துகொண்டிருக்கின்றது.
அரசிற்கு மூடுவிழா நடைபெறுமானால் அமரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பெரும் நெருக்கடிகள் உருவாகும். முதலாம் உலகப் போரின் பின்னதாக அமரிக்காவின் தலைமையிலான பல்தேசியப் பகற்கொள்ளைக்கு உட்படுத்தப்பட்ட உலகம் இன்றுவரை அந்த நாட்டின் அரசியல் நகர்விலேயே அசைந்துகொண்டிருக்கின்றது.
பல்தேசிய நிறுவனங்கள் எஞ்சியவற்றைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகத் தலைப்படும். வங்கிகளில் வைப்பிட்ட பணங்களை மீளப் பெறமுடியாதிருக்கும். பொருட்களின் விலை அதிகரிக்கும். சட்டம் ஒழுங்கு பாதிப்படையும்.
இன்றிரவு உலகம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கொள்ண்டாலும் மிகக் குறுகிய காலத்துள் இது நிகழப் போவது தவிர்க்க முடியாத ஒன்று.
இன்றிரவு உலகம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கொள்ண்டாலும் மிகக் குறுகிய காலத்துள் இது நிகழப் போவது தவிர்க்க முடியாத ஒன்று.
ஓகஸ்ட் மாதம் 17 ம் திகதி அமரிக்க அரசின் கடன் தொகை அதன் உச்சத்தை அடையும். அதன் பின்னர் அமரிக்க அரசு சட்டப்படி கடன் பெற முடியாது. பெறப்படும் கடனுக்கு உத்தரவாதம் வழங்க முடியாது.
இதனால் கடனாளியாக அமரிக்கா என்ற நாட்டையே திவாலாக்குவதா அன்றி சென்ட் சபையின் சிக்கல் என்ற எல்லைக்குள் அரசை நிறுத்துவதா என்ற கேள்வியே இன்றைய கேள்வி.
இதனால் கடனாளியாக அமரிக்கா என்ற நாட்டையே திவாலாக்குவதா அன்றி சென்ட் சபையின் சிக்கல் என்ற எல்லைக்குள் அரசை நிறுத்துவதா என்ற கேள்வியே இன்றைய கேள்வி.
ஆக, இன்று இரவே அமரிக்க அரசைக் கலைத்துவிடுவதே வசதியானது என்றும், இதனால் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகைகளை நீண்ட காலத்திற்குப் பிற்போடலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறாயினும் இதுவரை உலகைச் சூறையாடிய அமரிக்கப் பேரரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்
ஐரோப்பாவின் ஒவ்வோர் அரச தலைவருக்கும் தெளிவாகத் தெரியும் அதன் பொருளாதாரம் சேடமிழித்துக் கொண்டிருக்கிறது என்று. அமரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஏகாதிபத்தியப் பொருளாதாரம் செத்துக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகங்கள் இருக்கமுடியாது. அழிந்து போவதிலிருந்து தம்மைத் தற்காலிகமாகப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே இன்று மேற்கொள்ளப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்று வரைக்கும் உலகின் பல தலைவர்களும் பொருளாதார வல்லுனர்களும் பல தடவைகள் ஒன்றை
மறுபடி மறுபடி கூறிவிட்டார்கள். “கார்ல் மார்க்ஸ் சொன்னது சரியானதே” எனபது தான் அது. மார்க்சியத்தை அதனைக் குதகைக்கு எடுத்துகொண்டவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ, ஏகபோகங்களின் அதிகார மையங்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றன. பிரஞ்சு அதிபர் நிகொலா சார்கோசியின் இரண்டாவது மனைவி கார்ல் மார்க்சை விரும்பிப் படிக்கிறார் என பல் தேசியப் பத்திரிகைகள் பரபரப்பாகப் பேசின. திடீரென கனவுலகிலிருந்து எழுந்த பிரித்தானிய ஆர்க் பிஷப் கார்ல் மார்க்ஸ் சொன்னது நடந்துகொண்டிருக்கிறது என்றார்.
