Headlines News :
Home » » திருகோணமலையை வந்தடைந்த புத்தகக் கண்காட்சி கப்பல் (படங்கள்)

திருகோணமலையை வந்தடைந்த புத்தகக் கண்காட்சி கப்பல் (படங்கள்)

Written By sakara on Thursday, January 9, 2014 | 6:18 AM

திருகோணமலையை வந்தடைந்த புத்தகக் கண்காட்சி கப்பல் (படங்கள்)
லோகோஸ் ஹோப் என்னும் பெயருடைய உலகின் மாபெரும் நடமாடும் புத்தகக் கண்காட்சி கப்பல், திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது. 

இன்று (9) பிற்பகல் 3 மணியளவில் வந்த இந்தக் கப்பலில், 60 உலக நாட்டைச் சேர்ந்த 400 உதவியாளர்கள் உள்ளனர். 

9 தட்டுக்களைக் கொண்ட இக்கப்பலில் 5000 வகையான புத்தகங்களும் உள்ளன என இதன் இணைப்பாளர் கிறிஸ்தோகோபர் தெரிவித்தார். 

இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் ஆவார். எதிர்வரும் 16ம் திகதி வரை குறித்த கப்பல் திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் தங்கியிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் வௌ்ளிக்கிழமை காலை இது தொடர்பான வைபவம் ஆரம்பமாகவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info