Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label விளையாட்டு. Show all posts
    Showing posts with label விளையாட்டு. Show all posts

    ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய சங்கக்கார, மஹேல (Video)

    உலகப் பிரபல்யங்கள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    இதன்படி இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் ஐஸ் பக்கெட் விளையாடியுள்ளனர்.

    இதனையடுத்து ஏஞ்ஜலோ மத்தியூஸ்- அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் மைக்கல் கிளார்க் மற்றும் இந்திய நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு மஹேல ஜயவர்தனவினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் குமார் சங்கக்காரவினால் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி- அவுஸ்திரேலிய வீரர் எடம் கிள்க்கிறிஸ்ட் மற்றும் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் ஆகியோருக்கு இந்த ஐஸ் பக்கெட் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுநல காரியங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்பட்டுவரும் இந்த ஐஸ் பக்கெட் விளையாட்டின் ஊடாக நன்கொடை வழங்கத் தயாராக உள்ளதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

    இது குறித்த காணொளி காட்சிகளை மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

    கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புலன் அற்றவர்களுக்கான கிரிக்கட் போட்டிகள்

    கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புலன் அற்றவர்களுக்கான இரண்டு நாள் கிரிக்கட் பயிற்சியினை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவிப்பொது முகாமையாளருடன் இணைந்து ஆரம்பித்து வைத்தபோது.......... இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 18.05.2014ம் திகதி மாவட்ட ரீதியிலான 20-20போட்டிகள் இடம்பெறவுள்ளது......

    ஐந்தாவது T20 உலக கிண்ணம் இலங்கை வசம்

    ஐந்தாவது T20 உலக கிண்ணம் இலங்கை வசம் ஐந்தாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 

    இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

    இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

    இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

    இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் குலசேகர, மத்தியூஸ், ஹேரத், மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். 

    பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது. 

    இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

    இலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் 20க்கு இருபது போட்டிகளில் இருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

    இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து (2009 மற்றும் 2012) கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி இம்முறை அபாரமாக துடுப்பெடுத்தாடி கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. 

    இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் நாயகனாக இந்திய அணி வீரர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


    இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து

    இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இலங்கை அணி வீரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


    T20 சர்வதேச போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார ஓய்வு

    T20 சர்வதேச போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார ஓய்வுஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார 20க்கு இருபது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 

    20க்கு இருபது உலகக் கிண்ணத் தொடருடன் தான் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 

    ஆசியாவின் சாம்பியனானது இலங்கை

    ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திரிமான மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.
    பங்களாதேஷில் இடம்பெற்ற 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்
    5 அணிகள் பங்கேற்றன. இந்தியா (2 வெற்றி, 2 தோல்வி), பங்காளதேஷ் (4 தோல்வி), ஆப்கானிஸ்தான் (ஒரு வெற்றி, 3 தோல்வி) ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
     
    லீக் சுற்றில் தோல்வியையே சந்தித்திராத இலங்கை அணி பாகிஸ்தானை 12 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடையச் செய்தது.
     
    இலங்கையுடன் மாத்திரம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கொண்டிருந்தது. இதனையடுத்து இலங்கையும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. 
     
    இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம்  மிர்பூரில் இன்று சனிக்கிழமை அரங்கேறியது.  இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
     
    அந்தவகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சார்ஜில் கான் 8, அகமட் செய்சாட் 5 என சொற்ப ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழக்க அடுத்த களமிறங்கிய ஹாபிசும் 3 ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.
     
    18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் ஆரம்பமே தடுமாறிய போது மிஸ்பா உல் ஹக்குடன் பவாட் ஆலம் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வலுப்பெற செய்தனர்.
     
    இருவரும் இணைப்பாட்டமாக 122 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
     
    இதனையடுத்து களத்தில் இருந்த பவாட் ஆலத்துடன் உமர் அக்மால் இணைந்தார். உமர் அக்மால் அதிரடியாக துடுப்பெடுத்தாட பவாட் ஆலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை கடந்து 114 ஓட்டங்களை கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்தார்.
     
