Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label சினிமா. Show all posts
    Showing posts with label சினிமா. Show all posts

    மாமனிதராக தெரிகிறார் அஜீத்! -கெளதம்மேனன் உருக்கம்

    எது எது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும் என்பதற்கேற்ப, எப்போதோ இணையவிருந்த அஜீத்-கெளதம்மேனன் இருவரும் இப்போதுதான் இணைந்திருக்கிறார்கள்.
    அதுவும், தங்களுக்கிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இப்போது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக களத்தில் உள்ளனர்.
    மேலும், சமீபகால வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என் மனநிலையில் அஜீத்தும், கடந்தகால தோல்வியில் இருந்து இந்த படம் மூலம் மீண்டு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கெளதம்மேனனும் ஒரு பாசிட்டீவ் எனர்ஜியுடன் படப்பிடிப்பு தளத்தில் உள்ளனர்.
    ஒவ்வொரு ஷாட் முடிந்ததும், இருவரும் தனித்து அந்த காட்சியைப்பற்றி விவாதிப்பது. திருப்தி இல்லை என்றால் இன்னொரு ஷாட் எடுத்துக்கொள்வதுமாக ஒருமித்த கருத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
    இந்த நிலையில், நடிகர், டைரக்டர் என்ற பாகுபாடில்லாமல் தனது குடும்ப உறுப்பினரைப்போலவே அஜீத் என்னுடன் பழகுகிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற வேறுபாடு பார்க்காமல் அவர் அனைவரிடமும் ஒரேவிதமாக பழகுவது ஆச்சர்யமாக உள்ளது.
    அதைப்பார்க்கையில் அஜீத் என் கண்களுக்கு ஒரு மாமனிதராக தெரிகிறார் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் கெளதம்மேனன்.

    "அப்பா" குறும்பட விமர்சனம்

    தாயில்லாத பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து உயர் பதவியை அடைய வைக்க பாடுபடும் தகப்பனின் கதையே இந்த  “அப்பா” குறும்படம் ஆகும்.

    "அப்பா" குறும்படத்தின் முழுமையான காணொளி

    அப்பா” குறும்படம் அருமையான படைப்பு “அப்பா” வை குறியீடாக வைத்து பிள்ளைகளின் வழிதவறிச் செல்லும் நிலைக்கு முற்றுப்புள்ளியிடத்தக்க முயற்சியாக அது அமைந்துள்ளது.  மட்டக்களப்பின் குமாரவேலியார் கிராமம் எனும் ஒரு கிராமத்திலிருந்து உருவாகியுள்ள இந்தப் படைப்பின் வெளியீட்டு விழாவானது அண்மையில் செங்கலடி செல்லம் திரையரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
    Appa full tamil shortfilm




    அப்பா - குறும்படவெளியீடு

    குமாரவேலியார் கிராமத்து கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகிய அப்பா திரைப்படம் எதிர்வரும் 30.03.2014 அன்று பிற்பகல் 3 மணியளவில் திரையிடப்படவுள்ளது. செங்கலடி செல்லம் திரையரங்கில் இடம்பெறவுள்ள இக் குறும்பட வெளியீட்டிற்கு பிரதம அதிதியாக பேராசிரியர் மௌனகுரு அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். 

    "அப்பா" - குறும் திரைப்பட முன்னோட்டம்

    (Vithusan) குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள  அப்பா எனும் குறும் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் குறும்படம் வெளியிடப்படவுள்ளதாகவும், திரைப்படக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

    விரைவில் வெளிவரவிருக்கும் "அப்பா" குறும்திரைப்படம்

    குமாரவேலியார் கிராமத்துக் கலைஞர்களின் பங்களிப்புடன் "அப்பா" எனும் குறுந்திரைப்படம் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கின்றது.

    இலங்கை சினிமாவின் அதிரடியான ஆரம்பம் "Seven" Trailer

    இலங்கை சினிமாவின் அதிரடியான ஆரம்பம் இது Seven
    Trailer பாருங்க உங்களுக்கு புரியும் 


    seven Official Trailer
    Cast: Niro Shan ,Thanunjeyan,Nirushanth,Camitus,Vikesh,T­harshan 
    Directors: Nirushanth
    Writer: Nirushanth
    Studio: Living With Reality
    Production: Mermaid