கார்ல் மார்க்ஸ் சொன்னது என்ன? முதலாளித்துவப் பொருளாதாரம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் (boom and recession) சந்திக்கும். ஒவ்வொரு 18 இலிருந்து 20 வருட இடைவெளிக்குள் இவ்வாறன எழுச்சியும் வீழ்ச்சியும் சுழல் முறை நடைபெறும் எனக் கணித்திருந்தார். இன்றுவரைக்கும் அந்தக் கணிப்புத் தவறவில்லை. எழுச்சியும் வீழ்ச்சியும் நடந்துகொண்டே இருந்தன.
உலகின் ஒவ்வொரு முலையில் நடக்கின்ற அழிவுகளைத் தோண்டிப்பார்த்தால் அதன் ஆழத்தில் ஏகாதிபத்தியத் தலையீட்டைக் காணமுடியும். இவ்வாறான நிலையில், கார்ல் மார்க்சை இவர்கள் உணர்வு பூர்வமாகப் பாராட்டினார்களா என்ற கேள்வி பல மத்தியில் தோன்றி மறைந்தது. இறுதியில் அதற்கு உள்நோக்கம் இருப்ப்தைப் பலர் கண்டுகொண்டனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது போன்ற தற்காலிக வீழ்ச்சி அல்ல இன்று ஏகபோக நாடுகள் சந்தித்துக் கொண்டிருப்பது. மீட்சியடைய முடியாத நெருக்கடி. .
தவிர்க்க முடியாத இந்த நெருக்கடி நிலை மீட்சிக்கான மாற்றுத் திட்டங்கள் இன்றி செத்துக்கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னர் பல தடைவைகள் குறிப்பாக ஒவ்வொரு 20 ஆண்டு இடைவெளிக்குள்ளும் முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திருக்கிறது. பணச் சுழற்சியின் ஒரு கட்டத்தில் பொருட்களின் வினியோகம் அதற்கான கேள்வியை விட அதிகமடையும் நிலையே இவ்வாறான நெருக்கடிகளுக்கு மூல காரணமாகக் கருதப்பட்டது.
இவ்வாறான பொருளாதாரச் சரிவு பல ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த நீண்ட ஆண்டு இடைவெளிக்குள் பல போராட்டங்கள் உருவாகும். போராட்டங்கள் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் நிலைக்குத் தள்ளப்படும். புரட்சியினூடான சமூக மாற்றம் உருவாகும் நிலை காணப்படும். 1960 களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து 70 கள் வரை ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி பல போராட்டங்களை சோசலிசப் புரட்சி வரை நகர்த்தியிருக்கின்றன.
பொருளாதார நெருக்கடி உருவாகும் காலங்களில் உற்பத்தி குறைவடையும், இதனால் வேலையற்றோர் தொகை அதிகரிக்கும், மக்களிடம் வாங்கும் சக்தி குறைவடையும். இதனால் உற்பத்தி மேலும் குறைவடையும். இந்த நெருக்கடிகளுகு எதிராக மக்கள் போராட்டம் தோன்றும். இந்த சூழலை எதிர் கொள்வது எப்படி என்பதைத் தான் கீனெஸ் முன்வைக்கிறார். 1920 இல் உருவான உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வதற்கு உலகப் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
1930 இல் கீன்ஸ்புதிய பொருளாதார கருத்துக்களோடு முன்வருகிறார். ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் பொருளாதாரத்தில் புரட்சி நாயகனாகப் போற்றப்படுகிறார்.
1970 களின் பின்னர் கீன்ஸ் இன் கோட்பாடு பொதுவாக அனைத்து ஏகாதிபத்திய நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அரசுகள், பொருளாதார அமைப்புக்கள் எல்லாம் அவரது கோட்பாட்டை முன்வைத்தே உருவாக்கப்படுகின்றன.