    அதிரடியாக துடுப்பெடுத்தாடிய உமர் அக்மால் பவாட் ஆலத்துடன் இணைப்பாட்டமாக 115 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
     
    இலங்கை அணியில் சுரங்க லக்மால், சேனாநாயக, திசர பெரேரா மற்றும் மெத்யூஸ் ஆகியோர் பந்து வீச்சை மேற்கொண்டிருந்த போதும் மாலிங்க மாத்திரமே 10 ஓவர்கள் வீசி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
     
    இதன் பின்னர் 261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
     
    இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக திரிமனேவுடன் குசேல் ஜனித் பெரேரா களமிறங்கியனார்.
     
    இதன்போது குசேல் ஜனித் பெரேர அதிரடியாக துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
     
    தொடர் முழுதும் இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் பக்கபலமாக இருந்த குமார் சங்கக்கார இப்போட்டியில் வந்த வேகத்திலேயே அரங்கு திரும்பி ஏமாற்றமளித்தார். அவர் சயிட் அஜ்மால் பந்தில் எவ்வித ஓட்டமும் பெறாது எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.
     
    இதனையடுத்து களத்தில் இருந்த திரிமானவுடன் கைகோர்த்தார் மஹேல ஜயவர்தன. கடந்த தொடர்களில் பிரகாசிக்காத மஹேல இன்றைய போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடினால். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த திரமான அரைச் சதத்தை கடக்க சற்று நேரத்தில் மஹேல ஜயவர்தனவும் அரைச்சதத்தை கடந்தார்.
     
     
    இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 156 ஓட்டங்களை பெற்றிருந்த போது மஹேல ஜயவர்தன 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
     
    இதனையடுத்து திரிமானவுடன் அசான் பிரியன்ஜன் இணைந்தார். இதன் போது லஹிரு திரிமான சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 3ஆவது சதத்தை கடந்தார். அவர் 106 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றார்.
     
    பிரியன்ஜன் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சதத்தை கடந்த திரிமான 101 ஓட்டங்களுடன் அஜ்மால் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
     
    இதனையடுத்து மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களை பெற்று அணி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
     
    போட்டியின் ஆட்டநாயகனாக மாலிங்க தெரிவு செய்யப்பட்டதோடு தொடர் ஆட்டநாயகனாக லஹிரு திரிமான தெரிவு செய்யப்பட்டார்.

    16 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் விளாசி சர்மா உலக சாதனை

    16 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் விளாசி சர்மா உலக சாதனைஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 

    இந்தப் போட்டியில் 16 சிக்ஸர்களை குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை பெற்ற வீரர் என்ற வாட்சனின் சாதனையை முறியடித்துள்ளார். 

    அத்துடன் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையும் சர்மா வசமானது. சச்சின் மற்றும் சேவாக் ஆகியோர் முன்னதாக இரட்டை சதங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது. 

    இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி இன்று பெங்களூரில் நடக்கிறது. 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளன. 

    இந்நிலையில் 7-வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 

    இந்த ஜோடி 17 ஓவர்களில் 107 ஓட்டங்களைக் குவித்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றபிறகு சிறிது நேரத்தில் போட்டி மீண்டும் தொடங்கியது. 

    சிறிது நேரத்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளில் 60 ஓட்டங்களை சேர்த்தார். அதன்பின்னர் வந்த கோலி ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரெய்னா (28), யுவராஜ் சிங் (12) ஆகியோரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 

    அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்டார். டோனியும் மின்னல் வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 

    156 பந்துகளில் 12 பவுண்டரி, 16 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் விளாசி இரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரோகித் சர்மா. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை தன் வசப்படுத்திக் கொண்டார். 

    அவர் 209 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மெக்கே பந்தில் ஆட்டமிழந்தார். டோனி, 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

    இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 383 ஓட்டங்களைக் குவித்தது. இதன்படி 384 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸி. துடுப்பெடுத்தாடி வருகின்றது

    லுங்கியில் கலக்கும் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள்!

    நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அதிரடியாக தோற்றமளித்துள்ளார் டோனி.
    இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவருமே படு ஸ்டைலாக வந்துள்ளனர்.
    நல்ல நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அசத்தலாக இருந்தார் டோனி. இவருடன், அவரது மனைவி சாக்ஷியும் காணப்பட்டார்.
    சுரேஷ் ரெய்னாவோ மஞ்சள் கலரில் டி சர்ட்டும், கீழே கட்டம் போட்ட பைஜாமாவும் அணிந்து படு ஜோராக இருந்தார்.
    இதேபோன்றே அல்பி மார்க்கலும் சுற்றி திரிந்தார்.
    ஆனால் அஸ்வினோ லுங்கிக்கு அணியாமல், பைஜாமாவில் வித்தியாசமாக காணப்பட்டார். இவருடன் துணைக்கு மைக்கேல் ஹஸ்ஸியும் இருந்தார்.ரவீந்திர ஜடேஜாவுக்குத்தான் லுங்கி செம பொருத்தம். முறுக்கி விட்ட மீசையும், உருட்டுப் பார்வையும், சிவப்பு, கருப்பு, வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுமாக பயங்கர டெரராக காட்சியளித்தார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஏன் இந்த புதுக் கோலத்தில் காணப்பட்டனர் என்று குழப்பம் வரலாம்.
    அதாவது, பேன்சி பேண்ட்ஸ் வாரம் என்று ஒன்றை கொண்டாடினர் சென்னை அணியினர். அதன் பொருட்டே இப்படி டிரஸ் சேஞ்ச்
    நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அதிரடியாக தோற்றமளித்துள்ளார் டோனி.
    இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவருமே படு ஸ்டைலாக வந்துள்ளனர்.
    நல்ல நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அசத்தலாக இருந்தார் டோனி. இவருடன், அவரது மனைவி சாக்ஷியும் காணப்பட்டார்.
    சுரேஷ் ரெய்னாவோ மஞ்சள் கலரில் டி சர்ட்டும், கீழே கட்டம் போட்ட பைஜாமாவும் அணிந்து படு ஜோராக இருந்தார்.
    இதேபோன்றே அல்பி மார்க்கலும் சுற்றி திரிந்தார்.
    ஆனால் அஸ்வினோ லுங்கிக்கு அணியாமல், பைஜாமாவில் வித்தியாசமாக காணப்பட்டார். இவருடன் துணைக்கு மைக்கேல் ஹஸ்ஸியும் இருந்தார்.ரவீந்திர ஜடேஜாவுக்குத்தான் லுங்கி செம பொருத்தம். முறுக்கி விட்ட மீசையும், உருட்டுப் பார்வையும், சிவப்பு, கருப்பு, வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுமாக பயங்கர டெரராக காட்சியளித்தார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஏன் இந்த புதுக் கோலத்தில் காணப்பட்டனர் என்று குழப்பம் வரலாம்.
    அதாவது, பேன்சி பேண்ட்ஸ் வாரம் என்று ஒன்றை கொண்டாடினர் சென்னை அணியினர். அதன் பொருட்டே இப்படி டிரஸ் சேஞ்ச்
     

    மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்....


    மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மாணவர்கள் சர்வதேச போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்தனர்

    மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மாணவர்கள் சர்வதேச போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்தனர்


    சுவீடன் ஸ்றொக் ஹோம் நகரில் நடைபெற்ற நீர்ப்பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு காண்பதற்கு புத்தாக்கங்களை உருவாக்குதல் தொடர்பான சர்வதேச போட்டியில் இலங்கையின் சார்பாக கலந்து கொண்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்கள் சர்வதேச ரீதியில் ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளனர். கிளீன் சமூக சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வலையமைப்பின் அனுசரணையுடன் சர்வதேச மட்டத்தில் மாணவர்களுக்கிடையில் இந்த போட்டி கடந்த 1ம் திகதி தொடக்கம் 10ம் திகதிவரை நடைபெற்றது. சர்வதேச நீர் தினத்தையொட்டி கல்வியமைச்சும் மேற்படி நிறுவனமும் இணைந்து இலங்கையில் இப்போட்டியை நடாத்தியது.


