-எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர் கான்
இயற்கை சரித்திரமும் மற்றும் விஞ்ஞான தொல்பொருள் காட்சியகம் மட்டக்களப்பு மாநகர வாசிகசாலை வளாகத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
விஞ்ஞான துறையில் அறிவியல் மற்றும் தேடல்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இக்காட்சியகம் ஒரு களமாக அமையவுள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அறிவையும் மற்றும் செயல்முறைகளையும் எமது துறைசார் கல்வியியலாளர்கள் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 'விஞ்ஞான மாலுமிகள்' அமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிட்சை நிபுணருமான கே.அருள்நிதி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment