மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் நாவற்குடா பொது சுகாதாரப் பகுதியில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 31.03.2014 அன்று மாநகர சபை ஊழியர்களினால் நாவற்குடா பிரதேசத்தில் பாரிய சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கான அறிவித்தல் இன்று (27.03.2014) நாவற்குடா பிரதேசத்தில் ஒவ்வொரு வீடாக வழங்கப்படுகின்றது.
ஆகவே அதற்கு முன்னதாக தாங்கள் தங்களது வீடுச் சுற்றுச் சூழல் மற்றும் வெற்றுக்காணிகளைச் சுத்தம் செய்து கிடைக்கப்பெறும் கழிவுகளை சேகரித்து 31.03.2014ல் காலை 7.00 மணி முதல் நடைபெறவிருக்கும் சிரமதானத்தின் போது மாநகர சபையின் திண்மக்கழிவகற்றும் வாகனத்திற்கு அவற்றை வழங்கும்படி மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Post a Comment