Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label இலங்கை. Show all posts
    Showing posts with label இலங்கை. Show all posts

    பொது இடத்தில் மது அருந்தலாம்: நீதவான்





    பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு  உள்ளதென பூகொட நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான இந்திக கலிங்கவன்ஸ  புதன்கிழமை நீதிமன்றில் கூறினார்.

    மதுவருந்திவிட்டு நடந்து திரிபவர்களை iது செய்ய முடியாது. பிழையான முறையில் நடந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தால் மட்டுமே அவர்களை கைது செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

    பொது இடத்தில் மது அருந்தியமைக்காக நீதிமற்றில் ஆஜர் செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை விடுதலை செய்துவிட்டே நீதவான் இந்திக கலிங்கவன்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது

    இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள தரப்படுத்தல்படி பாராளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
    தரவரிசையில் இரண்டாம் இடத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாம் இடத்தை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் பெற்றுள்ளனர்.
    நான்காவது இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் சஜித் பிரேமதாஸ 5ஆம் இடத்திலும் புத்திக பத்திரண 6ஆம் இடத்திலும் அஜித் பி.பெரேரா 7ஆம் இடத்திலும் சுஜீவ சேனசிங்க 8ஆம் இடத்திலும் சுனில் ஹந்துனெத்தி 9ஆம் இடத்திலும் 10ஆவது இடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் உள்ளனர்.
    தமிழ்- முஸ்லிம் கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 40ஆவது இடத்திலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 84ஆவது இடத்திலும் உள்ளனர்.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் 55ஆவது இடத்திலும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா 54ஆவது இடத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதின் 68ஆவது இடத்திலும் உள்ளனர்.
    இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் 166ஆவது இடத்திலும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஸ்ணன் 133ஆவது இடத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் 205ஆவது இடத்திலும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் 168ஆவது பிரஜைகள் முன்னணி செயலாளர் நாயகம் ஸ்ரீரங்கா 57ஆவது இடத்திலும் உள்ளனர்.
    ஏனைய தமிழ்- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பிடித்துள்ள இடங்களும் வருமாறு.

    ஏ.எச்.எம்.அஸ்வர் –  16ஆவது இடம்
    எம்.ஏ.சுமந்திரன் –  31ஆவது இடம்
    எஸ்.சிறிதரன் –  33ஆவது இடம்
    சந்திரகுமார் முருகேசு –  39ஆவது இடம்
    பாக்கியசெல்வம் அரியனேத்திரன் –  44ஆவது இடம்
    ஆர்.யோகராஜன் –  47ஆவது இடம்
    ஹுனைஸ் பாருக் –  87ஆவது இடம்
    பொன்னம்பலம் செல்வராசா –  92ஆவது இடம்
    டி.எம்.சுவாமிநாதன் –  93ஆவது இடம்
    மொஹமட் ஹிஸ்புல்லாஹ் –  94ஆவது இடம்
    எஸ்.யோகேஸ்வரன் –  103ஆவது இடம்
    சுரேஸ் பிரேமச்சந்திரன் –  104ஆவது இடம்
    விநாயகமூர்த்தி முரளிதரன் –  106ஆவது இடம்
    செல்வம் அடைக்கலநாதன் –  120ஆவது இடம்
    ஈ.சரவணபவன் –  123ஆவது இடம்
    சிவசக்தி அனந்தன் –  128ஆவது இடம்
    அப்பாத்துரை விநாயகமூர்த்தி –  137ஆவது இடம்
    சில்வஸ்திரி எலன்டின் –  138ஆவது இடம்
    மாவை சேனாதிராஜா –  139ஆவது இடம்
    பி.ராஜதுரை –  147ஆவது இடம்
    ஹசன் அலி –  171ஆவது இடம்
    அப்துல் காதர் –  172ஆவது இடம்
    விஜயகலா மகேஸ்வரன் –  179ஆவது இடம்
    எம்.எஸ்.தவுபிக் –  191ஆவது இடம்
    எம்.எம்.ஹாரிஸ் –  192ஆவது இடம்
    ஏ.எச்.எம்.பௌசி –  197ஆவது இடம்
    எச்.எம்.ஹலீம் –  198ஆவது இடம்
    வினோ நோகராதலிங்கம் –  200ஆவது இடம்
    பைசர் முஸ்தபா –  203ஆவது இடம்
    பசீர் சேகுதாவூத் –  206ஆவது இடம்
    பைசல் காசிம் –  216ஆவது இடம்
    ஆறுமுகன் தொண்டமான் –  218ஆவது இடம்

    தரப்படுத்தல்படி இறுதி 225ஆவது இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    உலக சூழல் தினம் - 2014

    ஐக்கிய நாடுகள் சபையினால் வருடந்தோறும்ஜுன் மாதம் 05 ஆம் திகதி சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சூழல் தினமானது "காலநிலை மாற்றமும் சிறிய தீவுகளும்" என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

    ஜனாதிபதி மஹிந்தவுக்கு கௌரவ கலிபா விருது

    ஜனாதிபதி மஹிந்தவுக்கு கௌரவ கலிபா விருதுபஹரெயின் இராச்சியம் தனது நாட்டின் உயர் கௌரவ விருதான கலிபா பதக்கத்தை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு நேற்று (28) வழங்கி கௌரவித்தது. 

