Headlines News :
Home » » மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள், மாநகர ஆணையாளர் மா.உதயகுமாருக்கு நன்றி கூறுகின்றார்கள்.

மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள், மாநகர ஆணையாளர் மா.உதயகுமாருக்கு நன்றி கூறுகின்றார்கள்.

Written By sakara on Saturday, February 15, 2014 | 9:44 PM

மட்டக்களப்பு மாநகர சபையின் வரலாற்றில் முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளும் அலுவலகத்திற்குள் வருகை தந்து தங்கள் பிரச்சனைகளைத் தெரிவிக்க ஏதுவாக மாநகர ஆணையாளர் மா.உதயகுமாரால் மற்றுமொரு கட்டமைப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிப் பாதையானது, நேற்றைய தினம் ஆணையாளரால் மாற்றுத்திறனாளிகளின் பாவனைக்காக விடப்பட்டது.
நீண்ட நாள் பழைமை வாய்ந்த மாநகரசபைக் கட்டடத்தில் குறித்த வசதியைப் பயன்படுத்தி தனது நீண்ட நாள் தேவையினை நேரடியாக தெரிவிக்க அலுவலகத்திற்குள் வந்த  மாற்றுத்திறனாளி மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் தனது கருத்துக்களைப் பரிமாறி தேவையை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள்,  மாநகர ஆணையாளர் மா.உதயகுமாருக்கு நன்றி கூறி மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
இவர்களுக்குத் தேவை இரக்கமல்ல, மாறாக அங்கீகாரமும் சமநிலையும் ஆகும்


Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info