    வீரம் ஆடியோவை ஜங்கிள் மியூசிக் வாங்கியது


    அஜீத், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த், சுகைல், என பெரும் நட்சத்திரகூட்டணியில் உருவாகி இருக்கும் வீரம் படம் வருகிற பொங்கல் அன்று வெளிவருகிறது.
    சிறுத்தை சிவா டைரக்ட் செய்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமாக விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
    படத்தின் 2 டிரைய்லர்கள் வெளியான பிறகு படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அதில் ஒன்று தீம் பாடல். பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதன் ஆடியோ ரைட்ஸ்சுக்கு கடும் போட்டி நிலவியது.
    இறுதில் டைம்ஸ் ஆப் இண்டியா குரூப்பின் ஒரு அங்கமான ஜங்கிள் மியூசிக் ஆடியோ ரைட்சை வாங்கியுள்ளது.
    ஒரு கோடிக்கும் கூடுதலாக ஆடியோ ரைட்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதாக இசை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
    டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதில் அஜீத்தை பங்கேற்ற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மீண்டும் தன்னை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குத் தருகிறார் அஜீத்

    மீண்டும் தன்னை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குத் தருகிறார் அஜீத். பில்லாவுக்குப் பிறகு அஜீத்துக்கு சொல்லிக் கொள்ளும்படியான படம் என்றால் அது மங்காத்தாதான்.

    அந்தப் படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. அஜீத் இப்போது நரைத்த தலை, தாடியுடன் தைரியமாக படங்களில் நடிக்கக் காரணம் வெங்கட் பிரபு அந்த தோற்றத்தை சுவாரஸ்யமாக மாற்றியதுதான்.
    அந்த வெங்கட் பிரபுவின் பிறந்த நாளன்று,தன் பங்களாவுக்கு அழைத்து சமீபத்தில் விருந்து கொடுத்த அஜீத், கவுதம் மேனன் படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் படத்தை நீங்கள் இயக்கப் போகிறீர்கள். நல்ல கதை தயார் செய்யுங்கள் என வெங்கட் பிரபுவிடம் கூறினாராம்.

    அதுமட்டுமல்ல, பிரியாணி படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் சின்ன பட்ஜெட் படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடித்துத் தரப் போவதாகவும் அஜீத் கூறியுள்ளாராம்.

    அடுத்தடுத்து அஜீத் தந்த இந்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கும் வெங்கட் பிரபு, பிரியாணியை மறந்துவிட்டு, மற்ற இரு படங்களின் வேலைகளை மளமளவெனத் தொடங்கிவிட்டாராம்!

    நடிகர் விஜயின் மோசடி அம்பலம்: அதிர்ச்சியில் திரையுலகம் - வீடியோ இணைப்பு

    இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் விஜய் முன்னணியில் இருக்கிறார்.

    பல கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கும் விஜய், சுயநலலாபம் தேடுவதாக GTV என்ற தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

    தனது சுயநலத்திற்காக பல பொதுநலத் தொண்டுகளை, அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரனின் ஆதரவுடன் அரங்கேற்றுவதாக இந்த தொலைக்காட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    பல ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கும் காணொளியானது, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு ரசிகன் திரையரங்கில் மட்டுமன்றி ரசிகர் மன்றம் என்ற பெயரில் சுரண்டப்படுவதாக இந்த தொலைக்காட்சி வாதிடுகிறது.

    காணொளியை பாருங்கள்.. ரசிகர்களான நீங்களே முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    மடோனாவின் இளமைக்கால நிர்வாண படங்கள் ஏலம்

    மடோனாவின் இளமைக்கால நிர்வாண படங்கள் ஏலம்பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படும் மடோனாவின் இளமைக்கால நிர்வாணப் படங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. 

    தனது கவர்ச்சியாலும், இனிய குரலாலும் அமெரிக்க இரசிகர்களை கட்டிப்போட்ட, மனோடனாவுக்கு 55 வயது ஆகிறது. இப்போதும் அவர் மவுசு குறையாமல் இருக்கிறார். 

    நியூயார்க் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெரேமிபிராம்மெர் தனது அருங்காட்சியகத்தில் மடோனாவின் இளமை கால நிர்வாணப்படங்கள் வைத்துள்ளார். 

    அவற்றை அவர் ஏலம் விடப் போவதாக அறிவத்துள்ளார். எதிர்வரும் 9–ம் திகதி இணையத்தின் மூலம் ஏலம் விட தீர்மானித்துள்ளார். 

    18 வயதில் மடோனா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடனம் பயின்றார். அப்போது அவர் 10 அமெரிக்க டொலருக்காக, ஹெர்மன் குல்கென்ஸ் என்பவருக்கு நிர்வாண போஸ் கொடுத்தார். 