     400 பாடசாலைகள் பங்கு பற்றிய நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புத்தாக்கங்களை ஏற்படுத்துதல் தொடர்பான போட்டியில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு இலங்கையில் முதல் இடம் பெற்று சர்வதேச போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. இந்த வகையில் இது தொடர்பான சர்வதேச போட்டி சுவீடன் ஸ்றொக் ஹோம் நகரில் நடைபெற்றது.இதில் 29 நாடுகளில் இருந்து பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

     இதில் இலங்கையில் தேசிய ரீதியல் முதலாமிடத்தினை பெற்ற மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்களான நவரட்ணராஜா கிசோர், சாந்தலிங்கம் கிசாந், நடராஜா வித்தியாகரன் ஆகிய மூன்று மாணவர்களும் சிவானந்த தேசிய பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியையான திருமதி எல்.எம்.பாத்லட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     கால நிலை மாற்றத்தில் சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளில் புத்தாக்கங்களை உருவாக்குதல் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் மேற்படி மாணவர்கள் ஆங்கில மொழியில் சமர்பித்த ஆய்வு சர்வதேச ரீதியில் ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளது. 1997ம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் சர்வதேச ரீதியில் நடை பெற்று வரும் இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுக்கு எதிரான தொடர் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

     இந்தியாவுக்கு எதிரான தொடர் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
    மெல்போர்ன், செப்.22 (டி.என்.எஸ்) வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஏழு ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேப்டனாக கிளார்க் தொடர்ந்து நீடிக்கப் பட்டுள்ளார். ஆனால் உடல் தகுதியை பொருத்துதான் அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்.

    மேத்யூ வாடே, பவாத் அகமது ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய தொடருக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி வருமாறு:

    கிளார்க் (கேப்டன்), வாட்சன், ஹியூக்ஸ், ஆரோன் பிஞ்ச், ஹியூக்ஸ், பெய்லி, ஆடம் வோகஸ், ஹாடின், ஹென்ரிக், மேக்ஸ்வெல், ஜான்சன், பவ்ல்னொ, கோல்ட்டர்-நில், மெக்காய் டோகார்ட்டி. (டி.என்.எஸ்)

