Headlines News :
Home » , » ஆறு மாதங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட கொம்மாதுறை பெண்ணின் மாமனார் கைது

ஆறு மாதங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட கொம்மாதுறை பெண்ணின் மாமனார் கைது

Written By MARIMUTHTHAN on Tuesday, March 4, 2014 | 6:11 AM

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம் பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.


இளம் பெண்ணொருவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டு உறுகாமம் கித்துள் காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

கொம்மாதுறைக் கிராமத்தைச் சேர்ந்த சுதாசங்கர் ஜனனி (வயது18) என்பவரே படுகொலை செய்யப்பட்டு காட்டில் போடப்பட்டிருந்தவராகும்.

இவரது தாயார் மத்திய கிழக்கில் பணிப் பெண்ணாகச் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இக்கொலை தொடர்பாக கொல்லப்பட்ட பெண்ணின் மாமன் முறையான ஏ. சின்னத்தம்பி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், நேற்றைய தினம் சந்தேக நபரை வாகநேரிப் பகுதியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info