பஹரெயின் இராச்சியத்துடனான நட்பு இருதரப்பு தொடர்புகள் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் என்பவற்றை மிக உயர்ந்த நிலையில் வைப்பதற்கு தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முயற்சியை பாராட்டும் முகமாக ஜனாதிபதிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக பஹரெயினின் ஹமாத் பின் இசா அல் - கலிபா மன்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
அல் - கலிபா விருது 1940ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து 1970 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அது மீண்டும் செயலூக்கப்படுத்தப்பட்டது.
காலஞ்சென்ற ஷேக் இசா பின் சல்மான் அல் - கலிபா எமிர் மனிதாபிமானத்தின்பொருட்டு ஆற்றிய அர்ப்பணிப்புள்ள சேவையை பாராட்டுவதற்காக இவ்விருது ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இவ் விருது சவுதி அரேபிய மன்னர், மலேசிய பிரதம அமைச்சர். இரண்டாவது எலிசபெத் மகாராணி உள்ளிட்ட தலை சிறந்த தலைவர்கள் சிலருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
விருதை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ தான் கௌரவத்திற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளேன் எனத் தெரிவித்தார். பஹரெயின் இராச்சியத்துடன் மிக விரிவானதும் கௌரவமானதுமான கூட்டுப் பங்காண்மையை கட்டியெழுப்புவதற்கு நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்
உங்களுடைய கருணைமிக்க சொற்கள் தன்னிகர் இல்லாத விருந்தோம்பல் அமோகமான செயற்பாடுகள் நிச்சயமாக செயலூக்கமுள்ள ஒத்துழைப்பாக மாறுகின்ற இந்த உத்தியோகபூர்வ விஜயம் எனக்கும் எனது தூதுக் குழுவுக்கும் என்றும் நினைவில் பதிந்திருக்கும் நினைவுச் சின்னமாக திகழும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Post a Comment