    பஹரெயின் இராச்சியத்துடனான நட்பு இருதரப்பு தொடர்புகள் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் என்பவற்றை மிக உயர்ந்த நிலையில் வைப்பதற்கு தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முயற்சியை பாராட்டும் முகமாக ஜனாதிபதிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக பஹரெயினின் ஹமாத் பின் இசா அல் - கலிபா மன்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். 

    அல் - கலிபா விருது 1940ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து 1970 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அது மீண்டும் செயலூக்கப்படுத்தப்பட்டது. 

    காலஞ்சென்ற ஷேக் இசா பின் சல்மான் அல் - கலிபா எமிர் மனிதாபிமானத்தின்பொருட்டு ஆற்றிய அர்ப்பணிப்புள்ள சேவையை பாராட்டுவதற்காக இவ்விருது ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இவ் விருது சவுதி அரேபிய மன்னர், மலேசிய பிரதம அமைச்சர். இரண்டாவது எலிசபெத் மகாராணி உள்ளிட்ட தலை சிறந்த தலைவர்கள் சிலருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. 

    விருதை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ தான் கௌரவத்திற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளேன் எனத் தெரிவித்தார். பஹரெயின் இராச்சியத்துடன் மிக விரிவானதும் கௌரவமானதுமான கூட்டுப் பங்காண்மையை கட்டியெழுப்புவதற்கு நாம் எதிர்பார்த்திருக்கின்றோம் 

    உங்களுடைய கருணைமிக்க சொற்கள் தன்னிகர் இல்லாத விருந்தோம்பல் அமோகமான செயற்பாடுகள் நிச்சயமாக செயலூக்கமுள்ள ஒத்துழைப்பாக மாறுகின்ற இந்த உத்தியோகபூர்வ விஜயம் எனக்கும் எனது தூதுக் குழுவுக்கும் என்றும் நினைவில் பதிந்திருக்கும் நினைவுச் சின்னமாக திகழும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். 

    புத்தரை பச்சை குத்திய பெண் வெளியேறினார்


    புத்தரின் உருவத்தை கையில் பச்சைகுத்தியவாறு இலங்கைக்கு வந்த பிரித்தானிய பெண் பிரஜை, சற்றுமுன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

    கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அவர் லண்டன் நோக்கிப் புறப்பட்டார் என விமான நிலைய தகவல்கள் உறுதி செய்தன.

    சுற்றுலாச் சபையினால் அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் தான் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்பதை பிரித்தானியாவுக்குச் சென்றே தீர்மானிப்பதாகவுத் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் சுற்றுலாச் சபை தலையிட்டது. என்னுடைய பிரச்சினை நீதிமன்றம் போக வேண்டிய பிரச்சினையல்ல. என்னுடைய அனுபவம் வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது' என்றும் அப்பெண் தெரிவித்தார் என ஏ.எப்.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

    ஜ.நாவின் சிறந்த ஓவியத்திற்கான பரிசு இலங்கை மாணவிக்கு

    இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறுவர் ஓவியப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவி ஒருவரின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

    இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அவருக்கும், அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கான விமான பயணச் செலவும் வழங்கப்படும். 

    ஐநா சபையின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் உலகு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

    இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத் தலைப்பாக வீணாகும் உணவும் பூமிப்பந்தின் பாதுகாப்பும் என்கிற தலைப்பு அறிவிக்கப்பட்டது. உணவை பாதுகாப்பீர், அதன் மூலம் பூமியை பாதுகாப்பீர், உணவை விரயம் செய்வது உலகை விரயம் செய்வதாகும் என்பது இந்த ஆண்டுக்கான மையக்கருத்தாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இதை முன்னிட்டு உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சிறார்களுக்கான ஓவியப்போட்டி ஒன்றை, ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பும், ஜப்பானில் இருக்கும் உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்பும் நிக்கான் நிறுவனமும் இணைந்து நடத்தின. இந்த போட்டி பிரிவுக்கு மொத்தம் 63,700 ஓவியங்கள் குவிந்தன. 

    இதில் இலங்கையைச் சேர்ந்த எட்டு வயதுடைய கந்தகே கியாரா செனுலி பெரேரா வரைந்த ஓவியம் இந்த போட்டியின் நடுவர்களை பெரிதும் கவர்ந்து சிறப்பான ஓவியமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 

    குறித்த ஓவியத்தில் சிறார்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளை கூட்டாக சேர்ந்து ஒரு பெரிய உண்டியலில் சேமிப்பதைப்போல வரையப்பட்டிருக்கிறது. 

