Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
    Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

    உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி?

    இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் செய்மதி தயாரிப்பு


    இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது.

    இலங்கையில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தினூடாக உள்ளூர் விஞ்ஞானிகளால் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

    சிறியதொரு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி, அதன்மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொள்ள உள்ளூர் விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

    'நெனோ செடலைட்' என்று இந்த சிறிய செய்மதி அழைக்கப்படுகிறது. இது இலங்கை விஞ்ஞானிகளின் முழுமையான திறனினால் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், இதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ரொக்கெட்டுக்காக இந்தியா அல்லது சீனாவின் உதவியை நாட வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். 

    இனவிருத்தி ஆற்றலை இழந்த ஆண்களின் கவலைக்கு முற்றுப்புள்ளி:தோலிலிருந்து விந்தணுக்களை உற்பத்தி செய்யும் புரட்சிகர தொழில்நுட்பம்

    பரம்பரை ரீதியான பாதிப்புக்குள்ளாகி இனவிருத்தி ஆற்றலை இழந்த ஆண்களின் தோலிலிருந்து விந்தணுக்களை உருவாக்கும் ஆரம்ப கட்ட செயன் முறையொன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
     
    அமெரிக்க ஸ்டோன் போர்ட் பல்கலைக்கழகத்தின் மூலவுயிர் கல உயிரியல் மீள் விருத்தி மருத்துவ நிறுவகத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி ரெயிஜோ பெரா  தலைமையிலான குழுவினரே இந்த அரிய கண்டு பிடிப்பை செய்துள்ளனர்.
     
    தோல் கலங்களிலிருந்து நேரடியாக விந்தணுக்களை விருத்தி செய்வதற்கான இந்த ஆரம்பக் கட்ட செயன்முறையானது விந்தணுக்களின் விருத்தி தொடர்பில் ஆய்வை மேற்கொள்ளவும் இனவிருத்தி ஆற்றலற்றவர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ளவும் வழி வகை செய்வதாக  விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
    பரம்பரை பிரச்சினைகள் காரணமாக 10 சதவீதம் முதல் 15 சதவீதமான ஜோடிகள் இனவிருத்தி ஆற்றலற்ற நிலைமைக்கு உள்ளாவதாகவும் இதனால் ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
     
    மேற்படி ஆய்வானது மரபணுவில் வை நிறமூர்த்தங்கள் இன்மை காரணமாக குறைந்த விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியற்ற நிலையிலுள்ள 3 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. 

    கம்பியில்லா மின்னேற்றி கண்டுபிடிப்பு

    The korean system, showing coils that transmit electricityகொரியா நாட்டின் அணு மற்றும் குவாண்டம் பொறியியல் பேராசிரியர் சுன் டி ரிம் என்பவர் ஐந்து மீட்டர் தூரத்திலிருந்து கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்ய உதவும் இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி (Dipole Coil Resonant System (DCRS)) என்ற உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

    இந்த வகையான இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி எல்லா அலுவலகங்களிலும் அமைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உபகரணம் கொண்டு ஒரே நேரத்தில் 40 கைபேசிகளை கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்யலாம். பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியைக் கூட இந்த உபகரணம் கொண்டு இயக்கும் அளவு சக்தியைக்கொண்டது. இந்த உபகரணத்தை வீட்டிலோ, அலுவலகத்திலோ சிறிய அறையில் அமைக்கலாம் என்று இதனைக் கண்டுபிடித்தவர் தெரிவித்துள்ளார்.The experimental Dipole Coil Resonant System can charge 40 smart phones simultaneously, even if the power source is 5 meters away.


    
  

 IMAGE: A prototype of the Dipole Coil Resonant System, developed by a KAIST research team, turns a LED television on at a 5-meter distance.
Click here for more information.
 
    

Daejeon, Republic of Korea, April 17, 2014 – The way electronic devices receive their power has changed tremendously over the past few decades, from wired to non-wired. Users today enjoy all kinds of wireless electronic gadgets including cell phones, mobile displays, tablet PCs, and even batteries. The Internet has also shifted from wired to wireless. Now, researchers and engineers are trying to remove the last remaining wires altogether by developing wireless power transfer technology.

