Headlines News :
Home » » உலகிலேயே அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொண்ட வயது குறைந்த நபர் : பிரித்தானிய 13 வயது சிறுவன் சாதனை

உலகிலேயே அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொண்ட வயது குறைந்த நபர் : பிரித்தானிய 13 வயது சிறுவன் சாதனை

Written By sakara on Saturday, March 8, 2014 | 7:36 AM

அணுப் பிளவு உபகரணமொன்றை தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய உலகிலேயே மிகவும் வயது குறைந்தவர் என்ற பெயரை பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனான ஜெமி எட்வார்ட் பெறுகிறான். 
 
லான்கஷியரிலுள்ள தனது பாடசாலை ஆய்வு கூடத்தில் புதன்கிழமை அணுப்பிளவின் முயற்சி மூலம் ஹீலியத்தை உருவாக்கி ஜேமி சாதனை படைத்துள்ளார். 
 
ஜேமி ஆய்வு கூடத்தில் அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொள்ளப்போவதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 
அணு பரிசோதனை மூலம் நீ பாடசாலையை தகர்க்கப் போகிறாயா? என அவர் ஜேமியிடம் வினவியுள்ளார். 
 
எனினும் ஜேமி தனது பரிசோதனை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத பாதுகாப்பான ஒன்றென்பதை விளக்கியதையடுத்து அவர் அவனுக்கு பரிசோதனையை மேற்கொள்ள அனுமதித்துள்ளார். 
இந்நிலையில் ஜேமி ஆய்வு கூடத்தில் மேற்படி அணு பிளவாக்க பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொண்டு அச்சத்துடன் அவதானித்துக் கொண்டிருந்த அந்த பாடசாலை தலைமை ஆசிரியர்களையும் ஏனையவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info