    தான் சிறுவயது முதலே உண்டியலில் நாணயங்களை சேமிக்கும் பழக்கம் உடையவர் என்று தெரிவித்திருக்கும் கியாரா, தனது அந்த பழக்கத்தை அப்படியே காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உணவு உண்டியலில் சேமிப்பதன் மூலம் இந்த பூஉலகை பாதுகாக்க முடியும் என்பதை விளக்கும் வகையிலான இந்த ஓவியத்தை வரைந்ததாக தெரிவித்தார். 

    இந்த ஓவியம் மூலம், உலக சிறார்களெல்லாம் சிறு எறும்புகளைப்போல் உணவை சேமித்தால், எதிர்காலத்தில் இந்த பூவுலகை நாம் பாதுகாக்க முடியும் என்பதை இந்த ஓவியம் மூலம் சொல்ல விரும்புவதாகவும் கியாரா கூறுகின்றார். 

    அவரது இந்த ஓவியமும் மற்ற பிராந்தியங்களில் தேர்வு செய்யப்பட்ட ஓவியங்களும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படுவதோடு, ஐநா சபையின் சுற்றுசூழல் அமைப்பு, உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் இணைய பக்கங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும். 

    இதன் அடுத்தகட்டமாக, இவரது இந்த ஓவியம், மேற்காசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா மற்றும் அமெரிக்க பிராந்தியங்களில் தேர்வாகியிருக்கும் மற்ற சிறுவர்களின் ஓவியங்களுடனான இரண்டாம் கட்ட போட்டியில் பங்கேற்கும். 

    அந்த போட்டியில் வெல்லும் ஓவியம் சுற்றுசூழல் பாதுகாப்புக்கான சிறுவர்கள் வரைந்த உலக அளவிலான மிகச்சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்படும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஓவியத்துக்கு இரண்டாயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அந்த ஓவியத்தை வரைந்த சிறாருக்கும் அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்குமான விமான பயணச் செலவும் வழங்கப்படும். 

    இலங்கையின் மின்பாவித்த கூறுகளுக்கான புதிய கட்டன விபரம் SRI LANKA NEW ELECTRICITY BILL UNIT PRICE TABLE

    ஐந்தாவது T20 உலக கிண்ணம் இலங்கை வசம்

    ஐந்தாவது T20 உலக கிண்ணம் இலங்கை வசம் ஐந்தாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 

    இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

    இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

    இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

    இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் குலசேகர, மத்தியூஸ், ஹேரத், மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். 

    பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது. 

    இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

    இலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் 20க்கு இருபது போட்டிகளில் இருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

    இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து (2009 மற்றும் 2012) கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி இம்முறை அபாரமாக துடுப்பெடுத்தாடி கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. 

    இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் நாயகனாக இந்திய அணி வீரர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


    இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து

    இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இலங்கை அணி வீரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


    க.பொ.த சா/த பரீட்சை முடிவுகள் சற்று முன் வெளியாகின

    2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் சற்று முன் இணையத்தில் வெளியிடப்படுள்ளன. முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிடலாம்

    மெரிக்க தீர்மானம் வெற்றி: பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம்

    இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை நிறைவேற்றம்! ஐ.நா. மனித உரிமை பேரவையின் 25ஆவது அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
     
    பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

    பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் 
    1. ஆஜென்டினா 
    2. அமெரிக்கா 
    3. பிரித்தானியா 
    4. பொட்ஸ்வானா 
    5. பிரேஸில் 
    6. சிலி 
    7. கொஸ்டாரிகா 
    8. கோர்டிவோரின் 
    9. செக்குடியரசு 
    10. எஸ்தோனியா 
    11. பிரான்ஸ் 
    12. ஜேர்மன் 
    13. அயர்லாந்து 
    14. இத்தாலி 
    15. மெக்சிகோ 
    16. மொன்டிநீக்ரோ 
    17. பெரு 
    18. கொரியா 
    19. ருமேனியா 
    20. மாக்கடோனியா 
    21. சியாரா லியோன் 
    22. பெனின் 
    23. ஒஸ்ரியா 


    பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் 
    1. அல்ஜீரியா 
    2. சீனா 
    3. கொங்கோ 
    4. கியூபா 
    5. கென்யா 
    6. மாலைத்தீவு 
    7. பாகிஸ்தான் 
    8. ரஷ்யா 
    9. சவூதி அரேபியா 
    10. ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 
    11. வெனிசூலா 
    12. வியட்னாம் 


    வாக்களிப்பில் பங்குபற்றாத நாடுகள்
    1. புருக்கினோ பாசோ 
    2. எத்தியோபியா 
    3. காபன் 
    4. இந்தியா 
    5. இந்தோனேஷியா 
    6. ஜப்பான் 
    7. கஸகிஸ்தான் 
    8. குவைத் 
    9. மொரோக்கோ 
    10. நமீபியா 
    11. பிலிப்பைன்ஸ் 
    12. தென்னாபிரிக்கா
     

    ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நாளை ஆரம்பம்

    மட்டக்களப்பு மாவட்டத்தில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்துக்கென நடைபெறும் விசாரணைகளின் முதலாவது அமர்வு இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகிறது.