Chun T. Rim, a professor of Nuclear & Quantum Engineering at KAIST, and his team showcased, on

    பேஸ்புக்கின் 3 மாத வருமானம் 642 மில்லியன் அமெரிக்க டொலர்

    2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.
     
    ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலமான பேஸ்புக் பயன்பாட்டு வருமானம் 72 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
     
    பேஸ்புக் வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் இதற்கு சான்றாகும் என அதன் நிறுவுனர் மார்க் சூக்கர்பேக் தெரிவித்துள்ளார்.
     
    உலகளாவிய ரீதியில் 1.28 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்களினூடாக பேஸ்புக்கை உபயோகிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
     
    இதேவேளை, பேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்த டேவிட் எபர்ஸ்மன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
     
    எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    செலவுமிக்க கண் பரிசோதனைகளுக்கு முடிவு: விழித்திரையை புகைப்படமெடுக்கும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள்

    கண் சிகிச்சை நிபுணர் சந்தித்து கண்ணைப் பரிசோதிப்பதற்கு தேவைப்படும் பணம் மற்றும் நேரம் என்பவற்றைக் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதை பலரும் பின்தள்ளிப் போடுவது வழமையாகவுள்ளது.
    இந்நிலையில் இத்தகையவர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்க கலிபோர்னியாவிலுள்ள ஸ்டார்ன் போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மூலம் கண்ணின் முன் மற்றும் பின்பக்க புகைப்படங்களை இலகுவாக எடுப்பதற்கு வழிவகை செய்யும் இணைப்பு உபகரணமொன்றை உருவாக்கியுள்ளனர்.
     
    இந்த தொழில்நுட்பமான கண் கவனிப்பு சேவைகளை பெறுவதை அதிகரிப்பதுடன் கண் கவனிப்பு தொடர்பில் மருத்துவர்கள் நோயாளிக்கு தூர இருந்து ஆலோசனை வழங்கக்கூடிய வாய்ப்பை வழங்குவதாகவும் உள்ளதாக மேற்படி  உபகரணத்தை உருவாக்கும் செயற்கிரமத்தின் பங்கேற்ற ஸராக்போர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ரொபேர்ட் சாங் தெரிவித்தார்.
     
    இந்த தொழில்நுட்பம் மூலம் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி கண்ணின் விழி வெண்படலத்திலிருந்து மற்றும் விழித்திரையை துல்லியமாக படம் எடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

    உலகிலேயே அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொண்ட வயது குறைந்த நபர் : பிரித்தானிய 13 வயது சிறுவன் சாதனை

    அணுப் பிளவு உபகரணமொன்றை தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய உலகிலேயே மிகவும் வயது குறைந்தவர் என்ற பெயரை பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனான ஜெமி எட்வார்ட் பெறுகிறான். 
     
    லான்கஷியரிலுள்ள தனது பாடசாலை ஆய்வு கூடத்தில் புதன்கிழமை அணுப்பிளவின் முயற்சி மூலம் ஹீலியத்தை உருவாக்கி ஜேமி சாதனை படைத்துள்ளார். 
     
    ஜேமி ஆய்வு கூடத்தில் அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொள்ளப்போவதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 
    அணு பரிசோதனை மூலம் நீ பாடசாலையை தகர்க்கப் போகிறாயா? என அவர் ஜேமியிடம் வினவியுள்ளார். 
     
    எனினும் ஜேமி தனது பரிசோதனை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத பாதுகாப்பான ஒன்றென்பதை விளக்கியதையடுத்து அவர் அவனுக்கு பரிசோதனையை மேற்கொள்ள அனுமதித்துள்ளார். 
    இந்நிலையில் ஜேமி ஆய்வு கூடத்தில் மேற்படி அணு பிளவாக்க பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொண்டு அச்சத்துடன் அவதானித்துக் கொண்டிருந்த அந்த பாடசாலை தலைமை ஆசிரியர்களையும் ஏனையவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். 

