Headlines News :
Home » » சிம்புவுக்கு சரியான ஜோடி ஆண்ட்ரியாதானாம்

சிம்புவுக்கு சரியான ஜோடி ஆண்ட்ரியாதானாம்

Written By Unknown on Monday, October 14, 2013 | 7:18 AM

சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.கணேஷ், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்தவர் இப்போது அவரே சொந்தமாக தயாரிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் கணேஷ் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஏற்ற ஒரு ஹீரோயினை பலமாதமாக தேடி வந்த கணேஷ், இப்போது ஆண்ட்ரியாவை சிம்பு ஜோடியாக்கியுள்ளார்.
இதுகுறித்து கணேஷ் கூறியுள்ளதாவது, சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான். என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது.
ரசிகர்களுக்கு இந்த ஜோடி ரொம்ப பிடிக்கும். படத்தில் அவர்களுக்கான கேரக்டரும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போன்று பொருத்தமாக இருக்கிறது.
தற்போது ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தமாத இறுதியில் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info