    இதில் மேலாடை இன்றியும், பலவித கோணங்களிலும் எடுக்கப்பட்டது. இது அவர் பிரபலமாவதற்கு முன் எடுக்கப்பட்டது. தற்போது அதற்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் ஏலத்துக்கு வந்துள்ளது. 

    இளமை காலத்தில் தான் நிர்வாண போஸ் கொடுத்ததை மடோனாவும் ஒப்புக்கொண்டார். 

    இதற்கு முன் 1983–ல் மடோனா புகைப்படங்களை ‘பிளேபாய்’ பத்திரிகையில் பிரசுரிப்பது தொடர்பாக சட்ட சிக்கல் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு 1985–ல் படங்கள் பிரசுரமானது. கவர்ச்சி பாப் பாடகி மடோனா

    சென்னை சிட்டியில் 20 தியேட்டர்களில் ஆரம்பம்

    அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் தீபாவளியையொட்டி இந்த மாதம் 31ந் தேதி ரிலீசாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங்குகள் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளி போட்டியில் இருந்து இரண்டாம் உலகம் விலகிக் கொண்டதால் அந்த தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி இருக்கிறது.
    தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டூடியோ கிரீன் தன் தயாரிப்பான ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு தியேட்டர்களை ஏற்கெனவே புக் செய்து ரிசர்வேசனையும் ஆரம்பித்து விட்டது.
    இப்போது ஆரம்பம் தன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. படத்துக்கு எதிராக ஒருவர் கோர்ட்டுக்கு போயிருப்பதால் தியேட்டர்காரர்களிடம் ஒரு சின்ன தயக்கம் இருந்தது. இப்போது அது விலகி மீண்டும் தியேட்டர் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.
    சென்னையில் இதுவரை சத்யம், எஸ்கேப், ஜநாக்ஸ், தேவி, அபிராமி, சங்கம், பிவிஆர், உட்லண்ட்ஸ், எஸ்2 பெரம்பூர், உதயம், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் உள்பட 20 தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இன்னும் 5 தியேட்டர்கள் இந்த லிஸ்ட்டில் சேரலாம். தமிழ்நாடு முழுவதும் தனது டார்க்கெட்டில் உள்ள தியேட்டர்களில் 80 சதவிகித்தை புக்கிங் செய்து முடித்து விட்டார்கள்

    உத்தம வில்லன்… கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால்

    ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால் இப்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு கமல் அடுத்ததாக உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரிமாண்டமாக தயாரிக்கிறது.
    நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் தமிழில் முதல் முறையாக இயக்கும் படம் இது. ஏற்கெனவே கமலை வைத்து கன்னடத்தில் இயக்கிவிட்டார் ரமேஷ் அரவிந்த்.
    படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால் என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
    ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் காஜல் என்பது நினைவிருக்கலாம்.
    ஏன் இந்த மாற்றம்?
    “முதலில் அவர்கள் தேதி கேட்டது செப்டம்பரில். அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. ஆனால் இப்போது படம் நவம்பர் – டிசம்பருக்கு தள்ளிப் போயிருக்கிறது. அதனால் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்,” என்கிறார் காஜல்.

    அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

    அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

    விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தை இன்று சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு போட்டி காட்டினர். படத்தை பார்த்த அவர்கள் யு சான்றிதழ் அளித்துள்ளனர். அதனால் வரி விலக்கு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.

    முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. அதற்கு முன்பு நடித்த பில்லா 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    மங்காத்தாவை தொடர்ந்து ஆரம்பம் படத்திலும் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்

    சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமீன்கள்: இயக்குனர் ராம் மகிழ்ச்சி

    சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தங்கமீன்கள்  திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக இயக்குனர் ராம் கூறியுள்ளார்.
    இது குறித்து அவர் கூறியது....
    "கற்றது தமிழ்” தொடங்கி  “தங்கமீன்கள்” வரை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து என்னை ஆதரித்து ஊக்கம் அளித்த உங்களுக்கு என் மனமர்ந்த நன்றி.
    jsk film corp சார்பில் ஜே. சதிஷ்குமார் தயாரித்து நான் நடித்து இயக்கிய
    தங்கமீன்கள், அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் தங்கமீன்கள் ஒரே தமிழ்படம் என்பது குறிப்பிடத் தக்கது.
    மேலும், 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் (தங்க யானை/THE GOLDEN ELEPHANT) பிரத்யேகமான “குழந்தைகள் உலகம்” (“Children’s World”) சமீபத்து வருடங்களில் சிறந்த உலகக் குழந்தைகள் படங்களோடு திரையிடத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
    18th International Children’s Film Festival India  ”தங்கமீன்களை” குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் மற்ற உலகப்படங்களோடுத் திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
    இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதில் நானும் தங்கமீன்களின் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார், தயாரிப்பை ஒருங்கிணைத்த கொளதம் வாசுதேவ் மேனன் என அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
    - என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

