மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக செலான் வங்கியின் அனுசரணையுடன் வின்சன்ட் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய வாசிகசாலை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகல் திறந்து வைக்கப்பட்டது.
வின்சென்ற்தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனுடையதாக முன்னெடுப்பதற்கு இவ் வாசிகசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு செலான் வங்கி நகரக்கிளையின் முகாமையாளர் திருமதி பத்மசிறி இளங்கோ தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட செலான் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் கலாநிதி நிரஞ்சன் பத்மநாதன் திறந்து வைத்தார். அத்துடன், செலான் வங்கி கிழக்குப் பிராந்திய முகாமையாளர் சிவஞானி முத்துத்தீஸ்ச மற்றும் வங்கியின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
செலான் வங்கியினால் 2இலட்சம் ரூபா பெறுமதிமிக்க வாசிகசாலை உபகரணங்கள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
சமூகத்தின் மத்தியில் வங்கியின் உறவை மேம்படுத்தும் நோக்கில் 2061ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள சமூக குடும்பப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் இந்த வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதர்கும்.
இத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை ரீதியில் செலான் வங்கியினால் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு நகரக்கிளைக்கு ஊடாக 6 பாடசாலைகளில் இவ்வாறான வாசிக சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நேரம், சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக நேற்றைய தினம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித சிசிலியா தேசியப்பாடசாலை, கல்லடி உப்போடை விவேனாகந்தா மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றில் 3 சிறுவர் சேமிப்பு நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் தேசிய கூடைப்பந்தாட்ட அணியின் தலைவி தர்ஜினி சிவலிங்கமும் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு நகரக்கிளையினால் இதுவரை 5 சிறுவர் சேமிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

Post a Comment