அஜீத், நயன் தாரா, ஆர்யா, டாப்ஸி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மிக விரைவில் வெளிவர இருக்கும் ஆரம்பம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.
அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் பாடல்கள் நேற்று காலையும், ட்ரைலர் மாலையிலும் வெளியாகின. இதனால் ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பாடல்களையும் ட்ரைலரையும் ரசித்தனர் அஜீத் ரசிகர்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஆரம்பம் படத்தின் பாடல்கள் நேற்று காலையிலேயே வெளியாகிவிட்டன.
படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் பா விஜய் எழுதியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் துள்ளல் இசையில் அமைந்துள்ளன
அடடா ஆரம்பம் பாடல் எடுத்த எடுப்பிலேயே ஹிட்டாகிவிட்டது. மற்றொரு பாடல் ஸ்டைலிஷ் தமிழச்சியும் ஹிட்தான். மற்ற பாடல்களும் படம் வெளியாவதற்குள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகிவிடும் என இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
Attached Videos
Aarambam Trailer