Headlines News :
Home » » அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிகளுக்கு நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் விபரம் கோரப்படுகின்றது

அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிகளுக்கு நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் விபரம் கோரப்படுகின்றது

Written By sakara on Friday, March 7, 2014 | 10:30 PM

கிழக்கு மாகாண சபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிகளுக்கு நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

கிழக்கு மாகாணசபையினால் அண்மையில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர். 

இதில் தமிழர்கள் மிகக் குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் அதுவும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

இதன் போது நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் எதிர்கால நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்களது தகவல்கள் எதிர்வரும் 2014.03.09ம் திகதி மாலை 04.00 மணிமுதல் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் சேகரிக்கப்பட உள்ளது.

எனவே குறித்த நியமனம் மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மேற்குறிப்பிட்ட விண்ணப்பம் தொடர்பில் தங்களது தகவல்களை காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் விண்ணப்பதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info