Headlines News :
Home » » மட்டக்களப்பில் திருத்தப்படாத பாலங்கள் - மக்களின் அவலநிலை

மட்டக்களப்பில் திருத்தப்படாத பாலங்கள் - மக்களின் அவலநிலை

Written By Exams on Tuesday, September 17, 2013 | 9:46 PM

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மகிழவெட்டவான் வீதியில் உள்ள கரவெட்டிப் பாலம் சேதடைந்ததினால் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.
கரவெட்டிக் கிராமத்துக்க அடுத்துள்ள இப் பாலம் சேதமடைந்ததினால் மகிழவெட்டவான நரிப்புல்தோட்டம் நெல்லூருக்கான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.
இப் பாலம் சேதமடைந்ததினால் மட்டக்களப்பில் இருந்து கரவெட்டி ஊடாக மகிழவெட்டவான் நரிப்புல்தோட்டம் செல்லும் பயணிகள் போக்குவரத்து பஸ் கரவெட்டியுடன் திரும்புவதால் இப் பகுதிக்குச் செல்லும் மக்கள் கரவெட்டியில் இறங்கி பல மைல் தூரம் நடந்து செல்லவேண்டியுள்ளதுடன் இப் பகுதிக்கு பஸ் ஊடாக பாடசாலை செல்லும் ஆசிரியர்கள் பாடசாலை செல்வதிலும் பலத்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதே வேளை தற்போது பெரும் போகச் செய்கைக்கான வயல் பண்படுத்தும் வேலை ஆரம்பித்துள்ள நிலையில் இப் பகுதியில் உள்ள ஆயிரக் கணக்கதான வயல்நிலங்களை பண்படுத்த உளவு இயந்திரங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆயித்தியமலை சுற்றிவர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ் வீதியினால் தற்போது வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துவிச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் செல்ல முடிகின்றது.
இப் பகுதி மக்களின் போக்குவரத்து நலன் கருதியம் விவசாயச் செய்கையினை உரிய காலத்திற்கு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தினை உணர்ந்தும் இப் பாலத்தினை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info