மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய காத்தான்குடி பொலிஸார் நேற்று மாலை குறித்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது விபச்சார விடுதியை நிர்வகித்த பெண்ணும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment