மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுப் பொருட்களைக் கொண்டு கூட்டுப்பசளை தயாரிக்கப்படுகின்றது.
சேகரிக்கப்படும் உக்கக்கூடிய கழிவுப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கைப் பசளையில் எந்தவிதமான இரசாயன நச்சுக்கலப்பற்ற பசளையை பயிர்களுக்கு இடும் போது உணவுப்பயிர்கள் சுகாதாரமிக்கதாகவும் செழிப்பாகவும் வளர்கின்றன.
இவ் உயிரியல் உரங்களை பாவிப்பதன் மூலம் பயிர்களிலிருந்து கிடைக்கும் தானியங்ளை மனிதர்கள் உண்ணும் போது உடலிற்கு எந்தவிதமான தீங்குகள் இல்லை.
நாளாந்தம் சராசரியாக 80 மெட்ரிக் தொன் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு திருப்பெருந்துறையில் உள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடப்படுகின்றன.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை எனும் இடத்தில் அமைந்துள்ள இக்கூட்டுப் பசளை தயாரிப்பு நிலையத்தில் மாதாந்தம் 1000 கிலோ பசளை உற்பத்தி செய்யப்டுகின்றன. இதற்காக 4 வேலையாட்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பசளை ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விசேட பசளை கிலோ 150 ரூபாவிற்கும் விற்பனைசெய்யப்படுகின்றன.
வேறுபிரிக்கப்படும் கழிவுகளில் உள்ள மீள்சுழற்சிக்குரிய பிளாஸ்டிக், தகரம், காட்போட் என்பன வேறுபிரிக்கப்பட்டு உற்பத்தி செய்யும் கம்பனிகளுக்கு விற்பனைசெய்யப்படுகின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியின் கீழ் நெக்டப் திட்டத்தினால் அமுல்படுத்தப்பட்ட இத் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலைய கூட்டுப்பசளை தயாரிப்பு நிலையம் கடந்த 2011 முதல் இயங்கி வருவதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
Post a Comment