Headlines News :
Home » » ஏழ்மையிலும் சாதித்து மருத்துவ பீடத்துக்கு தெரிவான வாழைச்சேனை மாணவி

ஏழ்மையிலும் சாதித்து மருத்துவ பீடத்துக்கு தெரிவான வாழைச்சேனை மாணவி

Written By sakara on Saturday, December 21, 2013 | 8:28 PM

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி விஞ்ஞான பிரிவில் வாழைச்சேனை -பேத்தாழை பிரதேசத்தில் இருந்து பற்குணராஜா தயானி 1 A ,2B சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 21 ஆவது நிலையினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி உள்ளார். 


மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையில் உயர்தரம் பயின்று பரீட்சைக்கு தோற்றி இருந்தார். 

இவர் ஆரம்பம் முதல் க.பொ சாதாரணம் வரை பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார் சாதாரண தர பரீட்சையில் 8 A, 1C பெற்று பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் முதலிடத்தை பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பரீட்சையில் சித்தி தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவி மிகுந்த குடும்ப கஷ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்ததாகவும் ஆரம்பம் முதல் தனது பெற்றோர் தன்னை வைத்தியராக வேண்டும் என ஆசை பட்டதாகவும், வறிய நிலையிலும் தன்னை கற்பித்ததாகவும் இந்த நிலைக்கு வர உதவிய பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 


Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info