பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை தடை செய்துள்ள தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய் (16) தைரியமாக எதிர்த்தார். அத்துடன், பெண் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அவரை தலையில் சுட்டனர்.
தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி எடுத்துள்ள மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார். அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவதால் அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.
அவரது 16-வது பிறந்தநாள் �மலாலா தினமாக� உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் அமர்வில் மலாலா உரையாற்றினார். மேலும் வரும் 11-ம் தேதி வழங்கப்படவுள்ள நோபல் பரிசு பெற தகுதியானோர் பட்டியலில் மலாலாவின் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராணி எலிசபெத்தை சந்திக்க மலாலா அழைக்கப்பட்டுள்ளார். ராணியும் அவரது கணவரும், இளவரசருமான பிலிப்பும் சேர்ந்து வரும் 18-ம் தேதி காமன்வெல்த் நாடுகளுக்கான கல்வி வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராணியின் பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் மலாலா யூசுப்சாய் கலந்துகொள்வார் என்று அரண்மனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
Post a Comment