அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர். இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது.
இவ்விழாவில், பிரிகேடியர் சண்முகநாதன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இராணுவ வீராங்கணைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார்.கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் 16 பேரும், மட்டக்களப்பில் 15 பேரும், அம்பாறையில் 5 பேரும் இப்பயிற்சிநெறியை நிறைவு செய்துள்ளனர்.
Post a Comment