Headlines News :
Home » , » மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதல் இடம்

மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதல் இடம்

Written By sakara on Tuesday, October 1, 2013 | 4:36 AM

இன்று வெளியாகிய 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 193 புள்ளிகளை; பெற்று மாவட்ட மட்டத்திலும் மற்றும் வலைய மட்டத்திலும் மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை முண்ணணியில் திகழ்கின்றது.

பல்வைத்தியர் முரளிதரன் மனைவி ஆயுள்வேத வைத்தியர் காயத்திரி ஆகியோரின் புதல்வியான கவிலாஷனா என்ற மாணவியே 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார்;

பரீட்சைக்கு தோற்றிய 89 மாணவர்களில் 41 பேர் சித்திபெற்றுள்ளனர் இது 46 வீதமாகும்.

4 மாணவர்கள் 72 – 100 புள்ளிகளைப் பெற்ற நிலையில் மற்றைய 37 மாணவர்களும் 100க்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.

இதேவேளை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம் மாணவி சதாசிவம் தனுசிக்கா 191 புள்ளியைப் பெற்று பாடசாலையை மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கல்லடி இராமகிருஷ்ண வித்தியாலயம் 190 பள்ளியை பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தைப்பெற்றுள்ளது.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info