Headlines News :
Home » » மட்டு. விகாராதிபதி பிரதேச செயலாளரை தகாத வார்தையால் திட்டி, அரச உடமைகளை உடைப்பு

மட்டு. விகாராதிபதி பிரதேச செயலாளரை தகாத வார்தையால் திட்டி, அரச உடமைகளை உடைப்பு

Written By sakara on Wednesday, November 27, 2013 | 12:32 AM


மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் புகந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி, பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் அவரின் உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (27) காலை பிரதேச செயலகத்துக்குள் சென்று விகாரதிபதி அம்பிட்டிய சுமங்கள தேரர் பட்டிப்பளை பிரதேசத்தில் விகாரை ஒன்றை உடனடியாக பதிவுசெய்து தருமாறு கோரியுள்ளார்.

அதற்கு பிரதேச செயலாளர் நடைமுறை விடயங்கள் உள்ளது. அது தொடர்பில் பரிசீலனை செய்து பதிவுசெய்வதாகவும் உடனடியாக பதிவுசெய்யமுடியாது எனவும் கோரியுள்ளார்.

இதன்போது ஆத்திரமடைந்த தேரர், பிரதேச செயலாளரை கடுமையான தகாத வார்த்தைகளினால் பேசியுள்ளதுடன் அவரது மேசையில் இருந்த பொருட்களை இழுத்து வீசியுள்ளதுடன் தொலைநகல் இயந்திரத்தினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிரதேச செயலக ஊழியர்கள் ஒன்றுகூட தேரர் வெளியேறிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம்,

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி தமது அலுவலகத்துக்கு வருகைதந்து இப்பகுதியில் விகாரை ஒன்றினை பதிவுசெய்துதருமாறு சில ஆவனங்களை காட்டினார். அதுவும் உடனடியாக அந்த பதிவினை செய்துதருமாறும் வலியுறுத்தினர்.

ஆனால் மதத்தலங்களை பதிவுசெய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளது. அதனை ஆராய்ந்து பதிவுசெய்து தருகிறேன் என கூறினேன். இதன்போது கடுமையான வார்த்தை பிரயோகங்களால் என்னை திட்டியதுடன் எனது மேசை மீது இருந்த பொருட்களை இழுத்து தொலைநகல் இயந்திரங்களை உடைத்து சேதப்படுத்தினார்.

இது தொடர்பில் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேரரின் அச்சுறுத்தலைக் கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this post :

+ comments + 1 comments

Anonymous
November 27, 2013 at 12:48 AM

மீண்டும் வன்முறைப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்கு தூண்டும் செயல் இவ்வாறான செயல்களே தமிழரின் போராட்டம் ஆரம்பிக்கக் காரணம்

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info