இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பயிலுநர் பட்டதாரிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது
ஆறு மாதத்துக்குள் பயிலுநர் பட்டதாரிகளாக நியமனம் பெற்ற அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கூறிய அரசு, ஒரு வருடமும் மூன்று மாதங்கள் கழிந்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது அவர்களுடைய மனங்களை பாதிப்படையச் செய்துள்ளது.
இன்று எத்தனையோ இளம் யுவதிகள் தங்களது திருமண வயதினைக் கடந்தும் திருமண பந்தத்தில் இணைவதற்குக் கூட முடியாத அளவுக்கு அவர்களுடைய நியமனம் அமைந்திருப்பதும் வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல்லாகவே இருக்கின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் அரசின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திலாவது பயிலுநர் பட்டதாரிகளின் நலனில் அக்கறை கொண்டு அதில் கரிசனை காட்ட அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
அப்போது தான் அவர்களது இருண்ட வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நாட்டில் வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.வடக்கு,கிழக்கு மாகாண பட்ட தாரிகள் அரசால் காலாகாலமாக ஏமாற்றப்பட்டும், புறம் தள்ளப்பட்டும் வருகின்றனர். ஆனால் தென்பகுதியைப் பொறுத்தவரை அங்குள்ள பயிலுநர் பட்டதாரிகள் நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்பட் டுள்ளனர்.
ஆனால் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 15 மாதம் கழிந்தும் இதுவரைக்கும் உரியவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஜனநாயக நாட்டின் நடவடிக்கையா என்று எண்ணத்தோன்றுகின்றது.எனவே இனிவரும் காலங்களிலாவது அவர்களின் நலனில் அக்கறை கொண்டு உரிய அதிகாரிகள் செயற்பட வேண்டும்.என்றார்.
Post a Comment