    பேஸ்புக்கை தடை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம்

    பேஸ்புக்கை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
    பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
    எனவே, நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    ஆபாச இணைய தளங்களை முடக்குவதற்கு ஏற்கனவே தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேஸ்புக் பயன்படுத்திய மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    ஏற்கனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் கருத்திற் கொண்டு பேஸ் புக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

    வட்ஸ் அப்பை வாங்கியது - பேஸ்புக்

     
    மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (App) தான் இந்த வட்ஸ் அப்.
     
    தினமும் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
     
    ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வட்ஸ் அப்பின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
     
    வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம், அதன் பயனர்களுக்கான பிரத்தியேக செயலியான ஃபேஸ்புக் மெஸென்ஜரை அறிமுகப்படுத்தியது. 
     
    வட்ஸ் அப் -இன் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது அந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.
     
    தொடர்ந்து வட்ஸ் அப் தன்னிச்சையாக செயல்படும் என்றும், அதன் பிராண்ட் மாற்றப்படாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 
     
    மேலும், வட்ஸ் அப் இணை நிறுவனர் யான் கூம் ஃபேஸ்புக்கின் வாரிய இயக்குநர்களில் ஒருவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஃபேஸ்புக் மெஸென்ஜரும் தனித்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
     
    நூறு கோடி மக்களை இணைக்கும் பாதையில் வட்ஸ் அப் பயணித்து வருகிறது. அந்த மைல்கல்லை எட்டும் எந்த சேவையும் மதிப்பு வாய்ந்தது என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

    வரும் திங்கட்கிழமை (24) பூமியை தாக்கப்போகும் இராட்சத விண்கல்! -(Video)

    விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

    இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

    இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர்.

    இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிகற்கள் வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து கொண்டு வருவதனால் சிலவேளைகளில் இரு முற்றாக எரிந்துவிடுவதற்கும் சாத்தியம் உண்டு

    செவ்வாய்கிரகத்தில் பூத்து குலுங்கும் தாவரங்கள்

    செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என  விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
    டச்சு பல்கலைக்கழகத்தை சேர்ந்த  சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங்  இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

    அவர் கூறி இருப்பதாவது,
    செவ்வாய்  மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின்  செயற்கை மண்ணில்   14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது .இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.
    இது பொல்ல் அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது.

    செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதிய விண்கலம்

    செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் அதிக எடையைத் தாங்கிச் செல்லும் புதிய விண்கலம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ளது. சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வேலைகளைத் தொடங்கியுள்ளது நாசா. மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் அதிக எடை தாங்கும் வகையில் இந்தப் புதிய விண்கலம் தயார் செய்யப் பட்டுள்ளது.

    இதுவரை இல்லாத அளவிற்கு இந்த விண்கலம் 384 அடி நீளம் கொண்டதாகவும்,  6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இதன் முதல் சோதனை ஓட்டத்தில்,  இது விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை தாங்கிச்செல்லும் என நம்பப்படுகிறது. புதிய விண்கலம் மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது. தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

     

    பூமிக்கு அருகே சுற்றிவரும் அபாயகரமான விண்பாறை

    விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.
    2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
    650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    விரைவில்..! உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தும் தொலைபேசி

     
    மறு­பக்­கத்தில் உரை­யா­டலில் ஈடு­பட்­டுள்­ள­வரின் முப்­ப­ரி­மாணத் தோற்­றத்தை காட்­சிப்­ப­டுத்தி, அவ­ருடன் நேருக்கு நேர் சந்­தித்து உரை­யா­டு­வது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலை­பே­சியை எதிர்­வரும் வருட இறு­திக்குள் அறி­மு­கப்­ப­டுத்த போலந்து கம்­ப­னி­யொன்று நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளது.

