Headlines News :
Home » » கூழாவடியில் வாகன கராச்சில் தீ விபத்து –வான் உட்பட பல பொருட்கள் எரிந்து சேதம்(படங்கள் இணைப்பு)

கூழாவடியில் வாகன கராச்சில் தீ விபத்து –வான் உட்பட பல பொருட்கள் எரிந்து சேதம்(படங்கள் இணைப்பு)

Written By sakara on Wednesday, January 8, 2014 | 5:13 PM

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடியில் உள்ள வீடு ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் (கராச்சி)ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த வான் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று இரவு 7.30மணியளவில் கூழாவடி ,மூன்றாம் குறுக்கில் உள்ள ஜோசப் செல்லர் என்பவரின் வீட்டில் உள்ள வாகன தரிப்பிடத்திலேய இந்த தீ விபத்து சம்பம் இடம்பெற்றதுள்ளது.

இதன்போது தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் மற்றும் ஒரு துவிச்சக்கர வண்டி மற்றும் மூன்று மின்பிரப்பாக்கிகள் முற்றாக எரிந்துள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்வம் நாசகார செயலா மின் ஒழுக்கினால் ஏற்பட்டதா என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்துக்காரணமாக பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவ நேரம் வீட்டில் தனது மகள் மட்டும் இருந்ததாகவும் வாகன தரிப்பிடத்தில் தீப்பிடித்துள்ளதை கண்டு அயலவர்களை அழைத்தபோது தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.







Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info