Headlines News :
Home » » மட்டக்களப்பு மாநகர சபை நூலகங்களின் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றன

மட்டக்களப்பு மாநகர சபை நூலகங்களின் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றன

Written By Exams on Thursday, February 13, 2014 | 7:52 AM


மாநகர சபையின் பணிகள் மாநகர சபை ஆணையாளர் திரு.மா.உதயகுமார் தலைமையில் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில்இ பொது நூலகங்கள்  மற்றும் வாசிகசாலைகளின் சேவைகளை விரிவாக்கும் பல வேலைத்திட்டங்கள் பல துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் பொருட்டு நூலக அபிவிருத்திக் குழு உருவாக்கப்பட்டு அனைத்து நூலகங்களினதும் தற்போதைய நிலை ஆய்வு செய்யபட்டு எதிர்காலத்தில் செய்யப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 29.01.2014ம் திகதி நூலகப் பணியாளர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடாத்தப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு பொது நூலகம் 12.02.2014ம் திகதி ஆணையாளர் திரு.மா.உதயகுமார் தலைமையில் பிரதி ஆணையாளர் திரு.என்.தனஞ்சயன் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள்  ஒன்றிணைந்து முழு மூச்சாகச் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.  இச் செயற்பாட்டின் மூலம் நூலகம் மீளமைக்கப்பட்டதுடன் வாசகர்களுக்கு இலகுவான சேவை வழங்கும் வகையில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இலத்திரனியல் நூலகம் அமைத்தல் அரிதான நூல்களை மீளுருவாக்கம் செய்தல் மட்டக்களப்பின் தனித்துவமான விடயங்களை வேறுபடுத்திப் பேணுவதல் அரசடியில் கற்றல் வள நிலையம் ஒன்றை அமைத்தல் போன்ற செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களும் பொது மக்களும் பொது நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்தி வாசிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வேண்டுகோள் விடுக்கின்றார்.








Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info