Headlines News :
Home » » படுவான்கரை மக்களே காணிகளை வேற்று இனத்தவர்களுக்கு விற்காதீர்கள் - யோகேஸ்வரன் எம் பி.

படுவான்கரை மக்களே காணிகளை வேற்று இனத்தவர்களுக்கு விற்காதீர்கள் - யோகேஸ்வரன் எம் பி.

Written By sakara on Wednesday, February 19, 2014 | 2:55 PM

படுவான்கரை மக்கள் எமது காணிகளை விற்பதாயின் எமது மக்களுக்குத்தான் விற்க வேண்டும் என்பதை எங்கள் சமூகம் உரு கோட்பாடாக கொண்டுவர வேண்டும். பணத்தை அதிகமான தருகின்றார்கள் என்பதற்கான வேற்று இனத்தவர்களுக்கு விற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்
தமிழ் சமூகத்தினை எவ்வளவுக்கு அழிக்கலாமோ அவ்வளவுக்கு அழிக்க இவ்வராசாங்கம் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் எங்கையோ கொடுக்க வேண்டிய சாராய விற்பனைப் பத்திரத்தை நமது மாவட்டத்திற்கு வழங்குகின்றது. இங்கே உள்ள சில அரச அரசியல்வாதிகள் சாராய விற்பனை அனுமதிப் பத்திரத்தை வழங்கி இங்கேயே சாராய கடை அமைக்க உதவி செய்து வருகின்றார்கள்.
இதனால் பெற்றோர்கள் அவற்றில் மூழ்கிக் கொண்டிருக்கின்றார். அவைகள் கூட எங்களைப் பாதிக்கின்றது. மட்டக்களப்பிலே ஒரு நாளை 89 ஆயிரம் மதுபான போத்தல்கள் பாவிக்கப்படுகின்றது என்றார்.
மட்டக்களப்பு பன்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் பொ.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ம.அரியதாஸ், வலய பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், நாகர் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வாரன்!
தற்போதைய காலத்திலே இந்த இல்ல விளையாட்டுப் போட்டி அனைத்து இடங்களிலும் அடிக்கடி நடாத்த வேண்டிய ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் முன்பு இங்கே இருக்கின்ற வயல்களில் வேளான்மை வெட்டி சூடு அடிக்கின்றவர்களாக நாங்கள் இருந்தோம் ஆனால் இப்போது அவைகள் எல்லாம் மாறி இயந்திரத்தை கொண்டு வந்து வயல்களில் இறக்கி இயந்திரங்கள் மூலமே அவற்றைச் செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து விட்டோம்.
இதனால் எங்களிடம் உடல் ரீதியான இயக்கங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றது. எங்களுக்கு உடற்பயிற்சி இல்லை. இந்த உடற்பயிற்சி இன்மை காரணமாக எங்களுக்கு வியாதிகளான சக்கரை வியாதி, பிறசர், கொலஸ்றோல் போன்ற பல வியாதிகள் உருவாகி விட்டது.
இந்த நிலைமைக்கு காரணம் எங்களது உணவுப் பழக்க பழக்கமும், உடற்பயிற்சி இன்மையுமே காரணமாக இருக்கின்றது. இப்போது உணவுப் பழபக்கத்தில் நஞ்சைப் சாப்பிடுகின்றோம். இதற்கு இப்போது எமக்கு உடற்பயிற்சி தேவை. எங்களுடைய மூலையில் கிரகிக்கும் தன்மை இந்த உணவப் பழக்க வழக்கங்களினால் குறைந்து கொண்டே செல்கின்றது. உணவுகளுக்கு இரசாயனப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டே இருக்கின்றோம். இவற்றின் தாக்கத்தில் இருந்து எம்மைப் பாதுகாக்க கட்டாயம் உடற்பயிற்சி தேவையாக உள்ளது.
ஒரு காலத்திலே எமது மண் கல்வியில் உயர்ந்திருந்தது. மட்டக்களப்பு என்ற பெயர் உலகமும் முழுவதும் பரவியது சுவாமி விபுலானந்தர் கல்வியில் முதலாவது தமிழ் பேராசிரியராக திகழ்ந்தார். விஞ்ஞான துறையிலே கல்வி கற்று இந்தியாவின் தமிழ் நாட்டில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதலாவது தமிழ் பேராசிரியராக இருந்து இந்த மட்டக்களப்பு என்கின்ற பெயருக்கு பெருமை சேர்த்தவர்.
இதேபோன்று எமது மண்ணிலே பல கல்வி மான்கள் உதயமானார்கள். ஆனால் தற்போது எங்களது கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே விளையாட்டில் மாத்திரம் நின்று விடாது கல்வியிலும் முன்னேறிச் செல்லவேண்டும்.
ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி இவை இடையிடேயே உள்ள இடங்கள் இவற்றிற்கு ஒரு வலயம் அமைந்துள்ளது. அது தற்போது கல்வியிலே முன்னேற்றம் கண்டுள்ளது. இதனை நான் குறைகூறவில்லை. உதாரணத்திற்கான கூறுகின்றேன். தொடராக கிராமங்களைக் கொண்ட எங்களாலும் முன்னேற முடியும். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்னேற்றத்திற்கு காரணம் அக்கிராம மக்கள் தமது பிள்ளைகளை கற்பிக்க வேண்டும் என்று காட்டிய ஆர்வம் தான் இதற்கு உதுணையாக இருந்திருக்கின்றது.
பெற்றோர்களின் கவலையினம் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கின்றது. ஆகவே பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் தன்னுடைய பிள்ளை கல்வி கற்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டுமோ அவ்வளவு அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது நமது சமூகத்தில் பெற்றோர்கள் கல்விசார் நூல்களுக்கு பதிலாக பிள்ளைகளின் கைகளில் கைதொலைபேசியைத் தான் கொடுக்கின்றார்கள். அது அவர்களின் கல்விக்கு எதிரியாக மாறிவிடுகின்றது. இவற்றிலிருந்து மாற்றம் ஏற்படுத்தி கல்வியிலே பிள்ளைகளை முன்னெடுத்துச் செல்ல பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ் சமூகத்தினை எவ்வளவுக்கு அழிக்கலாமோ அவ்வளவுக்கு அழிக்க இவ்வராசாங்கம் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. எங்கையோ கொடுக்க வேண்டிய சாராய விற்பனை பத்திரத்தை நமது மாவட்டத்திற்கு வழங்குகின்றது. இங்கே உள்ள சில அரச அரசியல்வாதிகள் சாராய அனுமதிப் பத்திரத்தை வழங்கி பெருந்தொகை நிதியை பெற்றுக் கொண்டு இங்கேயே சாராய கடை அமைக்க உதவி செய்து வருகின்றார்.
எங்களது தமிழ் பெற்றோர்கள் பலர் அவற்றில் மூழ்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் கூட எங்கள் சமூகத்தைப் பாதிக்கின்றது. மட்டக்களப்பிலே ஒரு நாளைக்கு 89 ஆயிரம் மதுபான போத்தல்கள் பாவிக்கப்படுகின்றது.
இதனாலேயே இலங்கையிலே அதிகபடியான மது பாவனையில் உள்ள முதலாவது மாவட்டமாக எமது மாவட்டம் இருக்கின்றது. ஒரு காலத்தில் கல்வியில் முன்னேறிய மாவட்டம் தற்போது மதுபாவனையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த மண்ணிலே இழந்தவற்றை பெற்று வாழவேண்டும் என்றால் அது கல்வியால் தான் முடியும். அந்தக் கல்வியை வளர்ப்பதற்கு நாங்கள் எல்லோரும் முயற்சிக்க வேண்டும். இப்போது எங்களது காணிகளை வேற்று இனந்தவர்கள் எங்களது பகுதியிலே ஊடுறுவி அதிக பணத்தைக் கொடுத்து வாங்குகின்றார்கள்.
படுவான்கரை மக்கள் எமது காணிகளை விற்பதாயின் எமது மக்களுக்குத்தான் விற்க வேண்டும் என்பதை எங்கள் சமூகம் உரு கோட்பாடாக கொண்டுவர வேண்டும். பணத்தை அதிகமான தருகின்றார்கள் என்பதற்கான வேற்று இனத்தவர்களுக்கு விற்க வேண்டாம்.
ஒரு காலத்திலே படுவான்கரையின் சிறப்பு அதன் கால்நடைகளிலே தங்கியிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் மாடு இருந்தது. மாடு என்றால் செல்வம் அதனையே நாங்கள் வீட்டில் வைத்திருந்தோம். அதை வெட்டுவதற்காக வேற்று இனத்தவருக்கு கொடுக்கப்பட்டு தற்போது எமது செல்வம் குறைந்துள்ளது. இவற்றை வெட்டுவதற்கு வழங்கியதனாலேயே நாங்கள் முன்பு பல துன்பங்களை அனுபவித்தோம்.
எங்களை கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் குறைப்பதற்கு பல சதித் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அண்மையிலே சட்டக் கல்லூரித் தெரிவுக்கான பரீட்சை இடம்பெற்றது. இதிலே 66 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் இதில் எமது தமிழர்கள் நான்கு பேரே தெரிவானார்கள்.
175 பேரில் நான்கு பேரே தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். கடந்த வருடம் சிறுபான்மை இனம் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதால் பொதுபலசேனா நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் நிமிர்த்தம் அங்கு 500க்கு மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்;. ஆனால் 240க்கும் 250க்கும் வருடாந்தம் தெரிவு செய்யப்பட்டு வந்த சட்டக் கல்லூரி தெரிவு இவ்வருடம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 175 பேரை எடுத்து இருக்கின்றார்கள்.
இறுதிப்புள்ளி 66ஐ 65ஆக மாற்றியிருந்தால் தமிழர்கள் 20 பேர் இதிலே தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். இவ்வாறே எமது முன்னேற்றம் குறைவடைகின்றது.