    1977ஆம் ஆண்டு வெளி­யாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்­ப­டத்தின் கதாநாய­கியை குறிக்கும் வகையில் மேற்­படி கம்­ப­னிக்கு யெலிஸா டிஸ்­பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.
    இந்த நிறு­வ­ன­மா­னது முப்­ப­ரி­மாண விம்ப உப­கரணங்­களை வெற்­றி­க­ர­மாக ஸ்தாபித்­த­தை­ய­டுத்து, அந்த தொழில்­நுட்­பத்தை உள்­ள­டக்­கிய மாதிரி தொலைபேசியை எதிர்­வரும் வரு­டத்­துக்குள் அறி­மு­கப்­ப­டுத்தவுள்­ளது.
    இந்தக் தொலை­பேசி எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாவனைக்கு விடப்படவுள்ளது.

    உலகின் முதலாவது செயற்கை இதயம்

     
     
     
     
     
     
     
    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸ் மருத்துவமனையொன்றிலுள்ள மருத்துவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயதுடைய  முதியவர்  ஒருவருக்கு முதன் முறையாக செயற்கை மனித இதயத்தினை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். 
     
    லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் இந்த செயற்கை மனித இதயம் 5 வருடம் வரை ஒருவரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யுமென கூறப்படுகின்றது.
     
    ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான  செயற்கை மனித இதயம் உடலுக்கு வெளியிலும் பொருத்தி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேஸ்புக்கில் ஆபாசத் தகவல் அனுப்பியவருக்கு சிறை

    இந்தியாவின் நாக்பூரில் யுவதிகள் பலருக்கு ஆபாசத் தகவல் அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
     
    பேஸ்புக்கில் போலியான பெயர் ஒன்றில் கணக்கு வைத்திருந்த ராஜேஷ் பாட்டில் என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
     
    தகவல் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றின் சிம் கார்ட் விற்பனை பிரதிநிதியாக தன்னை இனங்காட்டிக்கொண்ட இந்த இளைஞர் பாலியல் தொடர்புகளை மேற்கொள்ளும் நோக்கில் தகவல் அனுப்பியுள்ளார்.
     
    இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
     
    இவரிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் பேஸ்புக் கணக்கினை ஆராய்ந்த போது யுவதிகள் பலருக்கு இவ்வாறு தகவல்கள்,படங்கள் அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

    உலகின் இளவயது பட்டதாரியான தமிழ்ச் சிறுமி !!

    ஒன்பது வயதில் இணையத்தளத்தை வடிவமைத்த உலகில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தைப் பெற்று தம் தாய் மண்ணுக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.

    இந்தச் சிறுமி பொம்மைகளுக்கும் விளையாட்டுப் பொருட்களுக்கும் பெரு வாரியான நேர காலத்தை பொழுது போக்காகக் கழிக்காமல் கூடுதலான காலத்தை தகவல் தொழில் நுட்பப் பாடத் துறையில் சாதனை படைப்பதற்காக அயராது முயற்சி செய்து இந்தச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

    பிரேமானந்த நடராஜ் மற்றும் லக்சுமி பிரேமானந்த் தம்பதிகளின் ஒரே ஒரு புதல்வியான இந்தச் சிறுமி கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயிலுகின்றார். 2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித் துறை கற்றை நெறி சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT DEGREE ) பூர்த்தி செய்துள்ளார். இவருக்காக பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால் எதிர் வரும் 2014 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் அளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

    இந்தச் சாதனை இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமாகும். இந்தப் பட்டடிப்படிப்புத் தொடர்பான பெறுபேறு இணையத்தளத்தினூடாக கடந்த 12-12-2013 வியாழக் கிழமை வெளியாகின. இந்தச் சிறுமி தன்னுடைய மூன்று வயதிலேயே மின்னஞ்சல் முகவரியை திறந்து கொண்டார். சர்வதேச கணினியல் டிப்ளோமா கற்கை நெறியில் சான்றிதழ் பெற்றுள்ளார். வணிகம் இணையத்தள பொறியியல் துறைகளில் சர்வதேச தரச் சான்றிதழ்களை தன்னுடைய ஒன்பது வயதிலேயே பெற்றுள்ளார் அதே போன்று சிறு வயதிலேயே இணையத் தளத்தை வடிவமைத்தமைக்கான பெருமை இந்தச் சிறுமையே சாரும். இதில் இரண்டாம் இடத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்தக் கால எல்லைக்குள் கண்டி நகரிலுள்ள கணினி உயர் கல்வி நிலையங்களில் தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினி கற்கை நெறி சங்கத்தின் பட்டடிப் படிப்புக்காக விண்ணப்பித்து 2 ½ வருட காலத்திற்குள் பட்டப்டிப்பை பூர்த்தி செய்து கொண்ட இவர்தன்னுடைய 11 வயதில் உலகில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டவராகின்றார்.

