Headlines News :
Home » » இப்படியும் நடக்கின்றது! ஏமாற்றுப் பேர்வழிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

இப்படியும் நடக்கின்றது! ஏமாற்றுப் பேர்வழிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

Written By Unknown on Monday, October 14, 2013 | 12:47 AM


எப்­ப­டி­யெல்லாம் ஏமாற்றி காசு பறிக்க முடி­யுமோ அப்­ப­டி­யெல்லாம் ஏமாற்றி காசு பறிக்கும் கும்பல் இலங்கையில் நிறைந்து போயுள்­ளது.

ஒவ்­வொ­ரு­வரும் புத்­தி­சா­லித்­த­ன­மாக இருந்தால் மாத்­தி­ரமே இவர்க­ளி­ட­மி­ருந்து தப்­பிக்­கொள்ள முடியும். நேற்று நண்­பகல் அளவில் நபர் ஒரு­வ­ருக்குத் தொலை­பேசி அழைப்பு ஒன்று வந்­துள்­ளது.

அதில் பிர­பல தொலைத்­தொ­டர்பு நிறு­வனம் ஒன்றின் பெயரைக் கூறி அதி­லி­ருந்து பேசு­வ­தா­கவும், ஏற்­க­னவே பல தட­வைகள் குறுஞ்­செய்தி அனுப்­பி­ய­தா­கவும், எனினும் தொடர்பு கொள்­ளாத காரணத்தினாலேயே தொடர்பு கொள்­வ­தா­கவும் அதன்­படி ரீலோட் செய்­ததன் கார­ண­மாக ரூபா 500,000 பரிசு கிடைத்­துள்­ள­தா­கவும், எனவே அந்தப் பணத்தை வங்­கியில் வைப்­பி­லிட அடை­யாள அட்­டை போட்டோ கொப்­பி­யையும், வங்கி இலக்­கத்­தையும் அனுப்பி வைக்­கு­மாறும் கோரப்­பட்­டுள்­ளது.

உடனே குறித்த நபர் கேட்­ட­வாறே தனது அடை­யாள அட்டை மற்றும் விப­ரங்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தொலை­பேசி அழைப்பு வந்­துள்­ளது.

அதில் கையில் வெள்­ளைத்தாள் ஒன்றை எடுத்­துக்­ கொள்­ளுங்கள். அதில் பணம் பெற்­றுக்­ கொள்­வற்கு நன்றி தெரி­விப்­ப­தாக எமக்கு கடிதம் ஒன்றை எழுதி உடன் மின்­னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­வேளை, நாங்கள் கொடுக்கும் இலக்­கத்­திற்கு உட­ன­டி­யாக 4200/= ரூபாவை ஈசி கேஷ் மூலம் அனுப்பி வையுங்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் 15 நிமி­டத்தில் அனுப்பி வைத்தால் மாத்­தி­ரமே உட­ன­டி­யாக ரூபா 500,000 பெற்­றுக்­கொள்ள நாம் "பின்" இலக்­கத்தைத் தெரி­விப்போம். நீங்கள் திங்­கட்­கி­ழமை குறித்த வங்­கிக்குச் சென்று பணத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

குறித்த பிர­பல நிறு­வ­னத்தில் மக்கள் தொடர்­பாடல் போன்றே சிங்­க­ளத்­திலும், தமி­ழிலும் பேசப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

எவ்­வா­றெ­னினும், காசு கேட்ட மாத்­தி­ரத்தில் குறித்த நபர் இது ஏமாற்று நாட­க­மென்­பதைப் புரிந்து கொண்டார்.

அத­னைத்­தொ­டர்ந்து ஏற்­கெ­னவே பேசிய இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்­ட­போது எந்­த­வி­த­மான பதி­லையும் காண­வில்லை.

இது போன்று பொலிஸார் முதல் பல­ருக்கு தொலை­பேசி அழைப்புக்கள் வந்துள்ளதாகவும் பலர் ஏமாந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்கள் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமாகும். 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info