வடமாகாணசபை தேர்தல் நடந்து முடிந்ததும் காணி , பொலிஸ் அதிகாரங்களைக் கோரும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் அரசியல் போராட்டம் ஆரம்பமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்தது .
கூட்டமைப்பின் அரசியல் போராட்டத்திற்கு இந்தியாவும் அமெரிக்காவும் தமது ஆதரவை வழங்கி அதனை சர்வதேச மயப்படுத்தும் என்றும் அவ் இயக்கம் மேலும் தெரிவித்தது .
இது தொடர்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண சபை தேர்தல் முடிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை ஆரம்பிக்கும் .அதன்போது அரசாங்கத்தால் எதனையுமே செய்ய முடியாத நிலைமை உருவாகும் .கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் வடமாகாண சபையில் தமக்கு காணி , பொலிஸ் அதிகாரங்கள் தேவை என்ற பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றுவார்கள் .
நிறைவேற்றப்பட்ட அப்பிரேரணை வடமாகாண ஆளுநருக்கு அனுமதி கோரி அனுப்பி வைக்கப்படும் . ஆனால் , ஆளுநர் அதற்கு அனுமதி வழங்கமாட்டார் . இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மீண்டும் அப்பிரேரணையை கூட்டமைப்பினர் வடமாகாண சபைக்கு கொண்டு வந்து நிறைவேற்றுவார்கள் .அதனை மீண்டும் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பிவைப்பார்கள் . ஆனால் ஆளுநர் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் . ஜனாதிபதி அதனை உயர் நீதிமன்றத்திற்கு அரசியலமைப்பு ரீதியான வியாக்கியானம் கோரி அனுப்பிவைப்பார் . அதன்போது உயர் நீதிமன்றம் இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கமைய காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு உள்ளதென்று வியாக்கியானம் வழங்கும் .
அந்த இடத்திலேதான் த.தே. கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான அரசியல் ரீதியான மோதல் வெடிக்கும் . இம்மோதல் ஆரம்பமானதும் இந்தியாவும் அமெரிக்காவும் நேரடியாக தலையிட்டு இப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார் .