Headlines News :
Home » , » பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம்! - 93 பேர் பலி.

பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம்! - 93 பேர் பலி.

Written By Unknown on Tuesday, October 15, 2013 | 7:55 AM

News Serviceபிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா தலமான சிபு மாகாணத்தில் இன்று காலை 8.15 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. போகோல் தீவில் கார்மென் நகரில் பூமிக்கு அடியில் 56 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதைத் தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடும் சேதம் அடைந்தது.
இங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம், முன்னாள் சிட்டி ஹால் உள்ளிட்ட பல புராதன சின்ன கட்டிடங்களும் இடிந்தன. சிபு அருகேயுள்ள மீன்பிடி துறைமுகம் முற்றிலும் சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தில் இதுவரை 93 பேர் பலியாகி உள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info