இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
இசைப்பிரியாவை, கல்லூரி சென்று வரும் குழந்தை என்று கூடச் சொல்லலாம். விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் ஒருத்தியாக தன்னை இணைத்துக் கொண்டதுதான் அவர் செய்த பாவம்.
அந்தக் குழந்தையை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொலை செய்த காட்சியை சேனல் 4 தற்போது வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் பச்சிளம் மகன் பாலச்சந்திரனுக்கு, தன்னைக் கொலை செய்யப் போகின்றனர் என்றுகூட புரிந்துகொள்ள முடியாத பருவம்.
அவன் மார்பில் 5 குண்டுகளைப் பாய்ச்சி கொலை செய்த கொடுமையையும் கண்டு கதறினோம்.
சிங்களர்கள் ஆதிக்க வெறியோடு, ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்கும் கொடுமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய தமிழ் மக்களைப் பொட்டுப் பூச்சிகளாக எண்ணி சிங்களர்கள் சீரழிப்பதை எண்ணி, தமிழகத்தில் உள்ளோர் ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.
ஈழத்தில் நடந்த இன அழிப்பு, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்கள் அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.
இதற்காகச் சர்வதேச கருத்தை ஒன்று திரட்டும் முயற்சியைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்.
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட காட்சிகளைப் பார்த்த பிறகாவது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அரசு, என்ன செய்துவிடப் போகிறது; இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா என்று கருணாநிதி உருக்கமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
Post a Comment