Headlines News :
Home » , » முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியில் தப்பிச்செல்ல முடியாது: உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியில் தப்பிச்செல்ல முடியாது: உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

Written By Unknown on Sunday, October 13, 2013 | 10:19 PM

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானை விட்டு வெளியில் எங்கும் தப்பிச்செல்ல முடியாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் அலிகான் கூறியுள்ளார். அந்நாட்டு சட்டத்துறை அவர் மீதான வழக்குகள்,விசாரணைகள் குறித்து ஆய்வு செய்யுமாறும், ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறும் அறிவுறுத்தியது நாட்டை விட்டு வெளியில் செல்ல தடை செய்யப்பட்டோர் பட்டியலில் 70 வயதான முஷாரப்பின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவு இல்லாமல், அவரால் எங்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. அண்மையில் வெளிநாடு செல்லவிருந்த அவர் வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info