Headlines News :
Home » » சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

Written By sakara on Wednesday, October 30, 2013 | 3:15 AM

மூன்று சிறுவர்கள் மீது துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் தனியார் வகுப்பு நடத்துவதாக கூறி மூன்று சிறுவர்கள் மீது துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினருமாகிய ... என்பவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தொடர்பாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இவர் கைதுசெய்யப்பட்டு இன்றைய (29.10.2013) தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செங்கலடி பிரதேச செயலகத்தில் பயிற்சி சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றி வரும் திலீப்குமார் என்ற மேற்படி நபர் கடந்த பல வருடங்களாக அறநெறிப் பாடசாலை, சிறுவர்களுக்கான பின்னேர வகுப்பு போன்றவற்றை நடாத்தி வருவதாகவும், மேற்படி இடங்களுக்கு வருகைதரும் சிறுமிகள் மீது இவர் துஸ்பிரயோகத்தில் இடுபட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் குறித்து செங்கலடி பிரதேச செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களது பிரதேச செயலகத்திற்கு பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் சமுர்த்தி முகாமையாளர் பிரிவுக்கு நியமிக்கப்பட்ட மேற்படி நபர் தொடர்பாக செங்கலடி பிரதேசத்தில் இருந்து இரண்டுக்கு மேற்பட்ட சிறுவர் துஸ்பிரயோக புகார்கள் வந்துள்ளதாகவும், இது குறித்து அரசாங்க அதிபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் குறித்த நபரை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
try
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info