1930 ஆம் ஆண்டு கீன்ஸ் வெளியிட்ட நூலின் பிரதான கருப்பொருளாக அமைந்தது பணம் குறித்தாக அமைந்திருந்தது. மக்களின் சேமிப்புத் தொகை முதலிடப்படும் தொகையை விட அதிகமாகும் போது உற்பத்தி குறைகிறது. முதலாளிகளின் லாபம் குறைகிறது. வேலைஉஒன்மை ஏற்படுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளிகள் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக மக்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இதனால் வேலை உருவாகும். வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து போகும் என்கிறார்.
தொடர்ச்சியாக இவர் வெளியிட்ட நுல்கள் அனைத்தும் மூலதனக் கொள்ளைக்காரர்களான முதலாளிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்பதையே அடிப்படையான கருத்தாகக் கொண்டிருந்தன. 1933 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட நூலான “Means to Prosperity” ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஆலோசனை கூறியது. முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பற்ற வகையில் வேலையின்மையை ஒழிப்பதற்கான கருத்துக்களைக் கொண்டிருந்தது. இவற்றினூடாக எதிர்பாக்கப்பட்ட வர்க்கப் புரட்சியை எவ்வாறு நிறுத்துவது என்பதும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதுமே நூலின் சாராம்சமாக அமைந்திருந்தது.
1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நூல் தெளிவான திட்டத்தை முன்வைத்தது.
இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் போருக்கு எப்படி பணம் வழங்குதல் என்ற நூலை வெளியிட்டார். அரச பணத்தையோ, பெரு நிறுவனங்களின் பணத்தையோ பயன்படுத்துவது தவறானது என்று வாதிட்ட கீன்ஸ், மக்கள் பணத்தை குறிப்பாக மக்கள் சேமிப்பிலிருக்கும் பணத்திற்கு அதிக வரியிடுவதனூடாகவே போருக்குரிய செலவை ஈடுசெய்யவேண்டும் என வாதிட்டார்.
கீன்ஸ் இங்கிலாந்து வங்கியின் ஆலோசகரானார். அமரிக்கா சென்று தனது பொருளாதாரக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தார். பிரித்தானிய மன்னரின் உயர்தர விருதைப் பெற்றார். பிரபுக்கள் சபை அங்கத்துவம் வழங்கியது.
முதலாளித்துவப் பொருளாதாரம் நிலைக்க முடியாது என்று கார்ல் மார்க்ஸ் உலகிற்குக் கூறிய உண்மையைப் கீன்ஸ் பொய்யாக்கிவிட்டதாகக் கூறிய அரை நூற்றாண்டுகளுக்கு உள்ளாகவே முதலாளித்துவம் இனிமேல் நிலைக்க முடியாது என்ற நிலைக்கு வந்தடந்து விட்டது. ஐரோப்பிய நாடுகளும் அமரிக்காவும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன.
பெரு முதலாளிகளை தொந்தரவு செய்யாமல் உலகை புதிய வடிவில் ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் அவ்வாறான ஒழுங்கமைப்பில் மேற்கின் அரசுகள் பிரதான பாத்திரம் வகிக்க வேண்டும் என்றும் கீன்ஸ் கூறிய கருத்துக்கள் உலக வங்கியாகவும், சர்வதேச நாணய நிதியமாகவும் உருவாகின. 1944ஆம் ஆண்டு 45 நாடுகளை இணைத்து ஐ.எம்.எப் உருவானது.
வறிய நாடுகளை அந்த நாட்டின் தரகு ஆட்சியாளர்களின் துணையோடு ஒட்டச் சுரண்டி அப்பணத்தின் ஒரு பகுதிய மேற்கு நாடுகளின் அரச திறைசேரிக்கும் இன்னொரு பகுதியை பெரு நிறுவனங்களின் முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்கும் ஏற்ற வகையில் ஐ.எம்.எப் ஒழுங்கமைக்கப்பட்டது.