    ரெய்னா, ஹசி அதிரடியில் சென்னை அசத்தல் வெற்றி

    டைட்டன்ஸ் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணி அமர்க்களமாக தொடங்கியது.
    இந்தியாவில் 5வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடக்கிறது. ராஞ்சியில் நேற்று நடந்த பி பிரிவு லீக் போட்டியில் சென்னை (இந்தியா), டைட்டன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின.
    நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் டோனி பந்துவீச்சை தெரிவு செய்தார்.
    இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.
    ருடால்ப், பெகர்டியன் தலா 21 ஓட்டங்களும், அரைசதம் கடந்து டேவிட்ஸ் 52 ஓட்டங்களும், டிவிலியர்ஸ் 7 சிக்சர், 3 பவுண்டரியுடன் 77 ஓட்டங்களும் எடுத்தனர்.
    கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே ஷாக் கொடுத்தார் மெர்வி. இவரது மூன்றாவது பந்தில் முரளி விஜய் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.
    இதற்கு பின் மைக்கேல் ஹசி, ரெய்னா சேர்ந்து தூள் கிளப்பினர். டைட்டன்ஸ் பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், புயல் வேகத்தில் ஓட்டங்கள் சேர்த்தனர்.
    மோர்னே மார்கல் வீசிய போட்டியின் 4வது ஓவரில் ரெய்னா ஒரு சிக்சர், ஹசி 3 பவுண்டரி மற்றும் வைடு மூலம் 5 ஓட்டங்கள் கிடைக்க மொத்தம் 24 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
    இதையடுத்து 4 ஓவரிலேயே சென்னை அணி 51 ஓட்டங்களை எட்டியது. ரெய்னா 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
    மீண்டும் பந்துவீச வந்த மார்கல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஹசி 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
    பின் பத்ரிநாத், பிராவோ சேர்ந்து ஓட்டங்கள் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டனர். மெர்வி பந்தில் பிராவோ ஒரு இமாலய சிக்சர் அடித்தார். தொடர்ந்து லாங்கே ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், 38 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.
    அடுத்து தனது பிறந்த ஊரில், உள்ளூர் ரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் களமிறங்கினார் டோனி. சந்தித்த முதல் நான்கு பந்தில் இவர் ஓட்டங்கள் எடுக்க தவற, ரசிகர்கள் டென்ஷன் ஆகினர்.
    பின் மார்னே மார்கல் பந்தில் சிக்சர் அடித்த டோனி 7 ஓட்டங்களில் ரிச்சர்ட்ஸ் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் ரவிந்திர ஜடேஜாவும் ஓட்டங்ளின்றி ஆட்டமிழந்தார். இப்படி திடீரென விக்கெட் சரிய, லேசாக மழையும் பெய்ய, பதட்டம் ஏற்பட்டது.
    ஆனால், ரிச்சர்ட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஆல்பி மார்கல் சுலப வெற்றியை உறுதி செய்தார்.
    சென்னை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் எடுத்து இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோருடன் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டமிழக்காமல் பத்ரிநாத் 20 ஓட்டங்களும், ஆல்பி மார்கல் 4 ஓட்டங்களும் எடுத்தனர்.
    ஆட்டநாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.

    சாம்பியன்ஸ் லீக் டி20 டிரினிடாட் அணிக்கு ஆலோசகராக லாரா


    டிரினிடாட் : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் விளையாட உள்ள டிரினிடாட் , டுபாகோ அணியின் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் பிரையன் லாரா செயல்பட உள்ளார். ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித் தொடர், இந்தியாவில் நடக்க உள்ளது.

    இந்த தொடருக்கான தகுதிச் சுற்று 17ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் 21ம் தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை , ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சிஎல் டி20 தொடரின் பிரதான சுற்றில் பங்கேற்க வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் , டுபாகோ அணியும் தகுதி பெற்றுள்ளது.
    ராஞ்சியில் 22ம் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தில், அந்த அணி பிரிஸ்பேன் ஹீட் அணியுடன் மோதுகிறது. 

    இந்த நிலையில், டிரினிடாட் அணியின் கவுரவ ஆலோசகராக முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா செயல்பட உள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், ‘சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்க உள்ள டிரினிடாட் அணியின் கவுரவ ஆலோசகராக இந்தியா செல்வது மிகவும் பெருமையாக உள்ளது. அணி நிர்வாகி என்ற பொறுப்பில் இல்லாவிட்டாலும், வீரர்களுக்கு என்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளேன். டிரினிடாட் அணி மிகவும் வலுவானதாக அமைந்துள்ளது. இந்த தொடரில் நிச்சயம் வெற்றிகளைக் குவிப்போம்’ என்றார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தான் சச்சின் ஓய்வு பெறவேண்டும் : வாசிம் அக்ரம்

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் சச்சினுக்கு 200வது போட்டியாக அமைய உள்ளது. 200 டெஸ்டில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் சச்சின் நிகழ்த்த உள்ளார். இந்த சிறப்பு வாய்ந்த டெஸ்ட் போட்டியை நடத்த மும்பை, கொல்கத்தா கிரிக்கெட் சங்கங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 200வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் ஓய்வு முடிவை அறிவிக்கக்கூடும் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மாஜி வீரர் வாசிம் அக்ரம் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தான் சச்சின் ஓய்வு பெறவேண்டும். இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற வேண்டும். இரு நாட்டு ரசிகர்களின் கரகோஷத்தில் சச்சினுக்கு பிரியா விடை கொடுப்பதே சிறப்பாக இருக்கும் என்றார்.