    வஷினியா சிறு வயது முதல் நல்ல குண நலங்களைக் கொண்டவர். இந்து சமய வழிபாட்டைப் பின் பற்றிய போதிலும் எட்டு வயதிலிருந்து கெட்டம்பே அருகிலுள்ள விஹாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபாடு காட்டி வருகின்றார். அதே போன்று சிறு வயது முதல் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவலிலுக்குச் சென்று வழிபாடுவார். இவர் கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர். இந்தச் சிறு பிள்ளை ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றார் எனும் போது; எமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். இரு முறை இரட்டை வகுப்பேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார். அது மாத்திரமல்ல 2010 ஆம் ஆண்டு க. பொ. த. சாதாரணப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் தோற்றி ஏ தரத்தில் விசேட சித்தியடைந்துள்ளார்.

    வஷினியாவின் தந்தை நடராஜ் பிரேமானந்த் குருநாகல் மல்லவப்பிடியிலுள்ள ஒட்டோ மொபைல் கம்பனியின் ஒன்றின் பணிப்பாளர். தாயின் பெயர் லக்சுமி பிரேமானந்த் சில வருடங்கள் புகழ்மிக்க கணினி நிறுவனம் ஒன்றில் போதனாயாசியராகக் கடமையாற்றியுள்ளார். வஷினியாவின் வயதை ஒத்த பிள்ளைகள் பொம்மைகளோடு விளையாடும் பொழுது வஷினியாவின் தாயாருடைய நூல்களுக்குள்ளும் கணினிகளுக்குள்ளும் மூழ்கியிருந்தார்.
    இரண்டு வயதிலேயே வஷினியா ஆங்கில மொழியின் அரிச்சுவடிகளை மனப்பாடம் செய்து விட்டார் கணினி விசைப் பலகை குறியீடுகளெல்லாம் வஷினியாவுக்கு கை வந்த கலையாகி விட்டது.

    இவர் மூன்று வயதில் குருநாகல் சர்வதேசப் பாடசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரு வருடங்கள் கல்வி பயின்றார். இதன் பின் கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேசப் பாடசாலைக்கு 5 வயதில் பெரும்பாலானோருக்கு ஓர் இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு அதில் ஒரு கடிமான பகுதி உண்டு . ஆனால் அது அவருக்கு சாதாரண விடயமாகவுள்ளது. அதை அவர் இணையம் மூலம் தேடி இணைப்பதற்கேற்ப பதிவிறக்கம் செய்கின்றார். அதற்கு அவர் ஒரு தந்திரோபாயாயமும் வைத்திருக்கின்றார். அவர் முதலாவது வடிவமைத்த இணையத்தள முகப்பு, தகவல்கள், தங்களைப் பற்றி புத்தக ஒன்லைன், கேள்விகள். படத்தொகுப்பு எனப் பல பிரிவுகள் கொண்டுள்ளது. அத்துடன் குறித்த நிறுவனம் வழங்கும் சேவைகளும் அவற்றுக்குள் அடங்கியுள்ளன. இது ஒரு இலாபகரமான தொழில் என்றாலும் அது மிகவும் கடிமானது எனவும் ஒத்துக் கொள்கிறார் 

    வஷினியாவின் விசேட திறமையைக் கண்டு கண்டி டீஊயுளு உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. எம். நியாஸினால் கணினித் துறை அறிவை மேலும் மேம்படுவத்துவதற்காக ( Artificial Intelligence And robotics ) கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதனூடாக ரோபோ தாயாரிப்பதற்கான அறி திறனைப் பெற்று சாதனை படைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