கீன்ஸ் இன் கோட்பாடு கார்ல் மார்க்ஸ் சொன்ன சுழற்சி முறைப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்றுக்கொண்ட அதே வேளை அதனை எதிர்கொள்வதற்கான திட்டத்தை முதலாளிகளின் முதலீடூகளுக்கும் லாபத்திற்கும் பாதிப்பற்ற வகையில் முன்வைத்தது.
-அரசின் கையிருப்பில் ஒரு குறித்த பணத் தொகை வைத்திருக்க வேண்டும்.
-அத் தொகை ஏனைய வறிய நாடுகளைச் சுரண்டும் முறை ஒன்றிற்கான ஒழுங்கமைப்பின் ஊடாக அதிகரிக்கப்பட வேண்டும்.
-அவ்வாறான பணமும் மக்களின் சேமிப்பும் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இவை கீனேசியன் கோட்பாடுகளில் முதல் அடிப்படையாகத் திகழ்ந்தன.
எவ்வாறு மக்கள் அரச பணமும் சேமிப்பும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டது.
எவ்வாறு மக்கள் அரச பணமும் சேமிப்பும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டது.
பொருளாதார நெருக்கடிகள் உருவாகும் காலகட்டங்களில் இப்பணம் பொருளாதார உக்கியாகத் (Stimulate) தொழிற்பட வேண்டும் என்கிறது.
அதன் உட்பொருள் அருவருப்பானது.
அதன் உட்பொருள் அருவருப்பானது.
முதலாளிகள் மக்களை கொள்ளையடித்துத் தமது பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். வேலையில்லாத திண்ட்டாட்டம் உருவாக ஆரம்பித்ததுமே அரசு பொதுத் துறைகளில் முதலீடுகளை ஆரம்பிக்க வேண்டும். “அபிவிருத்தி” என்று அவர்கள் அழைக்கும் பெருந் தெருக்கள், ஏனைய கட்டுமானப் பணிகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.
மந்த நிலையில் இருக்கும் அல்லது திவாலாகும் அரச நிறுவனங்கள் போன்றவற்றை மறு சீரமைக்க வேண்டும். இவ்வாறான சீரமைப்பிற்கு தொழிலாளர்கள் தேவைப்படுவர்.
இதனூடாக வேலையில்லாத் திண்டாடத்தை முடிவிற்குக் கொண்டுவரலாம். வேலை செய்வோரின் தொகை அதிகரித்ததும், மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். அவ்வாறு அது அதிகரித்ததும் உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தியைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகள் தொடர்ச்சியாக லாபம் பெற்றுக்கொள்ளலாம். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு இடைவெளியின்றித் தொடரும்.
இதுதான் முதலாளித்துவத்தை நிலை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக கீன்ஸ் முன்வைத்த நடைமுறைத் தந்திரோபாயமாகும்.
90 களின் இறுதி வரை முதலாளித்துவ அமைப்பு கீனேசியன் கோட்பாட்டைப் பற்றிக்கொண்டு அழிவுகளின் மத்தியில் நகர்ந்து வந்தது. அதன் பின்னர் கீனேசியன் கோட்பாடு செயலிழந்து போனது. இப்போது புதிய கோட்பாடுகளையும் புதிய ஒழுங்கு விதிகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். முடிவற்ற தேடல் விடையற்றே காணப்படுகின்றது. மாற்றுத் திட்டங்களைக் கண்டுகொள்ளாதவர்கள் இப்போது ஐரோப்பிய மக்கள் மீதும் ஏனைய நாடுகள் மீதும் வன்முறைகளைத் தீவிரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று ஏகாதிபத்திய நாடுகள் தமது அழிவிற்கான நாட்களை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது. அழிந்து போவதற்கு இன்னமும் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.புற்று நோய் பீடித்த நோயாளி போன்று மரணம் நிரந்தரமாகிவிட்டது. நாட்கள் கணக்கிடப்படுகின்றன.
Labels:
சர்வதேசம்

