Headlines News :
Home » , » குருக்கள்மடத்தை சேர்ந்த நேசதுரை பிருந்தாபன் சமாதான நீதவானாக நியமனம்

குருக்கள்மடத்தை சேர்ந்த நேசதுரை பிருந்தாபன் சமாதான நீதவானாக நியமனம்

Written By AKSHAYAN on Saturday, December 21, 2013 | 10:14 PM

 மட்டக்களப்பு குருக்கள்மடம் இல.32 கிருஸ்ணன் கோவில் வீதியை சேர்ந்த நேசதுரை பிருந்தாபன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பணிக்காக நீதியமைச்சர் ரவுப் ஹக்கீமினால் மட்டக்களப்பு நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக கடந்த 08.11.2013ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின்படி 26.11.2013ம் திகதி இவருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.


             இந்நியமனத்தின் பிரகாரம் கடந்த 20.12.2013ம் திகதி மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மாவட்டநீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் முன்னிலையில் சத்தியபிரமானம் - உறுதியுரை ஆகியவற்றை செய்து கொண்டார்.

             திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசசெயலகத்தில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் கிழக்குப்பல்கலைக்கழத்தில் கலைமானி பட்டத்தினையும் பெற்றுள்ளதுடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி முதுமானி (சமூகவியல்) பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார். குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழக உறுப்பினராகவும்இ இளைஞர் கழக உறுப்பினராகவும்இ மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும்இ குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய உபசெயலாளராகவும் இஸ்ரீ கிருஸ்ணன் ஆலய சமூக மேம்பாட்டு மையத்தின் முகாமைத்துவ அணி உறுப்பினராகவும் இஅதன் இணையத்தள ஊடகப்பிரிவு பொறுப்பாளராகவும்இ  செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info