    மட்டக்களப்பில் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் செயற்பட்டதன் அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தன. 

    20ஆம் திகதி முதல் 22ஆம்திகதி வரையில் நடைபெறும் இவ் அமர்வில், 20ஆம் திகதி ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும். 21ஆம்திகதி கோரளைப்பற்று வடக்கு- வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான் ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் கிரானிலுள்ள றெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

    அத்துடன், 22ஆம்திகதி மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

    மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1100 வரையான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்டளவானவையே விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    அதே நேரம், குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு யாரும் இல்லை என்ற அடிப்படையில் அவர்களது உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் கூட ஆணைக்குழுவுக்கு முறையிட முடியும்.

    காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு 1990 - 2009ஆம் ஆண்டு கால அசாதாரண சூழ்நிலையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகிறது. 

    எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தன்னுடைய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இந்த  இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில்,  தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச,  பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோர் அடங்குகின்றனர்.

    இந்த கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை நேரடியாக விசாரணை செய்யும் நடவடிக்கைகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இவை தொடர்பான அறிக்கையை இந்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில் சமர்ப்பிக்கும்.

    ஞாயிறு, போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

    ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிவரையிலும் பௌர்ணமி (போயா) தினங்களிலும் பிரத்தியே தனியார் வகுப்புகளை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

    இதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து ஆளுநர்களுக்கும், முதலமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


    மேற்படி விடயம் உள்ளடக்கப்பட்ட அறிவித்தல் கடிதங்கள், பிரதமர் தி.மு.ஜயரத்னவினால் கைச்சாத்திடப்பட்டு மேற்கண்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

    கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

    கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று மாலை 4.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
    11 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கொட்டாவ-கடுவெல அதிவேக நெடுசாலை ஜனாதிபதியின் ஆலோசனையுடன் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் உள்நாட்டு பொறியியலாளர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
     
    இவ்வீதியில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என  நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 
    கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்து 3.3 கிலோமீட்டர் நீளமுடைய மகாவெள பாலம் இலங்கையின் மிகப்பெரிய பாலம் மற்றும் மேம்பாலமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
    மேல்மாகணத்திலிருந்து நாளொன்றுக்கு மில்லியன் கணக்கானோர் கொழும்பு நகருக்கு பயணிக்கின்றனர். இதனால் தினந்தோறும் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதனைக்கு குறைக்கும் முகமாக இப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

    அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிகளுக்கு நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் விபரம் கோரப்படுகின்றது

    கிழக்கு மாகாண சபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிகளுக்கு நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

    கிழக்கு மாகாணசபையினால் அண்மையில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர். 

    இதில் தமிழர்கள் மிகக் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் அதுவும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

    இதன் போது நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் எதிர்கால நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்களது தகவல்கள் எதிர்வரும் 2014.03.09ம் திகதி மாலை 04.00 மணிமுதல் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் சேகரிக்கப்பட உள்ளது.

    எனவே குறித்த நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மேற்குறிப்பிட்ட விண்ணப்பம் தொடர்பில் தங்களது தகவல்களை காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் விண்ணப்பதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    பல்லின கலாசார பண்புகளை வாழ வைக்கும் தேசத்தின் மகுடம்

    குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்ற செயல் திட்டம் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

    தூக்குத்தண்டனை ரத்து ஆயுள் தண்டணையாக மாற்றம் மாநில அரசு விடுதலை செய்யலாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
    இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்துள்ளது.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பு:
    ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய முவரின் சீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் அடங்கிய அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
    சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர்.
    இருப்பினும், இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ஐ பயன்படுத்தி 3 பேரையும் சிறையில் இருந்து மாநில அரசு விடுவிக்கலாம் என பரிந்துரைத்தனர்.
    நீதிபதிகள் கருத்து:
    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் சீராய்வு மனு மீதான விசாரணையில் மத்திய அரசு முன் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ரத்து செய்ததாக அறிவித்தது.
    இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்: “தூக்கு தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவரும் அறிவர்” என்றனர்.
    நீதிபதிகள் நம்பிக்கை:
    இனி வருங்காலங்களில் கருணை மனுக்கள் மீதான முடிவு காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
    அது மட்டும் அல்லாது, கருணை மனுக்கள் மீதான முடிவை தேவையில்லாமல் காலம் தாழ்த்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு அவ்வப்போது மத்திய அரசும் அறிவுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    வழக்கின் பின்னணி:
    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.
    கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
    இந்நிலையில், இன்று மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Facebook கின் காரணமாக தற்கொலை செய்த வெனுஷா இமந்தி. உண்மையில் நடந்தது என்ன?