    ஷரபோவாவின் கைகளை அலங்கரிக்கும் காதல் பரிசு

    காதலில் விழுந்துள்ள மரியா ஷரபோவா, விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா, அவுஸ்திரேலிய ஓபன்(2008), பிரெஞ்சு ஓபன்(2012), விம்பிள்டன் ஓபன்(2004) மற்றும் யுஎஸ் ஓபன்(2006) என நான்கு பட்டங்களை வென்றுள்ளார்.
    உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகளில் முதலிடம் ஷரபோவாவுக்கு தான்.
    இவர் பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுடன்(வயது 22) காதல் வயப்பட்டார்.
    அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்சின் காதலராக இருந்தவர் தான் டிமிட்ரி. இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் எழ, ஷரபோவா விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
    இதற்கிடையே காயம் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய இவர், நியூயார்க்கில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்றார்.
    அப்போது, வழக்கத்துக்கு மாறாக இடது கை மோதிர விரலில் ஒரு மோதிரம் அணிந்து இருந்தார்.
    இது வித்தியாசமான முறையில் டிசைன் செய்யப்பட்டு இருந்தது. காதல் பரிசாக டிமிட்ரோவ் கொடுத்திருப்பார் போலத் தெரிந்தது, இந்த மோதிரம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
    இதனையடுத்து இருவரும் விரைவில் திருணம் செய்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஸ்ரீசாந்த், சவானுக்கு வாழ்நாள் தடை

    சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அங்கீட் சவானுக்கு, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், சண்டிலா ஆகியோர் கடந்த மே 16ம் திகதி கைது செய்யப்பட்டனர்.
    Sreesanthநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் மீது மொகோகா எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
    கடந்த ஜூலை 30ம் திகதி இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் பிணையில் உள்ளனர்.
    இதனிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் சூதாட்டம் குறித்து விசாரிக்க ரவி சவானி நியமிக்கப்பட்டார்.
    இவர் பி.சி.சி.ஐ., துணைத் தலைவர்கள் அருண் ஜெட்லி, நிரஞ்சன் ஷா அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அறிக்கை சமர்பித்தார்.
    இந்த குழு முன்பு இன்று ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், அமித் சிங், சித்தார்த் திரிவேதி மற்றும் ஹர்மீத் சிங் மற்றும் சண்டிலா ஆகியோர் ஆஜராகினர். தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல இவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
    பின்னர், ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீட் சவானுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

    இவ்வாண்டின் மக்கள் விருப்ப வீரர் குமார் சங்கக்கார

    இவ்வாண்டின் மக்கள் விருப்ப வீரர் குமார் சங்கக்காரஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2013 டயலொக் கிரிக்கெட் விருதுகள் நிகழ்வில் மக்கள் விருப்பத்திற்குரிய வீரர் என்ற விருதினை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டுள்ளார். 

    ஆண்டுக்கான சிறந்த டயலொக் வீரர் என்ற விருதினை ரங்கன ஹேரத் பெற்றுக் கொண்டார். 

    அடுத்த ஐபில் தொடர் இலங்கையில்?

    அடுத்த ஐபில் தொடர் இலங்கையில்?அடுத்த ஐபில் போட்டித் தொடர் அல்லது தொடரின் சில போட்டிகள் இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்தியாவிற்கு வெளியில் இலங்கை அல்லது பங்களாதேஷ் அல்லது இவ்விரு நாடுகளிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்திய லோக்சபா தேர்தல் இடம்பெறவுள்ளதால் ஐபில் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

    லோக்சபா தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் ஓய்வு பெற முடிவு

    உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் ஓய்வு பெற முடிவுஉலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சிறப்புக்குரியவர், ஜமைக்காவின் உசேன் போல்ட். 