    அவர் கல்விப் படிப்புக்கு எந்தவிதமான இடையூறுகளுமின்றி பாடசாலை செல்கின்றார். விளையாட்டில் ஈடுபடுகின்றார். பாடசாலை வேலைகள் அனைத்தினையும் அன்றே செய்து முடிப்பார். விடுறை நாட்களிலேதான் இந்தத் தகவல் தொழில் நுட்ப பாடங்களைக் கற்றுள்ளார். இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரான்ஸ், மற்றும் ஜேர்மன் மொழிகளைப் பேசக் கூடியவர், ஓகன், பியானோ, வாசிப்பதில் பங்கு பல பரிசில்களைப் பெற்றவர்.
    இந்தச் சின்னஞ் சிறிய தாய் நாடு பற்றி உலமெங்கும் மதிக்க வேண்டும் என்பதுடன் ஒரு வைத்தியராக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அவருடைய இலக்காகும்.



    .

    விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோ

    காந்­தத்தை பயன்­ப­டுத்தி தூர இயங்கும் முறைமை மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் நுண்­ணிய உலோக குழா­யினுள் எருது ஒன்றின் தனி­யொரு விந்­த­ணுவை உட்­செ­லுத்­தியே இந்த உயி­ரியல் ரோபோவை விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.
     
    இந்த ஆய்­வுக்கு தலைமை தாங்­கிய ரெஸ்டென் நக­ரி­லுள்ள ஒருங்­கி­ணைப்பு நுண் விஞ்­ஞான நிறு­வ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான ஒலிவர் ஷமிட் விப­ரிக்­கையில், இந்த உயி­ரியல் ரோபோவை எதிர்­கா­லத்தில் உடலின் குறிப்­பிட்ட பகு­திக்கு மருந்­து­களை விநி­யோ­கிக்­கவும் கரு­முட்­டையை கருக்­கட்டச் செய்­யவும் பயன்­ப­டுத்த முடியும் என்று கூறினார்.
     
    50 மைக்ரோன் நீளமும் 5 முதல் 8 மைக்ரோன் விட்­ட­மு­மு­டைய மேற்­படி நுண் உலோக குழாய் ஒரு விந்­த­ணுவை விடவும் சொற்ப அளவே பெரி­தாகும். இத்­த­கைய குழாய் கட்­ட­மைப்­புக்குள் விந்தணுவை உட்செலுத்த பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக ஒலிவர் கூறினார்.

    சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்

    சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
    ஜப்பானில் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணு உலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
    எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.
    பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.
    எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ‘ஷிமிஷூ கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
    சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் ‘சோலார் பேனல்’ தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதற்கு ‘ஜனா ரிங்’ என பெயரிட்டுள்ளனர்.
    இதன் மூலம் 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035–ம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
    தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.
    சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்கள் அமைக்கும் பணியில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

    நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்!

    அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது. கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது. சாம்சங் நிறுவனத்தின் 26 வகையான ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லாரிகள் வந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி, அட்ரஸ் மாறி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். தங்களிடம் இந்த அட்ரஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக லாரி டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள் ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார். உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம்.பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

    அத்தனை லாரிகளிலும் சில்லரை காசுகள். 5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன. 100 கோடி டாலருக்கும் சில்லரை. இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். வங்கிகளில் இவ்வளவு சில்லரைகளை ஏற்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இவற்றை நோட்டாக மாற்றுவதும் கடினம் என்பதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள். 

    நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முடிவான போது, அதை எப்படி கொடுப்பது என்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதனால் சில்லரைகளை அனுப்பி பழி வாங்கியுள்ளது சாம்சங்.எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. எல்லா ஸ்மார்ட் போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைசில் போன் தயாரிக்கக் கூடாது என்கிறார்கள். எங்களிடமே காப்புரிமை விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களுக்கும் விளையாடத் தெரியும். எப்புடி… என பேட்டி கொடுத்திருக்கிறார் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன் ஹீ.
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info