    Photo: தற்கொலையுண்ட இளந்தளிரின்
நெஞ்சுருக்கும் கதை!

கடந்த 05-02-2014 அன்று முகநூலின் காரணமாக குருநாகல் பாடசாலையொன்றின் சாதாரண தரத்தைச்சேர்ந்த வெனுஷா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டமைக்கான உண்மைக்காரணம் என்ன என்பதை அவரது கைப்பட எழுதிய மூன்று பக்கங்களைக்கொண்ட கடிதமொன்று மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. படிக்கும்போதே நெஞ்சுருக்கும் அக் கடிதத்தின் தமிழ் வடிவம் கீழே! இதைப் படித்தபின் நீங்களே சொல்லுங்கள் அவளின் தற்கொலைக்கான காரணம் முகநூல்தானா என்று!

"அப்பாவுக்கு..
 இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக
என்னை மன்னியுங்கள். நான்
குற்றமெதுவும் செய்யாமல்
எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க
வைக்க என்னால் முடியாது.
தவறு என்று நான் செய்ததென்றால் 7
ஆம் ஆண்டில்
ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த
அந்தத் தவறை மட்டும் ஏற்றுக்
கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB
யில் இட்டவரையும், அந்த
ஃபோட்டோவை எனக்கு டேக்
செய்தவரையும் விட்டுவிட்டு ஏன்
என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்?
இன்று நான் என்னுடைய
ஒன்றுமறியாத
அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச்
சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப்
பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க
வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய
அப்பா அவ்வாறான ஏச்சுப்
பேச்சுக்கு ஆளாகக் கூடாது.
எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில்
வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில்
யாருக்குமே புரிவதில்லை.
அதற்கிடையில் எங்கேயோ போகும்
ஒன்றுக்காக
எனது அப்பாவை அவமானப்படுத்த
வேண்டிய தேவை எனக்கில்லை.
இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர்.
அவர் எதுவுமே தெரியாமல்
என்னை நோக்கி மாத்திரம்
விரலை நீட்டுவது ஏன் என எனக்குத்
தெரியவில்லை. 5000 பிள்ளைகள்
முன்பு, கூட்டத்தில்
வைத்து மேடைக்கு அழைத்துத்
திட்டினார். ஒரு பையனோடு படம்
பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார்.
நான்
போகவில்லை என்பதை எனது தங்கையும்,
அக்காவும் அறிவார்கள்.
இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த
போதும் கூட நான் மிகவும்
பொறுமையாக இருந்தேன். இனிமேலும்
என்னால் இயலாது.
 எனது வகுப்பாசிரியர் பண்டார,
வகுப்பைப் பொறுப்பேற்கும்
அன்று எனது எல்லா வேலைகளையும்
விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன்.
அப்படியெல்லாம் செய்த என் மீது வீண்
பழி சுமத்துகிறார்கள். இந்தப்
பாடசாலைக்காக பாடுபடுவதுதான்
எனது மிகப் பெரும் தவறு.
பாடசாலையில் ஏதேனும் போட்டிகள்,
விழாக்களின் போது நான்
நடனமாடாமல் இருந்தால்தான்
ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர
ஆசிரியை,
ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும்.
எனது அப்பாவுக்கும், பண்டார
ஆசிரியருக்கும் இனியும் கவலைகள்
தர என்னால் முடியாது. நான்
இன்று செய்யப் போகும் காரியத்தால்
ஏனைய பிள்ளைகளுக்கு இம்
மாதிரியான கீழ்த்தரமான வேலைகள்
நடக்காமலிருக்கும் என எனக்குத்
தோன்றுகிறது.
 சில ஆசிரியர்கள்
பிரச்சினையொன்று வரும்போது எனது
குடும்பத்தை இழுக்கிறார்கள். நான்
இங்கு சொல்வது யார்
குறித்து என்பது என் அப்பாவுக்குத்
தெரியும். நான் இன்னும் உயிருடன்
இருந்து, இந்தப் பாடசாலையில் 'வேசி'
எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L
பரீட்சையைக் கூட என்னால்
ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப்
பிள்ளைகள் சிறியதொரு தவறைச்
செய்தால் அப் பிள்ளைகளை 'வேசி'
எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள்.
பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள்
வரும்போது யார் சரி, யார்
தவறு என்பதைத் தேடிப் பாருங்கள்.
எல்லா அவப் பெயர்களையும்
எனக்கும், என்
தங்கைக்குமே கூறுகிறார்கள்.
எனது பாடசாலையில் 50%
மானவர்களுக்கு நண்பர்கள்
இருக்கிறார்கள். அவையெல்லாம்
அதிபருக்குத் தெரியாது. நாங்கள்
