Headlines News :
Home » » கிழக்குப் பல்கலைக் கழக வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா.

கிழக்குப் பல்கலைக் கழக வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா.

Written By sakara on Sunday, September 29, 2013 | 12:15 AM

கிழக்குப் பல்கலைக் கழக வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா.
(மா.சசி)
கிழக்கு பலக்லைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கான பட்டத சான்றிதழ்கள் நேற்று (28.9.2013) வழங்கி வைக்கப்பட்டன.
2010, மற்றும் 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு இந்த பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த வைபவம் கிழக்கு பலக்லைக்கழக வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு பலக்லைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ஏ.அன்ரோ தலைமையில் நடைபெற்ற இந்த பட்ட சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கிழக்கு பல் கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பட்ட சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்த வைபவத்தில் கிழக்கு பலக்லைக்கழகத்தின் பதிவாளர் எம்.மகேசன்,மற்றும் பீடாதிபதிகாளன டாக்டர் எஸ்.சுதர்சன், மற்றும் பேராசிரியர் எம்.செல்வராசா, டாக்டர் கே.ரி.சுந்தரேசன். திருமதி டாக்டர் எஸ்.வினோபா திருகோணமலை வளாகத்தின் தகவல் தொழிநுட்ப விரிவாக்க கற்கைகளுக்கான பீடாதிபதி எஸ்.ரகுராம், கிழக்கு பலக்கைல்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணி;பபாளர் கலாநிதி பிறேம்குமார். உட்பட சிரேஸ்ட உதவி பதிவாளர் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
கலைப்பிரிவு பட்டதாரிகள் 34 பேருக்கும், வர்த்தக முகாமைத்துவம் பட்டதாரிகள் 19பேருக்கும், வர்த்தக பட்டதாரிகள் 02பேருக்கும்,திருகோணமலை வளாகத்தில் கற்கை நெறியை பூர்த்தி செய்த விஞ்ஞான முகாமைத்துவ பட்டதாரிகள் 22 பேருக்கும் திருகோணமலை வளாகத்தின் கலைப்பிரிவு பட்டதாரிகள் 10பேருக்கும் இதன் போது பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info