கிழக்கு மாகாணத்திலே அண்மையிலே தொழில்நுட்ப பாடத்திற்கான பாடசாலை தெரிவில் ஒரேயொரு தமிழ் படாசாலை தான் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதுவும் திருகோணமலையில் விவேகானந்தா கல்லூரி ஆனால் மட்டக்களப்பிலே எந்த தமிழ் பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லை.
இவ்வேளை பட்டிருப்பு வலயம் என்ற பெயரை வைத்து ஓட்டமாவடி அந்நூர் பாடசாலையை தெரிவு செய்திருந்தார்கள். இஸ்லாமிய பாடசாலை எட்டும், சிங்கள பாடசாலை நான்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கிழக்கு மாகாணத்திலே எங்களுக்கு ஒரே ஒரு பாடசாலையை தெரிவு செய்திருந்தார்கள்.
இவ்விடயமாக நாங்கள் எடுத்த நடவடிக்கையின் நிமிர்த்தம் இங்கு பல பாடசாலைகள் தொழில் நுட்ப பாடநெறிக்கு தெரிவாகியது. இந்த நிலையை சிந்தித்துப் பாருங்கள் எந்த வகையில் எம்மை ஒடுக்கி வருகின்றார்கள் என்று.
அண்மையில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளை தமிழ் பரீட்சார்த்தீகள் பெற்றனர். ஆனால் இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சுமார் 40 சிங்களவர்களும், 15 தமிழர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களும், சிங்களவர்களும் நியமிக்கப்பட விருப்பதுடன், 15 தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்படவுள்ளார்கள். அம்பாறையில் எவரும் நியமிக்கப்படவில்லை. திருகோணமலையில் எந்தத் தமிழரும் நியமிக்கப்படவில்லை. இதுசார்பாக நாங்கள் வழங்கு தொடர்ந்துள்ளோம்.
இன்று எங்களது கல்விமான்கள் இன உணர்வற்று செயற்படுவது கவலையளிக்கின்றது. சிலர் பதவி உயர்வுக்காகவும், பட்டங்களை பெறுவதற்காகவும் எங்களைக் கண்டால் தூர செல்கின்றார்கள். மட்டக்களப்பில் ஒரு நிகழ்வுக்கு சென்ற போது அருகில் இருந்த ஒரு தமிழ் உயர் அதிகாரி தெரிவித்தார் ஐயா உங்களுக்கு அருகில் இருந்ததை யாரும் படமெடுத்தால் எனக்கு சிக்கலாக மாறும் என்று கூறினார். எங்கள் நிலைமையை சிந்தியுங்கள். கல்வியாளர்களை கேட்கின்றோம் பக்கசார்பற்று நீதியாக செயற்படுங்கள் மற்றும் நல்ல அதிகாரியாக செயற்படுங்கள்.
கடந்த காலங்களில் பட்டிருப்பு வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராகவும் பின் மட்டக்களப்பு வலயத்தில் வலய கல்விப் பணிப்பாளராகவும் இருந்த திருமதி.பு.பவளகாந்தன் எதுவித அரசியல் சாயத்துக்கும் உட்படாது சகல அரசியல்வாதிகளையும் மாணவர்கள் நலன்கருதி பயன்படுத்தி தற்போது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது நிருவாகம் ஒரு சிறந்த அதிகாரிக்கு எடுத்துக் காட்டாக இருந்ததை இவ்விடத்தில் கூறி வைக்கின்றேன்.
கல்விமான்கள் அனைவரும் எங்களோடு கைகோர்த்து உதவி செய்தால் எமது இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவது தொலைவில் இல்லை. நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என்று கூற மாட்டோம். எங்களால் முடியுமாவற்றை உங்களுக்கு மேற்கொள்வோம். எங்களது இனத்தின் விடுதலைக்காக எங்களது பயணத்தை வைத்திருக்கின்றோம். அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்களது ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை. ஒரு காலத்தில் எமது இனத்துக்கு இந்நாட்டில் நியாயமான தீர்வுத் திட்டம் கிடைக்கும். இந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வோம் என்று நம்பிக்கை வையுங்கள். கல்வியில் மேன்மையாளவராகவும், தமிழ் உணர்வாளராகவும் உங்களை நீங்கள் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர்களை பெற்றோர்கள் கட்டாயம் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இடைவிலகலில் உள்ள மாணவர்களின் தரவுகளை வழங்கினால் அவர்களுக்கு என்னாலான இயன்ற உதவிகளை வழங்கி அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு இயன்றளவு உதவ தயாராக உள்ளோம்.
அத்தோடு எங்களுக்கு வருடருடத்திற்கு வழங்கப்படுகின்ற ஐம்பது இலட்சம் ரூபாவை வைத்து மாவட்டம் முழுவதும் அனைத்து திட்டங்களுக்கும் ஒதுக்கி வருகின்றோம். இவ்வருடத்திற்கான திட்டத்திலிருந்து ஒரு தொகைப் பணத்தினை பாடசாலையின் முன்னேற்றத்திற்கு வழங்குவேன் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்கின்றேன்; என்றார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info