சொல்வதும் இல்லை. அதனால்தான்
எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள்.
நான் எனது அப்பாவை மிகவும்
நேசிக்கிறேன். எவருடைய முன்பும்
நின்று 'எனது மகள் செய்த
தவறுகளுக்கு மன்னித்துக்
கொள்ளுங்கள்' என அவர்
மன்றாடுவதை நான் விரும்பவில்லை.
என்னை பாடசாலையிலிருந்து விலக்க
ிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார்.
நாங்கள்
நல்லதை மாத்திரமே செய்தபோதும்,
போட்டிகளிலெல்லாம் வென்றபோதும்
எமக்கு நற்பெயரெதுவும்
சூடவில்லை. ஆனால்
தவறொன்று செய்தவிடத்து முழுப்
பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம்
சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும்.
பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என
அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம்
ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால்
பாடசாலைக்குப் போக முடியாது.
கமகே ஆசிரியரும் கூட நான்
நடத்தை கெட்ட பிள்ளை எனக்
கூறினார். நான் அப்பொழுதெல்லாம்
கூட எனது O/L பரீட்சைப்
பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல
நடத்தையை அவர்களுக்குக் காட்டத்
தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும்
இப்பொழுது அதிகம்
தாமதமாகி விட்டது. இனி செய்ய
ஏதுமில்லை.
 பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள்
இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர்
மாத்திரமே இந்தப் பாடசாலையில்
எனது திறமைகளைப் பற்றிக் கூறிப்
பாராட்டியவர்கள்.
பிரபா ஆசிரியையிடம்
சென்று எனது பிரச்சினைகளைக்
கூறி ஆறுதல் தேடியபோது, நான்
நன்றாக பரீட்சையில் சித்தியெய்த
வேண்டுமென எண்ணியிருந்தேன்.
ஆனால் என் கனவுகள் எல்லாம்
அழிந்து போயின. என்னால்
இப்பொழுது O/L
பரீட்சை தவிர்த்து அடுத்த
ஜென்மத்தில் எந்த இடம்
கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க
இயலவில்லை.
 அப்பா, நீங்கள் என்னுடைய பேரில்
இருக்கும் காணியை உங்கள்
பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
நானில்லாமல் போனால் உங்களைக்
கவனித்துக் கொள்ள ஆளிருந்தால்
அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம்
இருப்பதால்தான் உங்களுடன்
இருப்பவர்களெல்லாம் கூட
இருக்கிறார்கள். பணம் இல்லாமல்
போன நாளில் உங்களுடன் யாரும்
இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க
இடமளிக்கக் கூடாது. இறுதியான,
இறுதியான இந்தக் கணத்திலும் கூட
எனக்குத் தென்படுவதெல்லாம்
எனது அப்பாவின் கண்களிரண்டும்
மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப்
போவது மிகுந்த கவலையைத்
தருகிறது. முடியுமென்றால்
தங்கையையும் அந்தப்
பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள்.
அந்த அதிபர்
இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம்
காட்டுவார்.
 அம்மா, நான் உங்களையும் மிகவும்
நேசிக்கிறேன். அம்மா என்னுடன்
இன்று இன்னும் கதைக்காததற்குப்
பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள்.
என்னுடைய அக்காவைத்தான் இந்த
இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள
முடியவில்லை. நீங்களும் இருக்கும்
இடத்தில் சந்தோஷமாக இருங்கள்.
என்னுடைய அப்பாவை கவனித்துக்
கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய
நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார்.
 நானில்லாமல் போனால் உங்களுடைய
பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள்
அப்பா? எழுத எழுத
எனக்கு எனது இதயத்தில்
கவலை அதிகரித்துக்
கொண்டே வருகிறது. அடுத்த
ஜென்மத்திலும் கூட ஆறுதல்
கிடைக்காமல் போகும்.
 என்னைப் போல தவறிழைக்காத
பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள்.
அவர்களையும்
பாடசாலையிலிருந்து விலக்கி விடப்
பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான்
இத் தீர்மானத்தை எடுத்தேன்.
 I love my family
 நான்
எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.
 இங்கு என்னைப் பார்த்தவுடன்,
பண்டார ஆசிரியருக்கு முதலில்
தெரிவியுங்கள்."தற்கொலையுண்ட இளந்தளிரின் நெஞ்சுருக்கும் கதை!

