2014 யூன் மாதத்தினை வருமான நிலுவைகளை அறவீடு செய்யும் மாதமாக
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரத்தின் எல்லைக்குட்பட்ட சகல வட்டாரத்திலும் சோலை வரி நிலுவையும் வியாபார மற்றும் வரிகளுமாக சுமார் ரூபா 100 மில்லியன் உள்ளது.
இதன்
முதற்கட்டமாக வரியிறுப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தல்
வழங்க துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையினை ஆணையாளர் வைபவ
ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
1ம் வாரம் (02.06.2014 – 07.06.2014)
மக்களை விழிப்பூட்டும் நிகழ்வு
2ம், 3ம் வாரம் (09.06.2014 – 20.06.2014)
வீடு வீடாகவும் வியாபார நிலையங்களுக்கும் நிலுவை உள்ளவர்களிடம் அறவீடு செய்தல்
4ம் வாரம் (23.06.2014 – 28.06.2014)
ஆதனவரி
நிலுவைகள் அதிகமாக உள்ள பிரதேசங்களில் மாநகர கட்டளைச்சட்டம் 252வது
பிரிவிற்கிணங்க வரியிறுப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக வரி செலுத்த
தவறியிருப்பின் அவரது வீட்டில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு
நடுக்கட்டு நடவடிக்கை மூலம் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டு நிலுவை அறவீடு
செய்யப்படும்.


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இன்று 3ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் "நீருற்றுப் பூங்காவில்" இடம்பெற்றன.