திருமதி அனந்தி எழிலன் அவர்களின் பாதுகாப்பும் ,தமிழ் பெண்களின் தலைமைத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் அனந்தி அவர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டுமென கிழக்குவாழ் தமிழ் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
|
| திருமதி.அனந்தி எழிலன் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்களாகிய நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.
அவர் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட பங்கு வகித்தவர் என்ற வகையிலும் தமிழ் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்தின் புதிய பரினாமமாக தற்போது அவர் தோற்றம் பெற்று இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார் என்பதை கருத்தில் கொண்டு அனந்தி அவர்களுக்க வட மாகாணசபையில் அமைச்சுப்பதவி ஒன்று வழங்கப்பட வேண்டு மென்ற நியாயமான கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் முன்வைக்கின்றோம்.
மிக முக்கியமாக அனந்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெண்கள் தலைமைதுவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அனந்தி அவர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண்கள் தலைமைத்துவம்மற்றும் இளைஞர் தலைமைத்துவம் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள இக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளித்து வடமாகாணசபை தேர்தலில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற திருமதி.அனந்தி எழிலன் அவர்களுக்கு அமைச்சுப்பதவி ஒன்றை வழங்குமாறு கிழக்கு வாழ் தமிழ் சமூகத்தினராகிய நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
-நன்றி-
கிழக்குவாழ் தமிழ் சமூகம்
திருகோணமலை
|
அனந்திக்கு அமைச்சுப்பதவி வழங்கவும். கிழக்கு மக்கள் கோரிக்கை.
Written By sakara on Tuesday, September 24, 2013 | 7:31 AM
Labels:
இலங்கை
Post a Comment