வாராந்தம் இரு மணி நேரம் மாநகர சபையின் சகல ஊழியர்களையும் பயன்படுத்தி மாநகர சபைக்குட்பட்ட ஒரு பகுதி முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் நேற்று முதலாவது தூய்மைப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர பகுதியில் இடம்பெற்றது.
சுமார் 150 மாநகர சபை ஊழியர்கள் இதில் பங்கு கொண்டனர். 15 இற்கும் அதிகமான வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
மாநகர பொறியியலாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சுத்தி தொழிலாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
நீண்ட நாட்களாக தூய்மைப்படுத்தப்படாதிருந்த வடிகான்களில் அடைக்கப்பட்டிருந்த மணல் அள்ளப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. நகரத்தின் மத்தியில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு தூய்மை யாக்கப்பட்டமை குறி ப்பிடத்தக்கது.
Post a Comment