Headlines News :
Home » » பேஸ்புக்கில் ஆபாசத் தகவல் அனுப்பியவருக்கு சிறை

பேஸ்புக்கில் ஆபாசத் தகவல் அனுப்பியவருக்கு சிறை

Written By sakara on Monday, December 23, 2013 | 6:52 PM

இந்தியாவின் நாக்பூரில் யுவதிகள் பலருக்கு ஆபாசத் தகவல் அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
பேஸ்புக்கில் போலியான பெயர் ஒன்றில் கணக்கு வைத்திருந்த ராஜேஷ் பாட்டில் என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
தகவல் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றின் சிம் கார்ட் விற்பனை பிரதிநிதியாக தன்னை இனங்காட்டிக்கொண்ட இந்த இளைஞர் பாலியல் தொடர்புகளை மேற்கொள்ளும் நோக்கில் தகவல் அனுப்பியுள்ளார்.
 
இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவரிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் பேஸ்புக் கணக்கினை ஆராய்ந்த போது யுவதிகள் பலருக்கு இவ்வாறு தகவல்கள்,படங்கள் அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info