Headlines News :
Home » » நஸ்ரியாவுடன் காதலா?: ஜெய் பேட்டி

நஸ்ரியாவுடன் காதலா?: ஜெய் பேட்டி

Written By Unknown on Saturday, October 5, 2013 | 4:23 AM

ஜெய்யும், நஸ்ரியாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நஸ்ரியா ‘நேரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் ரிலீசான ராஜா ராணி படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். ‘திருமணம் எனும் நிக்கா’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.
படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. சென்னையில் நேற்று மாலை ஜெய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நஸ்ரியாவும் நீங்களும் காதலிப்பது உண்மையா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து ஜெய் கூறியதாவது:–
நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். காதல், திருமணம் பற்றியெல்லாம் யோசிக்க நேரம் இல்லை. நான் ஐஸ்வர்யாராயின் ரசிகன். எனது அறையில் அவருடைய படம்தான் இருந்தது. இப்போது யாருடைய படமும் இல்லை. ‘ராஜா ராணி’ படத்தில் என்னுடன் நயன்தாராவும் நஸ்ரியாவும் நடித்தனர். இருவரையுமே எனக்கு பிடித்து இருந்தது. காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
திருமணம் எப்போது நடக்கும் என்பதை கடவுள்தான் முடிவு செய்வார். ராஜா ராணி படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இப்படத்தின் விளம்பரங்களில் என்னை ஒதுக்குவதாக நான் கருதவில்லை. திருமணம் எனும் நிக்கா, நவீன சரஸ்வதி சபதம் படங்களில் இப்போது நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
திருமணம் எனும் நிக்கா இந்து முஸ்லிம் திருமண முறைகள் பற்றிய கதை. சரஸ்வதி சபதம் என்ற பெயரில் உருவான படத்துக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்த்ததால் நவீன சரஸ்வதி சபதம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது காமெடி கதையம்சம் உள்ள படமாகும்.

இவ்வாறு ஜெய் கூறினார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info