    27 வயதான உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் இதுவரை 6 தங்கமும், உலக தடகளத்தில் 8 தங்கம் உள்பட 10 பதக்கங்களும் அள்ளியுள்ளார். 

    100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையும் படைத்துள்ளார். 

    தடகள வரலாற்றில் ஜாம்பவான் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ள உசேன் போல்ட் 2016–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு விடைபெற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். 

    நாளை நடைபெறும் டையமன்ட் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அவர் பிரஸ்செல்ஸ் நகரில் நேற்று அளித்த பேட்டியின் போது கூறியதாவது, 

    2016–ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது திட்டமாகும். நான் நல்ல உடல்தகுதியுடன் இருந்தால், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு சென்று, அதில் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். 

    ஒலிம்பிக்கில் மேலும் தங்கப் பதக்கங்களை வென்றதுடன் ஓய்வு பெறுவதே சரியான தருணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முகமது அலி (குத்துச்சண்டை), பீலே (கால்பந்து) ஆகியோர் போன்று நானும் தலைச்சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினால், ஓய்வு பெறும் வரை தடகளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும். 

    இவ்வாறு போல்ட் கூறினார். 

    இங்கிலாந்திற்கான இலங்கை கிரிக்கெட் தொடர் விபரங்கள் அறிவிப்பு

    இலங்கை அணி, இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்குபற்றவுள்ள கிரிக்கெட் தொடருக்கான விபரங்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

    மே மாதம் இடம்பெறவுள்ள இத்தொடர் 2 டெஸ்ட் போட்டிகளையும் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் ஒரு டுவென்டி டுவென்டி போட்டியையும் உள்ளடக்கியதாகக் காணப்படவுள்ளது.

    2014ஆம் ஆண்டு மே மாதம் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ள இத்தொடர் ஜூன் மாதம் இறுதிவரை இடம்பெறவுள்ளது.
    இத்தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளன.

    கடந்த முறை இலங்கை அணி, இங்கிலாந்திற்கு இருநாட்டு கிரிக்கெட் தொடருக்காகச் சென்றிருந்தபோது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போராடி 0 - 1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததுடன், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 2 - 3 என்ற கணக்கில் இழந்திருந்தது,

    போட்டி அட்டவணை:

    ஒற்றை டுவென்டி டுவென்டி போட்டி: மே 20 - தி ஓவல்
    1ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: மே 22 - தி ஓவல்
    2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: மே 25 - டர்ஹாம்
    3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: மே 28 - ஓல்ட் ட்ரபோர்ட்
    4ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: மே 31 - லோர்ட்ஸ்
    5ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: ஜூன் 3 - எட்ஜ்பஸ்ரன்

    முதலாவது டெஸ்ட் - ஜூன் 12 - 16 - லோர்ட்ஸ்
    இரண்டாவது டெஸ்ட் - ஜூன் 20 - 24 - ஹெடிங்லீ

    புளோரிடா கடலை நீந்தி கடந்து 64 வயதான நீச்சல் வீராங்கனை சாதனை

     புளோரிடா கடலை நீந்தி கடந்து 64 வயதான நீச்சல் வீராங்கனை சாதனை அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார்.

    177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார். 

    சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார். 

    1978-ம் ஆண்டுமுதல் 4 முறை தோல்வியை தழுவிய 64 வயதான டயானா நையத் கடைசியாக 5-வது முறையாக முயற்சித்து வெற்றிபெற்றுள்ளார். 

    கரையேறிய இவரை நூற்றுக்கணக்கானோர் ஆராவாரத்துடன் வரவேற்றனர். 

    அப்போது, ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள், வயதை கருத்தில் கொள்ளாதீர்கள், விளையாட்டு சிந்தனையை இது வளர்க்கும் என்று சாதனையாளர் டயானா கூறினார். 

    கடலில் நீத்துகிறபோது சுறா மற்றும் ஜெல்லி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிகான் முகமூடியை அணிந்துகொண்டார். இந்த சாதனையை முடிக்க அவருடன் 35 உதவியாளர்களும் சென்றனர். 
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info