Headlines News :
Home » , , » செங்கலடி மத்திய கல்லூரி புவியியல் கண்காட்சி

செங்கலடி மத்திய கல்லூரி புவியியல் கண்காட்சி

Written By AKSHAYAN on Tuesday, November 12, 2013 | 6:51 PM

செங்கலடி மத்திய கல்லூரியில் புவியியல் கண்காட்சி ஒன்று நேற்றைய தினம் (12.11.2013)  சிறப்பாக நடைபெற்றது.   இக்கண்காட்சியை  பிரதீபா பிரபா விருது பெற்ற ஆசிரியை திருமதி ஜெயசக்தி புவீந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். 


இந்நிகழ்வில் செங்கலடிக் கோட்டக் கல்வி அதிகாரி திரு சிவகுரு அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் ,  ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குறித்த ஆசிரியை 2008 ஆம் ஆண்டு பாடசாலையில் ஆசிரியிப் பணியினை ஆரம்பித்து 2009-2011 ஆண்டு காலப்பகுதிகளில் மூன்று வகுப்பறை மட்டக் கண்காட்சியினையும், இவ்வருடம் பாடசாலை மட்டக் கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. 

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த ஆசிரியைக்கும், இதில் பல திறப்பட்ட காட்சிப் பொருட்களை வைத்திருந்த மாணவர்களுக்கும், இவ்வாறான நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், பிரதி அதிபர், மற்றும் ஏனை ஆசிரியர்களுக்கும் பழைய மாணவர் சங்கம் தனது பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

(தகவல், படங்கள் :பழைய மாணவர் சங்கம்)


















Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info