    சிம்புவுக்கு சரியான ஜோடி ஆண்ட்ரியாதானாம்

    சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.கணேஷ், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் பிரபலமானார்.
    தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்தவர் இப்போது அவரே சொந்தமாக தயாரிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் கணேஷ் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஏற்ற ஒரு ஹீரோயினை பலமாதமாக தேடி வந்த கணேஷ், இப்போது ஆண்ட்ரியாவை சிம்பு ஜோடியாக்கியுள்ளார்.
    இதுகுறித்து கணேஷ் கூறியுள்ளதாவது, சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான். என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது.
    ரசிகர்களுக்கு இந்த ஜோடி ரொம்ப பிடிக்கும். படத்தில் அவர்களுக்கான கேரக்டரும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போன்று பொருத்தமாக இருக்கிறது.
    தற்போது ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தமாத இறுதியில் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

    மான்கராத்தேவுக்காக கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்

    ‘மெரினா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதன்பிறகு நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் வரை சும்மா ஊரை சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்திருந்தார். அதனால் அவருக்கான கெட்டப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.
    ஆனால், இப்போது ஹன்சிகாவுடன் அவர் நடித்து வரும் மான்கராத்தே படத்தில் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு டீசன்டான பையனாக நடிக்கிறாராம். அதனால் அவரது ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் என்று எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறார்களாம்.
    கூடவே ஹன்சிகாவுக்கு இணையாக அவரது கெட்டப்பில் பிரமாண்டம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு பந்தாவான பையனாக அணிகலன்களைக்கொண்டே பக்காவாக மாற்றியிருக்கிறார்களாம்.
    அதனால், பாடல் காட்சிகளில் மட்டுமின்றி, கேசுவலான காட்சிகளிலும்கூட ஹன்சிகாவுக்கு பொருத்தமான நடிகராக தன்னை புதுப்பித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
    மேலும், விஜய்யின் துப்பாக்கியில் நடித்த வில்லன் வித்யுத் ஜாம்வாலே இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறாராம். அவருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளதாம்.

    ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் பொருத்தமானவர் இல்லை, என்னுடன் சேர்த்து வையுங்கள்

    சூப்பஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் பொருத்தமானவர் இல்லை, எனவே அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என ஒருவர் பொலிஸில் புகார் கொடுக்க முற்பட்டதாக தெரியவந்துள்ளது. முன்னதாக ஐஸ்வர்யா நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.

    பின்னர் 2004 நவம்பர் மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிகருமான தனுஷ்சை கரம்பிடித்தார். இருவரும் திருமணமான ஆரம்பகாலத்தில் மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் குடும்பம் நடத்தினார்.

    ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப வாழ்கையில் புயல் வீச தொடங்கியுள்ளது. இதற்கு காரணமாக அமைந்தது ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 திரைப்படமே.
    தனுஷ் – ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த இந்தப் படத்தைத் தொடர்ந்து, இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

    3 படம் வெளியாகிய பின்னும் இவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவிற்கு தெரியாமல் இரகசியமாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கிட்ட தட்ட ஸ்ருதிஹாசன் அவர் அம்மாவை போலவே கல்யாணம் செய்யாமலே தனுஷ்டன் குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

    இதனால் தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.

    இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஜினிகாந்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலால் மனவேதனையின் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன் ஒரு நபர் (பெயர் வெளியிடப்படவில்லை) சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகார் செய்துள்ளார். அது பின்வருமாறு,

    ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவை ரஜினிகாந்த் முதலில் எனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறும் சமயத்தில், கஷ்தூரிராஜாவின் குடும்பம் இடையில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டது.

    ரஜினியும் மனம் மாறி தனுசுக்கு தன் மகளை திருமணம் செய்துவைத்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் என்னை ஏமாற்றி விட்டார்.