    கடந்த 05-02-2014 அன்று முகநூலின் காரணமாக குருநாகல் பாடசாலையொன்றின் சாதாரண தரத்தைச்சேர்ந்த வெனுஷா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டமைக்கான உண்மைக்காரணம் என்ன என்பதை அவரது கைப்பட எழுதிய மூன்று பக்கங்
    களைக்கொண்ட கடிதமொன்று மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. படிக்கும்போதே நெஞ்சுருக்கும் அக் கடிதத்தின் தமிழ் வடிவம் கீழே! இதைப் படித்தபின் நீங்களே சொல்லுங்கள் அவளின் தற்கொலைக்கான காரணம் முகநூல்தானா என்று!

    "அப்பாவுக்கு..
    இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக
    என்னை மன்னியுங்கள். நான்
    குற்றமெதுவும் செய்யாமல்
    எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க
    வைக்க என்னால் முடியாது.
    தவறு என்று நான் செய்ததென்றால் 7
    ஆம் ஆண்டில்
    ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த
    அந்தத் தவறை மட்டும் ஏற்றுக்
    கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB
    யில் இட்டவரையும், அந்த
    ஃபோட்டோவை எனக்கு டேக்
    செய்தவரையும் விட்டுவிட்டு ஏன்
    என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்?
    இன்று நான் என்னுடைய
    ஒன்றுமறியாத
    அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச்
    சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப்
    பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க
    வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய
    அப்பா அவ்வாறான ஏச்சுப்
    பேச்சுக்கு ஆளாகக் கூடாது.
    எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில்
    வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில்
    யாருக்குமே புரிவதில்லை.
    அதற்கிடையில் எங்கேயோ போகும்
    ஒன்றுக்காக
    எனது அப்பாவை அவமானப்படுத்த
    வேண்டிய தேவை எனக்கில்லை.
    இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர்.
    அவர் எதுவுமே தெரியாமல்
    என்னை நோக்கி மாத்திரம்
    விரலை நீட்டுவது ஏன் என எனக்குத்
    தெரியவில்லை. 5000 பிள்ளைகள்
    முன்பு, கூட்டத்தில்
    வைத்து மேடைக்கு அழைத்துத்
    திட்டினார். ஒரு பையனோடு படம்
    பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார்.
    நான்
    போகவில்லை என்பதை எனது தங்கையும்,
    அக்காவும் அறிவார்கள்.
    இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த
    போதும் கூட நான் மிகவும்
    பொறுமையாக இருந்தேன். இனிமேலும்
    என்னால் இயலாது.
    எனது வகுப்பாசிரியர் பண்டார,
    வகுப்பைப் பொறுப்பேற்கும்
    அன்று எனது எல்லா வேலைகளையும்
    விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன்.
    அப்படியெல்லாம் செய்த என் மீது வீண்
    பழி சுமத்துகிறார்கள். இந்தப்
    பாடசாலைக்காக பாடுபடுவதுதான்
    எனது மிகப் பெரும் தவறு.
    பாடசாலையில் ஏதேனும் போட்டிகள்,
    விழாக்களின் போது நான்
    நடனமாடாமல் இருந்தால்தான்
    ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர
    ஆசிரியை,
    ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும்.
    எனது அப்பாவுக்கும், பண்டார
    ஆசிரியருக்கும் இனியும் கவலைகள்
    தர என்னால் முடியாது. நான்
    இன்று செய்யப் போகும் காரியத்தால்
    ஏனைய பிள்ளைகளுக்கு இம்
    மாதிரியான கீழ்த்தரமான வேலைகள்
    நடக்காமலிருக்கும் என எனக்குத்
    தோன்றுகிறது.
    சில ஆசிரியர்கள்
    பிரச்சினையொன்று வரும்போது எனது
    குடும்பத்தை இழுக்கிறார்கள். நான்
    இங்கு சொல்வது யார்
    குறித்து என்பது என் அப்பாவுக்குத்
    தெரியும். நான் இன்னும் உயிருடன்
    இருந்து, இந்தப் பாடசாலையில் 'வேசி'
    எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L
    பரீட்சையைக் கூட என்னால்
    ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப்
    பிள்ளைகள் சிறியதொரு தவறைச்
    செய்தால் அப் பிள்ளைகளை 'வேசி'
    எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள்.
    பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள்
    வரும்போது யார் சரி, யார்
    தவறு என்பதைத் தேடிப் பாருங்கள்.
    எல்லா அவப் பெயர்களையும்
    எனக்கும், என்
    தங்கைக்குமே கூறுகிறார்கள்.
    எனது பாடசாலையில் 50%
    மானவர்களுக்கு நண்பர்கள்
    இருக்கிறார்கள். அவையெல்லாம்
    அதிபருக்குத் தெரியாது. நாங்கள்
    சொல்வதும் இல்லை. அதனால்தான்
    எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள்.
    நான் எனது அப்பாவை மிகவும்
    நேசிக்கிறேன். எவருடைய முன்பும்
    நின்று 'எனது மகள் செய்த
    தவறுகளுக்கு மன்னித்துக்
    கொள்ளுங்கள்' என அவர்
    மன்றாடுவதை நான் விரும்பவில்லை.
    என்னை பாடசாலையிலிருந்து விலக்க
    ிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார்.
    நாங்கள்
    நல்லதை மாத்திரமே செய்தபோதும்,
    போட்டிகளிலெல்லாம் வென்றபோதும்
    எமக்கு நற்பெயரெதுவும்
    சூடவில்லை. ஆனால்
    தவறொன்று செய்தவிடத்து முழுப்
    பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம்
    சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும்.
    பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என
    அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம்
    ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால்
    பாடசாலைக்குப் போக முடியாது.
    கமகே ஆசிரியரும் கூட நான்
    நடத்தை கெட்ட பிள்ளை எனக்
    கூறினார். நான் அப்பொழுதெல்லாம்
    கூட எனது O/L பரீட்சைப்
    பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல
    நடத்தையை அவர்களுக்குக் காட்டத்
    தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும்
    இப்பொழுது அதிகம்
    தாமதமாகி விட்டது. இனி செய்ய
    ஏதுமில்லை.
    பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள்
    இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர்
    மாத்திரமே இந்தப் பாடசாலையில்
    எனது திறமைகளைப் பற்றிக் கூறிப்
    பாராட்டியவர்கள்.
    பிரபா ஆசிரியையிடம்
    சென்று எனது பிரச்சினைகளைக்
    கூறி ஆறுதல் தேடியபோது, நான்
    நன்றாக பரீட்சையில் சித்தியெய்த
    வேண்டுமென எண்ணியிருந்தேன்.
    ஆனால் என் கனவுகள் எல்லாம்
    அழிந்து போயின. என்னால்
    இப்பொழுது O/L
    பரீட்சை தவிர்த்து அடுத்த
    ஜென்மத்தில் எந்த இடம்
    கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க
    இயலவில்லை.
    அப்பா, நீங்கள் என்னுடைய பேரில்
    இருக்கும் காணியை உங்கள்
    பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
    நானில்லாமல் போனால் உங்களைக்
    கவனித்துக் கொள்ள ஆளிருந்தால்
    அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம்
    இருப்பதால்தான் உங்களுடன்
    இருப்பவர்களெல்லாம் கூட
    இருக்கிறார்கள். பணம் இல்லாமல்
    போன நாளில் உங்களுடன் யாரும்
    இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க
    இடமளிக்கக் கூடாது. இறுதியான,
    இறுதியான இந்தக் கணத்திலும் கூட
    எனக்குத் தென்படுவதெல்லாம்
    எனது அப்பாவின் கண்களிரண்டும்
    மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப்
    போவது மிகுந்த கவலையைத்
    தருகிறது. முடியுமென்றால்
    தங்கையையும் அந்தப்
    பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள்.
    அந்த அதிபர்
    இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம்
    காட்டுவார்.
    அம்மா, நான் உங்களையும் மிகவும்
    நேசிக்கிறேன். அம்மா என்னுடன்
    இன்று இன்னும் கதைக்காததற்குப்
    பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள்.
    என்னுடைய அக்காவைத்தான் இந்த
    இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள
    முடியவில்லை. நீங்களும் இருக்கும்
    இடத்தில் சந்தோஷமாக இருங்கள்.
    என்னுடைய அப்பாவை கவனித்துக்
    கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய
    நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார்.
    நானில்லாமல் போனால் உங்களுடைய
    பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள்
    அப்பா? எழுத எழுத
    எனக்கு எனது இதயத்தில்
    கவலை அதிகரித்துக்
    கொண்டே வருகிறது. அடுத்த
    ஜென்மத்திலும் கூட ஆறுதல்
    கிடைக்காமல் போகும்.
    என்னைப் போல தவறிழைக்காத
    பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள்.
    அவர்களையும்
    பாடசாலையிலிருந்து விலக்கி விடப்
    பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான்
    இத் தீர்மானத்தை எடுத்தேன்.
    I love my family
    நான்
    எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.
    இங்கு என்னைப் பார்த்தவுடன்,
    பண்டார ஆசிரியருக்கு முதலில்
    தெரிவியுங்கள்."

     இலங்கையில் கடந்த வாரம் Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள்  இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.
    10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து ‘வேசி’ எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.
    தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.
    தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
    உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் ‘அதிபர்’ என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.
    # உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.
    # எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.
    # 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.
    # பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.
    சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள். “எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது” இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்?

    தந்தையுடன்..
    venusha006gossiplankanews_com
    venusha010gossiplankanews_com
    venusha001gossiplankanews_com
    ds2
    principal-1

     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info