Headlines News :
Home » » 2014 யூன் வருமான நிலுவைகளை சேகரிக்கும் மாதமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனம்

2014 யூன் வருமான நிலுவைகளை சேகரிக்கும் மாதமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனம்

Written By சித்தேஸ் on Tuesday, June 3, 2014 | 6:22 AM

2014 யூன் மாதத்தினை வருமான நிலுவைகளை அறவீடு செய்யும் மாதமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகரத்தின் எல்லைக்குட்பட்ட சகல வட்டாரத்திலும் சோலை வரி நிலுவையும் வியாபார மற்றும் வரிகளுமாக சுமார் ரூபா 100 மில்லியன் உள்ளது.

இதன் முதற்கட்டமாக வரியிறுப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்க துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையினை ஆணையாளர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

1ம் வாரம் (02.06.2014 – 07.06.2014)
மக்களை விழிப்பூட்டும் நிகழ்வு

2ம், 3ம் வாரம் (09.06.2014 – 20.06.2014)
வீடு வீடாகவும் வியாபார நிலையங்களுக்கும் நிலுவை உள்ளவர்களிடம் அறவீடு செய்தல்

4ம் வாரம் (23.06.2014 – 28.06.2014)
ஆதனவரி நிலுவைகள் அதிகமாக உள்ள பிரதேசங்களில் மாநகர கட்டளைச்சட்டம் 252வது பிரிவிற்கிணங்க வரியிறுப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக வரி செலுத்த தவறியிருப்பின் அவரது வீட்டில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடுக்கட்டு நடவடிக்கை மூலம் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டு நிலுவை அறவீடு செய்யப்படும்.

அதேவேளை தொடர்ச்சியாக 10 வருடமாக 10 வீத கழிவுடன் வரி செலுத்திய வரியிறுப்பாளர்களை பாராட்டி கௌரவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info