    இதை பற்றி வெளியில் யாருக்கும் சொல்லவேண்டாம் என என்னை வார்த்தையால் கட்டி போட்டு விட்டார். அவருக்கு மதிப்பளித்து இதுநாள் வரை நான் யாரிடமும் இதைப் பற்றி கூறவில்லை.

    ஆனால் என்னால் ஐஸ்வர்யாவை இதுவரையிலும் மறக்க முடியவில்லை நான் இன்னும் அவரை காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்க்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர் ஐஸ்வர்யாவை மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளார்.

    இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் பொருத்தமானவர் அல்ல எனவே என் ஐஸ்வர்யாவை என்னுடனே சேர்த்து வையுங்கள்.

    இவ்வாறு புகார் மனுவை கமிஷ்னரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கமிஷ்னர் இதை வாங்க மறுத்ததோடு, அவரை மன நலம் பாதிக்கபட்டவர் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

    இருப்பினும் விஷயம் அரசல் புரசலாக வெளியில் கசிய தொடங்கியுள்ளது

    கடன் பாக்கி: அஜித் நடித்த "ஆரம்பம்' படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு

    தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிய கடனை திருப்பித் தராததால், அவர் தயாரித்துள்ள "ஆரம்பம்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகன் பி.ஆனந்தகிருஷ்ணன் சார்பில் இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, "கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார்.
    இந்தப் பணத்தை 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை.
    தற்போது நடிகர்கள் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ள "ஆரம்பம்' திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
    இந்த நிலையில், என் மகனிடம் இருந்து வாங்கிய கடன் ரூ. 1.50 கோடி மற்றும் அதற்குரிய வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ. 4.60 கோடி தரவேண்டும் என அக்டோபர் 5-ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸூக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.
    அதனால், என் மகனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் "ஆரம்பம்' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
    மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் நித்தேஷ் நட்ராஜ், வைபவ் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
    இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    'ஐ' படத்தின் கதை!


    விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் 'ஐ.' பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 

    கதைப்படி சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞராக வருகிறாராம் விக்ரம். உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட விக்ரம், ஜிம்மிற்குச் சென்று உடலைக் கட்டுமஸ்தாக முறுக்கேற்றுகிறார்.

    மாடலிங் பெண்ணான எமி ஜாக்சன், விக்ரம் செல்லும் ஜிம்மிற்கு அருகில் உள்ள பெண்கள் ஜிம்மிற்குச் செல்கிறார். இருவரும் எதார்த்தமாக அங்கு சந்தித்துக் கொள்ள, பதார்த்தமாக பற்றிக் கொள்கிறது காதல். 

    பிறகென்ன, தமிழ் சினிமாவின் வழக்கப்படி எமியின் அண்ணன் சுரேஷ் கோபிக்கு இவர்களின் காதல் தெரிய வருகிறது. எல்லா அண்ணன்களைப் போல சுரேஷ் கோபியும் காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

    அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் 'ஆணழகன் போட்டி'க்கான அறிவிப்பு வருகிறது. அதில் கலந்து கொள்ள விரும்பும் விக்ரம், போட்டிக்காக  இரவு - பகலால ஜிம்மிலேயே பழியாகக் கிடந்து உடற்பயிற்சி செய்கிறார்.

    அப்போது சயின்டிஸ்டான சுரேஷ் கோபி சற்று வித்தியாசமாகச்(?) சிந்திக்கிறார். விக்ரம் - எமியின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பிப்பது போல நடிக்கிறார்.

    போட்டியில் வெற்றிபெற தான் உதவுவதாகச் சொல்லும் சுரேஷ் கோபி, விக்ரமுக்கு ஒரு ஊசி போடுகிறார். அந்த ஊசி விக்ரமின் உடலைச் சிதைத்து, ஸ்லிம் விக்ரமாக மாற்றுகிறது.

    இதனால், போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார் விக்ரம். இந்த நேரத்தில், வேறு ஒருவரை எமிக்கு மாப்பிள்ளையாகப் பேசிமுடிக்கிறார் சுரேஷ் கோபி.

    சுரேஷ் கோபியின் கபடத்தை உணரும் விக்ரம், வெகுண்டு எழுந்து தன் உடலை பழையபடி முறுக்கேற்றி போட்டியில் ஜெயிப்பதுடன், எமியையும் கைப்பிடிக்கிறார். 

    இது தான் படத்தின் கதை. இடையில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் சேர்த்து ஷங்கரின் திரைக்கதையை வெள்ளித்திரையில் காண்போம்.
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info