குறிப்பாக மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பந்தமாக எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களை கோரியுள்ளனர். அறிமுகமில்லாதவர்களை மற்றும் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை கண்டால் உடன் பொலிசாருக்கு தகவல்தருமாறும் அத்தகையோரை கண்காணிப்புச் செய்வதுடன் எச்சரிக்கையாய் இருக்குமாறும் கோரியுள்ளனர்.
பழைய பொருட்களை கொள்வனவு செய்ய வருவோர் மற்றும் பொருட்களை விற்பனை செய்ய வீட்டுக்கு வருவோர் ஆகியோர் பற்றியும் கவனமாக இருக்குமாறும் கோரியுள்ளனர். அத்துடன் வீட்டில் தனியாகவிருக்கும் பெண்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டிருக்குமாறும் சந்தேகத்திற்கிடமானவர்கள் வீட்டிற்க்கு வருகைதந்தால் கதவைத் திறக்கவேண்டாம் எனவும் விசாரணைக்காக வரும் பொலிசார்சீருடையிலே வருகை தருவர் அவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் அதற்க்கான அத்தாட்சிகளைக் கேட்டால் அவர்கள் வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் நெருக்கமாக அமைந்துள்ள உயர்ந்த மரங்களை அகற்றிவிடுவது சிறந்த பாதுகாப்பானதென்றும் பெண்கள் பிரயாணங்கள் மேற்கொள்ளும் போதும் நகைகள் அணிவதை தவிர்த்துக் கொண்ண வேண்டும் என்றும் பஸ்பிரயாணங்களை மேற்கொண்ளும் போதும் நேருங்கி இடைஞ்சல் விளைவிப்பவர்கள் மீது கவனமாக இருக்குமாறும் சிறுவர்களை தனியே எங்கும் அனுப்ப வேண்டாம் என்றும் குடும்ப அங்கத்தவர்கள் தவிர்ந்த எவருடனும் வெளிய செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் கோரியுள்ளனர்.
விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொலிசார் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பாதசாரிகளும் சாரதிகளும் போக்குவரத்து நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் மஞ்சள் கடவைகளை சரியாக பயன் படுத்துமாறும் இரவில் பயணிக்கும் துவிச்சக்கர வண்டிகளுக்கு வெளிச்ச உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்துமாறும் சமாந்தரமாக பயணிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுள்ளனர்.
Post a Comment